தமிழ்நாடு முன்னாள் முதல்வர் திமுக முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை!
தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. அதற்கான ஒப்புதலை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்த சூழலில் சென்னையில் இன்று 18.08.2024 ஆம் தேதி கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.
கலைவானர் அரங்கில் நடக்கவிருக்கும் அதற்கான விழா ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் இணைந்து விழாவை நடத்துவது போல இருக்க வேண்டும் என அனைத்து அரசியல்கட்சிகளின் தலைவர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பிரதமர் எழுதிய கடிதத்தில் :- முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். பலமுறை மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டவர், அரசியல், இலக்கியம், சமூகப் பணிகளில் முக்கியப் பங்காற்றியுள்ளார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கு அதிகமாகக் குரல் கொடுத்துள்ளார். 2047 ஆம் ஆண்டி ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக கருணாநிதியின் தொலைநோக்குப் பார்வை உதவும்", எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த விழாவை பிரமாண்டப்படுத்தவும், விமர்சையாக நடத்தவும் அரசு உயர் அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளைத் தமிழ் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
அதே சமயம் கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுவதற்கு அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
இந்நிலையில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடச் சென்னை வருகை தந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, சேகர்பாபு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, கலாநிதி விராசாமி, தயாநிதி மாறன், மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் திமுக நிர்வாகிகள் கட்சியின் தொண்டர்கள் எனப் பலரும் உடனிருந்தனர்.
நாணயம் வெளியீட்டு விழா சிறப்பு விருந்தினராகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் பட்டாடை அணிவித்தார்.
இதைக் கேட்டதும் முதல்வர் ஸ்டாலினும், ராஜ்நாத் சிங்கும் சிரித்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவியது
பேசிய ராஜ்நாத் சிங் முதலில் தலைசிறந்த தலைவருக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். அனைவரும் எழுந்து நின்று சில நொடிகள் கைதட்டிய பிறகே அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார். அங்கே பேசிய அவர், "கருணாநிதி மிகச் சிறந்த ஒரு நிர்வாகி.. மத்தியில் வெற்றிகரமான கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி. எத்தனையோ மாநிலக் கட்சிகள் மறைந்து போனாலும் திமுக வலுவாக இருக்கக் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி போட்ட அடித்தளமே காரணம்.கருணாநிதி ஒரு மாநிலத்தின் அரசியல்வாதி இல்லை. தேசத்தின் தலைவராகப் பார்க்கப்பட்டார். பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவைப் பேணி வந்தவர் கருணாநிதி.. மேலும், சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவரும் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி" என்று அவர் பேசினார்.
கருத்துகள்