திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலைப் பகுதி சுற்று வட்டாரங்களில் தொடர்ச்சியாக வனத்துறை மற்றும் காவல்துறையினர்.
கஞ்சா மற்றும் போதைக் காளான் விற்பனை செய்யும் கும்பலைக் கண்டுபிடிக்கத் தீவிரமான சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுகின்றனர். இருந்தாலும் அவர்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும். மேலும் சில தங்கும் விடுதி நிர்வாகங்களே நேரடியாக சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பதாக வந்த அதிர்ச்சித் தகவல் வருகிறது. அதுமட்டுமல்லாமல் போதைக் காளான் விற்பனையும் நடைபெறுவதாகவும், மேலும் மெத்தப்பட்டமைன் எனும் போதைப் பொருட்கள் விற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக போதை வஸ்த்து விற்பனை அதிகரித்து காணப்படுகிறதெனவும்.
அதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்துக் காவல் துறையினர் மலைப்பகுதிகளில் ரோந்துப் பணியிலும், கண்கா
ணிப்பு பணியிலும் ஈடுபடுவதுடன், மேல்மலைக் கிராமங்களில் உள்ள தற்காலிகக் கூடாரம் எனும் டென்ட் ஹவுஸ், டூம் ஹவுஸ், ஏ பிரேம் உள்ளிட்ட தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டு போதைக் காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை காவல் துறை கைது செய்தனர்.
இந்த நிலையில் நேற்று போதை வஸ்துக்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மற்றும் வாங்க முயன்றவர்கள் பத்துக்கும் மேற்பட்ட நபர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மதுமதி தகவல் அளித்தார். அப்போது பேசியவர்," கடந்த ஒரு வருடத்தில் மட்டும் போதைக் காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் மீது 8 கஞ்சா வழக்குகள் மற்றும் 8 போதைக் காளான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 300 கிராம் போதைக் காளான்களும் மற்றும் 3 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் 52 நபர்கள் சிறையில் தண்டனை அனுபவித்திருப்பதாகவும் அதற்கு முன்னதாக 40 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும் மலைப்பகுதியில் போதை காளான் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்த்துகள் விற்பனையில் ஈடுபட்டாலும்,வாங்க முற்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் மேல்மலை கிராமங்களில் போதை வஸ்த்துகள் விற்பனையை தடுக்க காவல் துறை சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என்றும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் அதிகம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களான கலையரங்கம், ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.கொடைக்கானலுக்கு வருகைதரும் சில சுற்றுலாப்பயணிகளிடம் மேஜிக் மஸ்ரூம் என்ற போதைக் காளான் சில ஆண்டுகளாக விற்கப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இவற்றை பயன்படுத்துவோர் குறைந்தது 8 மணி நேரத்திற்கு போதையுடன் இருப்பார்கள் எனவும். வனப்பகுதியில் பூஞ்சையாக முளைக்கும் சில குறிப்பிட்ட வகைக் காளான்களை இங்குள்ளோர் போதைக் காளான் என்கின்றனர். அவற்றை ஆம்லெட், பிரட் உள்ளிட்டவற்றில் கலந்தும் விற்று வந்துள்ளனர். மன்னவனுார், பூண்டி, கவுஞ்சி, வட்டக்கானல் உள்ளிட்ட சில வனப்பகுதிகளில் இவ்வகைக் காளான் கிடைக்கிறதெனவும். இணையதளம் மூலம் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கும் இங்கிருந்து விநியோகம் செய்யப்படுகிறதெனவும், காவல்துறை மற்றும் வனத்துறை போதை காளான் பயன்படுத்துவோர் மீது வழக்குகள் பதிவு செய்தாலும் பயன்பாடு குறைந்தபாடில்லை என்கிறார்கள் பகுதியில் வசிக்கும் மக்கள்
கருத்துகள்