சென்னை உயர் நீதிமன்றத்தின் ஐந்து கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் இன்று பரிந்துரைத்தது. ஐந்து பேரில் மூன்று பேர் பெண் நீதிபதிகள்.
கீழ்க்கண்ட நீதிபதிகள் நிரந்தரமாக்கப்பட்டனர்.
(i) நீதிபதி LC விக்டோரியா கௌரி
(ii) நீதிபதி பிபி பாலாஜி
(iii) நீதிபதி கே.கே. இராமகிருஷ்ணன்
(iv) நீதிபதி இராமச்சந்திரன் கலைமதி
(v) நீதிபதி கே.ஜி. திலகவதி
சென்னை உயர் நீதிமன்றத்தின் கொலீஜியம், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியன்று உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கூடுதல் நீதிபதிகளின் பெயர்களை ஒருமனதாகப் பரிந்துரைத்தது.இந்தப் பரிந்துரையை தமிழ்நாடு முதல்வர் மற்றும் ஆளுநர் இருவரும் ஏற்றுக்கொண்டனர்.
"உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் 26 அக்டோபர் 2017 ஆம் தேதியிட்ட தீர்மானத்தின் படி, இந்தியத் தலைமை நீதிபதியால் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட குழு, மேற்கண்ட பெயரிடப்பட்ட கூடுதல் நீதிபதிகளின் தீர்ப்புகளை மதிப்பிட்டுள்ளது" என்று தீர்மானம் கூறுகிறது.
பரிந்துரை தொடர்பான அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் இந்த ஐந்து நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் மற்றும் பொருத்தமானவர்கள் என்று கண்டறிந்துள்ளது..
கருத்துகள்