கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏற்றம் செல்வதற்கு ரூபாய் ₹5353.95 கட்டணம் நிர்ணயம்.
தெற்கில் உதித்த கைலாயம், ஹிந்துக்களின் புனித ஸ்தலங்களில் ஒன்றாகவே கருதப்படும் வெள்ளியங்கிரி மலை, ஆண்டு தோறும் விரதமிருந்து பல லட்சம் மக்கள் பக்தி சிரத்தையுடன் ஹிந்து மத(பாத) யாத்திரையாக எந்தக் கட்டணமும் இல்லாமல் நடந்து வழிபடச் செல்வது வழக்கம்.
கடுமையான மழை, யானைகள் நடமாட்டம் காரணமாக தை மாதம் முதல் வைகாசி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி.
ஆபத்தான மலைப் பாதையை மேம்படுத்த அரசின் சார்பில் இதுவரை எந்த ஒரு முயற்சியும் எடுக்காத நிலையில் அதிரடியாக இப்பொது அதிக கட்டணம் விதித்து வசூல் செய்ய திட்டமிட்டுது தான் பக்தர்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்கள் விரக்தி அடைந்த நிலை உள்ளது.
இதுவரை ஹிந்துக்கள் மட்டுமே அனுமதிக்கபட்டு வந்தனர், சபரிமலையைப் போலவே இங்கும் பெண்களுக்கு அனுமதியில்லை, அப்படிபட்ட மலைப்பாதையை வர்த்தக முயற்சியாக அரசு இச் தொடங்கியுள்ளது பலருக்கும் வருத்தம் அளிக்கின்றது தென் கைலாயமான வெள்ளியங்கிரியில் ஔவையார் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வெள்ளை விநாயகர் கோவில், சீதை வனம், பீமன் களி உருண்டை, சித்தர் கூரை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிலைப்பாடு உள்ளது. வெள்ளியங்கிரி மலையின் ஆறாவது மலையான திருநீர் மலையில் உள்ள ஆண்டி சுனையிலிருந்து புனித நீரை எடுத்து வந்து கும்பாபிஷேகம் பண்ண முடியாத நிலையில் இருக்கிற திருக்கோவில்களில் அபிஷேகம் செய்தால் அந்தக் கோவிலில் உடனடியாக கும்பாபிஷேகம் நடக்கும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.
இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு வனத்துறை சார்பில் மலையேற்றத் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 40 தேர்வு செய்யப்பட்ட மலையேற்றப் பாதைகள் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மலையேற்றத்திற்கும் குறிப்பிட்ட தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கோயமுத்தூரில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு ரூபாய்.5,099 கூடுதல் ஜி.எஸ்.டி., கட்டணமாக தமிழ்நாடு அரசு விதித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு பக்தர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி, கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் அஸ்வதாமன் வெளியிட்ட அறிக்கையில்
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலைக்கு வருகிறவர்கள் ஆன்மிக பக்தர்களே தவிர மலையேற்றத்திற்கு வருகிற சுற்றுலா பயணிகள் அல்ல. வெள்ளியங்கிரி மலைக்கு சிவராத்திரியன்று மட்டும் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தன்று சுமார் பத்து லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர்.சித்ரா பவுர்ணமி அன்று மலை அடிவாரத்தில் சுற்றி இருக்கிற கிராமத்து மக்கள் வில்லு வண்டியில் வந்து வள்ளி கும்மி, காவடி, ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காவடி ஏந்தியபடி, வெள்ளியங்கிரி மலையில் ஏறுவார்கள். இனிவரும் காலங்களில் அந்த சுற்றுவட்டார கிராமத்து மக்கள் காவடியுடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவதற்கு அரசுக்கு கட்டணம் கட்ட வேண்டும் தாணிகண்டி, முள்ளாங்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பல கிராம மக்கள், வெள்ளியங்கிரியின் மீது அமர்ந்திருக்கிற சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். இனிவரும் காலங்களில் அந்தக் கிராமங்களைச் சார்ந்த மக்கள் தன்னுடைய குலதெய்வத்தை கும்பிடுவதற்கு கட்டணம் கட்ட வேண்டுமா?
. என வினா எழுப்பியுள்ளார், சிலர் இந்த விவகாரத்தில் நீதிமன்றங்களுக்கு செல்லத் தயாராக உள்ள நிலையில் அரசு ஆன்மீக ஸ்தலங்களில் கட்டணம் வசூலிக்கும் நிலை மாற வேண்டும்.
தமிழ்நாடு வனத்துறைப் பகுதிகளில் 40 இடங்களில் பொது மக்கள மலையேற்றப் பயிற்சி செய்யும் வகையில் ட்ரெக் தமிழ்நாடு என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இத் திட்டத்தை கடந்த வியாழக்கிழமை துவங்கி வைத்தார்.
பதிவு செய்ய இணையதளம் www.trektamilnadu.com மும் திட்டத்தின லோகோவையும் அறிமுகம் செய்தார்.
தமிழ்நாடு வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் ஆகியவை இணைத்து ட்ரெக் தமிழ்நாடு திட்டதை கொண்டு வந்துள்ளன. இந்த துறைகளை மலையேற்றப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அறநிலையத்துறை மற்றும் வனத்துறை, சுற்றுலாத் துறை அணைத்தும் மக்கள் வாழ்வியல் சார்ந்தது வருவாய் ஈட்ட அல்ல.
கருத்துகள்