ஐந்து வருஷமாக போலியான நீதிமன்றம் நடத்தி தீர்ப்பும் வழங்கிய நபர் கைது,
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் சில வழக்குகளைத் தீர்த்து வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான மத்தியஸ்தர் என பொய் கூறி போலியான நீதிமன்றமே நடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் எனும் நபர் நீதிமன்றம் நியமித்த நடுவராகத் தன்னைக் காட்டிக் கொண்ட நிலையில். கடந்த ஐந்து ஆண்டுகள் இந்த போலியான நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. அதில்
2019 ஆம் ஆண்டு நிலத் தகராறு உள்ள ஒரு வழக்கை இவர் நடத்திய போலி நீதிமன்றம் விசாரணை நடத்திய நிலையில் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். பின்னாளில் இதே வழக்கு அஹமதாபாத் குடிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இந்த தீர்ப்பு மோசடியைப் பற்றி தெரியவந்துள்ளது. உடன் நீதிமன்றப் பதிவாளர் ஹர்திக் தேசாய் அளித்த புகாரின் அடிப்படையில், மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171 (அரசு அலுவலர் பணியில் இருப்பது போல காட்டிக் கொள்ளுதல்) மற்றும் பிரிவு 419 (ஆள் மாறாட்டம் செய்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.
மோரிஸ் சாமுவேல் மாநகர குடிமையியல் நீதிமன்றத்தில் நிலத் தகராறு வழக்கு நிலுவையில் இருக்கும் நபர்களைக் கண்டறிந்து ஏமாற்றியிருக்கிறார். ஏமாறுபவர்களிடம் வழக்குகளைத் தீர்ப்பதற்கான கட்டணமும் வசூலித்துள்ளார் என முதல் விசாரணையில் காவல்துறையினர் கண்டறிந்துனர். அந்த போலியான நபர் மோரிஸ் முதலில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ நடுவராக தன்னை அறிமுகம் செய்து கொள்வதன் பின் தன் நீதிமன்றம் போல உருவாக்கி வைத்த அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று குறிப்பிட்ட நபருக்குச் சாதகமான தீர்ப்பை போலியாக வழங்கியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.மோரிஸ் சாமுவேல் நடவடிக்கைகள் உண்மை என நம்ப வைப்பதற்காக அவரது கூட்டாளிகளே வழக்கறிஞர்களாகவும், நீதிமன்ற ஊழியர்கள் போலவும் நடிகர்களாகச் செயல்பட்டுள்ளனர்.
இந்த நூதனமான மோசடி நாடகங்களை நடத்தி அறியாத மக்களை ஏமாற்றிய மோரிஸ் தற்போது உண்மையான நீதிமன்றத்தில் கைது செய்து நிறுத்தப்பட்டான். இவனது மோசடி காரணமாகப் பாதிக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் இனிமேல் நடைபெறும் விசாரணையில் தெரியவரும். தற்போது நீதிமன்றக் காவல் மூலமாக சிறை சென்ற அந்த போலியான நீதிபதி.
கருத்துகள்