மருத்துவம் என்பது சேவைத் தொழில் அதை மறந்த கார்ப்பரேட் வர்த்தகர்கள் தலையீடு தான் இப்போதய நிகழ்வுகளுக்கு காரணம்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பாலாஜி
தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அக நோயாளிகளை விட புறநோயாகளிகளுக்கான சிகிச்சை பாதிக்கப்பட்டது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி அரசு மருத்துவர்கள்பணிப் பாதுகாப்பு, மற்றும் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பக் கோரியும் மருத்துவர்கள் போராட்டம் செய்தனர். திருநெல்வேலி மற்றும் , மதுரையிலுள்ள அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வந்த புற நோயாளிகள் கடும் சிரமப்பட்டனர்.
காலை 8 மணிக்கு வந்ததாகவும், ஆனால் 2 மணி நேரம் ஆகியும் மருத்துவர்கள் வரவில்லை என்றும் அவர்கள் கூறினர். அதையடுத்து அமைச்சர் மா சுப்பிரமணியனுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்தது. நாளை முதல் பணிக்கு திரும்புவதாகவும் தெரிவித்தனர்.
அவசரச் சிகிச்சைப் பிரிவு, உயிர் காக்கும் பிரிவு தவிர மற்ற எந்த துறையும் செயல்படாது என்று தெரிவித்து இருந்தனர். அதனால் டாக்டர்கள் பணிக்கு வராததால் பல புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து திரும்பி சென்றனர். ஆம்பூர் பாதிப்பு அதில் அடக்கம். அரசு மருத்துவர்கள் போராட்டம் விலக்கிக் கொண்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர் போராட்டம் வந்தால் மருத்துவர்கள் நிலைபாட்டில் அரசு வேறுபடும் சூழல் வந்துவிட்டால் பாதிப்பு எனக் கருதப்பட்ட நிலையில் போராட்டம் வாபஸ் ஆனது
இதற்கிடையே சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் காவல் அமைப்பு அமைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையிலுள்ள 19 அரசு மருத்துவமனைகளில் 9 அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே காவல்துறை சோதனை பணிப்பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 அரசு மருத்துவமனைகளிலும் காவல் மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது எல்லாவற்றிலும் அரசியல் செய்தால் மனித நேயம் என்ற ஒன்றே மறைந்து போகும். மருத்துவர் எழுதும் மருந்து அது தயாரிப்பு கம்பெனிகள் கொடுக்கும் கமிஷன் நேரடியாக மருத்துவர்களிடம் சேர்கிறது , இதுபோல் பல நிலையில் அரசு மருத்துவமனைகள் மருத்துவர்கள் பணம் சம்பாதிக்கும் மையங்கள் போல மாறிவிடும் நிலையில் மக்கள் வரிப்பணத்தில் தான் சம்பளம் பெறுகிறோம் அவர்களிடம் கருணை கொண்டு மருத்துவம் செய்வோம் என்ற நிலையில் உள்ள மருத்துவர்களுக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு வராது
ஊழல் செய்து மக்கள் மத்தியில் அலட்சியம் காட்டி வருவாய் ஒன்று தான் குறிக்கோள் என உள்ள மருத்துவர்களுக்கு இது போல் சம்பவம் பாதிப்பு வருகிறது. அதை மருத்துவர்களும், அரசும் உணர்வுப் பூர்வமாக உணர வேண்டும்
முதலில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய நபரை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை பார்க்கவே அனுமதித்திருக்கக் கூடாது.
“மருத்துவர் முறையாக சிகிச்சை வழங்கவில்லை, என்பது போன்ற கதைகளை உருவாக்க, சில அரசியல் சாயம் கொண்ட சார்பு ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, இதுபோன்ற கதைகளை உருவாக்க ஊடகங்கள் அறம் பிறழ் கூடாது அதிகார வர்க்கத்தினருக்கு இதுதான் வேலை. இது அரசாங்கத்தின் உளவியல் பார்வை பொதுமக்களுக்கு விரோதமாக இருக்கிறது'' என பேசியுள்ளார் பாஜகவின் ஹெச்.ராஜா
பாஜக என்பது மேட்டுக் குடியினருக்கான ஒரு கட்சி. அது ஒரு போதும் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்கள் சார்பாக ஒரு போதும் நிற்காது என்பதற்கு இந்தப் பேச்சும் ஒரு சாட்சியாகும்.ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் பங்கேற்று உள்ளனர் என இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தகவல் முன்னாள் அமைச்சர் டாக்டர் கே.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான மருத்துவர் செந்தில், தலைவர் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்.
இன்னமும் அவர் தான் தலைவராக உள்ளார். தமிழ்நாடு மருத்துவத் துறையில் 8,713 துணை சுகாதார நிலையங்கள், 1,830 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 487 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 நகர்ப்புற மக்கள் நலவாழ்வு மையங்கள், 10 தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக மருத்துவமனைகள், 256 வட்ட மருத்துவமனைகள் என இவ்வளவு உட்கட்டமைப்பு கள் இருந்தும் மருத்துவர்கள் தாங்கள் நடத்திவரும் தனியார் மருத்துவமனையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள் அதுவே அரசு மருத்துவமனைகளின் மீது மக்கள் சரியான சிகிச்சை கிடைக்காது என்ற சிந்தனை கொண்ட ஒரு ஏளனமாக பார்வை போல உணர்வு கொண்டுள்ளனர்.
பத்தாண்டுக்கு முன்பிருந்த மருத்துவர்கள் இன்னும் மருத்துவத் துறையில் அரசு சம்பளத்தைப் பெற்று பணி செய்கிறார்கள். ஆனால் சேவை செய்யவில்லை, இன்றைக்கு நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக காலகட்டத்திற்குப் பிறகு பெரும் அளவில் நோயாளிகள் உள்ளனர். இந்தியா மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் சுகாதாரத்திற்கு MOHAFW குறைவான மதிப்பீட்டில் நிதி ஒதுக்கியுள்ளது. அதை அதிகரித்தால் ஏராளமான மருத்துவமனைகள், மருத்துவர்களையும் உருவாக்கி நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவர் நோயாளிகளைக் கவனிக்காமல் நோயாளிகளின் குடும்பத்திற்கு கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டு இருக்க முடியுமா? தனியார் மருத்துவமனைகளில் அனைத்துக் கட்டமைப்புகளும் இருக்கும் போது அரசாங்கம் அதைச் செய்தால் என்ன? தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அரசு ஏன் சேவைக்காகப் பயன்படுத்தக் கூடாது. நடந்த பிரச்சனையைத் தனிப்பட்ட மருத்துவர் மற்றும் நோயாளி பிரச்சனையாகப் பார்க்காமல். மருத்துவத்துறை சார்ந்த நெருக்கடி என்று சொல்ல வேண்டும். அதன் விளைவாகத்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதும் அதில் கார்ப்பரேட் இல்லாமல் சிறந்த சேவை மனப்பான்மையுடைய மருத்துவர்களை உருவாக்குவதும், மத்திய, மாநில அரசுகளின் கடமை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மக்களுக்குத் தரமான சிகிச்சையளிக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டியது அரசின் சம்பளம் பெறும் ஒவ்வொரு மருத்துவர்களின் தலையாய கடமை.
கருத்துகள்