மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்ய ஒரு வார கால அவகாசம்- மாவட்ட ஆட்சியர் தகவல். விமான நிலையம் விரிவாக்கம் காரணமாக ஏற்கனவே நிலமெடுப்புச் சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின்னர்
நிலத்தை கையகப்படுத்துவற்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் தற்போது
நிலம் கையகப்படுத்துவதை தடுக்க உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதாக சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
சின்ன உடைப்பு ஊரிலுள்ள 164 வீடுகளுக்கு காலி செய்ய சொல்லி விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தனி வருவாய் வட்டாட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அரவிந்த் உடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காதலர்களைக் குவித்தனர்.
அதையறிந்து பொதுமக்கள் திரளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களிடம் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகாயினி, வட்டாட்சியர் விஜயலட்சுமி, சுரேஷ் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொதுமக்கள் சார்பில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் இன்குலாப் முனியாண்டி, மள்ளர் சேனை நிறுவனத் தலைவர் சோலை பழனிவேல் ராஜன் ஆகியோருடன் பேசியபோது வீடுகளைக் காலி செய்ய எதிர் வரும் சனிக்கிழமை வரை கால அவகாசம் கோரப்பட்டது. அதனை ஏற்று அலுவலர்கள் ஒரு வாரம் வரை அவகாசம் அளித்ததனால் பிரச்சினை சுமூகமாக முடிந்து. போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேசுகையில், சின்ன உடைப்பு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்காலிகமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும் இடத்தை காலி செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிலத்தை கையகப்படுத்துவற்கு ஏற்கனவே இழப்பீட்டு தொகை முழுவதும் வழங்கப்பட்டு விட்டது. கூடுதல் இழப்பீட்டுத் தொகை தொடர்பாக கிராம மக்கள் மனு அளிக்கவில்லை. நிலம் கையகப்படுத்தினால் பணம் மட்டுமே கொடுக்க முடியும், மாற்று நிலம் வழங்க முடியாது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நிலம் வழங்க முடியும் என்றார்.
இதனிடையே நிலம் கையகப்படுத்துவதைத் தடுக்க உயர் நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளதாக சின்ன உடைப்பு கிராம மக்கள் சட்டம் வழிமுறைகள் அறியாத நிலையில் தெரிவித்தனர். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக முடிவு செய்யப்பட்டது. அதன்படி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக 633.17 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு நில எடுப்பு சட்ட வழிமுறைகள் படி 4(1) அறிவிக்கை படி உரிய இழப்பீடு வழங்கிய பின்னர் அதனை கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு அலுவலர்கள் வந்தனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என புதிய கோரிக்கை மூலம் வலியுறுத்தினர். அவ்வாறு செய்யாமல் நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள வீடு மற்றும் நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக தெற்கு தாசில்தார் விஜயலட்சுமி, மதுரை விமான நிலைய நில எடுப்பு தனி வட்டாட்சியர் பிரபாகரன், ஆகியோர் ஜேசிபி வாகனங்களுடன் கிராமத்திற்கு வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த சின்ன உடைப்பு கிராம மக்கள், ஒவ்வொருவருக்கும் மூன்று சென்ட் நிலம் இலவச நிலமாக வழங்க வேண்டும். அந்தப் பகுதியில் பள்ளிக்கூடம், சுடுகாடு கோவில் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே நிலம் விரிவாக்கம் தொடர்பாக அறிவித்தவுடன் இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக அலுவலர்களிடம் பேசி முடிவெடுக்க இருப்பதாக வட்டாட்சியர் மற்றும் காவல்ல்துறை அலுவலர் மற்றும் பணியாளர்ககளும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி முன்னிலையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக சின்ன உடைப்பு பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், நேற்று காலையிலேயே, சின்ன உடைப்பு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், காவலர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. வஜ்ரா வாகனங்கள், ஆம்புலன்ஸ்களும் அதிகளவில் வந்ததால் அப்பகுதியே பரபரப்பானது.இன்றும் சின்ன உடைப்பு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலையில் அவசர உதவிக்காக இரண்டு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டது. கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியில் ஏறி நின்று எதிர்ப்புகளை தெரிவித்தனர்.பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று, நிலத்தை காலி செய்ய ஆறு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கிதா தெரிவித்துள்ளார்.ஏற்கனவே சின்ன உடைப்பு கிராம மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒருவார காலமாக வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இருந்தபோதும் அந்த மக்கள் கூடுதல் இழப்பீடு கேட்கிறார்கள். இழப்பீடு கேட்பது தொடர்பாக மக்கள் எந்த ஒரு மனுவையும் எங்களிடம் கொடுக்கவில்லை. மனு அளிக்க நாங்கள் அறிவுறுத்தியும் மனு அளிக்க மறுக்கிறார்கள்.நிலம் கையகப்படுத்தும்போது பணம் மட்டுமே கொடுக்க முடியும். மாற்று நிலம் கொடுக்க முடியாது. இருப்பினும் சின்ன உடைப்பு கிராம மக்களின் போராட்டம் காரணமாக வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு கிராம புரத்தில் வீடுகள் அல்லது நிலங்கள் வழங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போது மக்கள் வீடுகளை காலி செய்ய ஒருவார காலம் அவகாசம் கொடுத்துள்ளோம்” என மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.ஆனால், ஒரு வார கால அவகாசத்தில் நீதிமன்றம் நாட இருப்பதாகவும்., தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.. தற்போது போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உணவு சமைக்கப்பட்டு பந்தல்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் இதுதொடர்பாக கூறுகையில், “வீடுகளை இடிக்கப்போகிறோம் என காலை 4 மணிக்கு ஆயிரம் போலீஸ் வருகிறார்கள். எங்களை சாகடித்துவிட்டு வீடுகளைபோய் இடித்துக்கொள்ளுங்கள் என நாங்கள் சொல்கிறோம். எங்களுக்கு ஏர்போர்டுக்குள்ளும் வேலை வேண்டும். நிலம் எங்கள் மக்கள் கொடுத்தது. 50% வேலை எங்களுக்கு கண்டிப்பாக வேண்டும். சுத்தம் செய்யும் வேலையைக் கூட கொடுங்கள் நாங்கள் செய்கிறோம். வெளி ஆட்களை ஏன் அழைத்து வருகிறீர்கள்.பெண்கள் வீடுகளுக்குள் இருந்துகொண்டு, வீடுகளை இடித்தால் நாங்கள் செத்துவிடுவோம் என்கிறார்கள். செத்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என அதிகாரிகள் சொல்கிறார்கள்” என தெரிவித்தனர்.
அக்கிராம மாணவிகள் இதுதொடர்பாக கூறுகையில், “வீடுகளுக்கு மின்சாரத்தையும் துண்டித்து விட்டனர். எங்களுக்கு தேர்வுகள் நெருங்கும் நிலையில் நாங்கள் எப்படி படிப்போம். குடிக்க தண்ணீர் கூட இல்லை. பள்ளிக்கூடத்தில் இருப்பிடச் சான்று கேட்டால் நாங்கள் என்ன செய்வோம்” என தெரிவித்தனர்.
கருத்துகள்