தூத்துக்குடி மாவட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்திற்கு எதிராகவும், கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி மத்திய மாநில அரசுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.பிக்பாஸ்
நிகழ்ச்சியை தடை செய்ய தன் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமே நடத்திவிட்டார் ராஜேஸ்வரி பிரியா. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார். இது சம்பந்தமான போஸ்டர்களும் சென்னை முழுக்க ஒட்டப்பட்டது. அதில், 'சமுதாயத்தை சீர்குலைக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்ய விரும்பும் அனைவரும் பங்கேற்கலாம்' என்றும் ராஜேஸ்வரி பிரியா அறைகூவல் விட்டிருந்த நிலையில், -விளம்பரம்-
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தமிழ் பாரம்பரிய பண்பாட்டுக் கலாச்சாரச் சீரழிவின் உச்சமாக மாறிய Big Boss நிகழ்ச்சி Pig Boss நிகழ்ச்சி போல் உள்ளது. The leader of the pig herd என அழைப்பதே பொருத்தம். ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்களிடையே பேசும் போதுபிக்பாஸ் நிகழ்ச்சி இளம் தலைமுறையினரை சீரழிப்பதாகக் கூறி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழின் முன்னணித் தொலைக்காட்சியில், ஏழு வருடங்களாக, ஒவ்வொரு பருவத்திலும், பல பல டிசைன் புதுமைகளோடு, மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதாக தெரியவில்லை, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன், ஆரம்பமாகியுள்ளது.
இதுவரை தொகுப்பாளராக இருந்த நடிகர் கமலஹாசன் ஒப்பந்தம் முடிவுக்கு வந்து விலகியதால், நடிகர் விஜய் சேதுபதி புதிய தொகுப்பாளரானார்.
இவர், புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, துவக்கிய நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே போட்டியாளர்களுக்கு கடுமையான நிபந்தனை விதித்தார் விஜய் சேதுபதி.
இதில் நமது தமிழ் நாடு சார்ந்த பண்புகள் கெடுக்கும் நிகழ்வு உள்ளது. என்பதால்
ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள்:-கோட்டாட்சியர் மகாலட்சுமி அளித்த பேட்டியில், வெள்ளித் திரை போல இந்த சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கும் சென்சார் போர்டு கொண்டு வர வேண்டும். இந்த நிகழ்ச்சியை குடும்பத்துடன் உட்கார்ந்து யாருமே பார்க்க முடியாது. கலை நிகழ்ச்சியாக குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒரே அறைக்குள் உட்கார வைத்து அங்கு நடக்கும் அந்தரங்க விஷயத்தை வீடியோவாக சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். ஆடை கலாச்சாரம் என்ற பெயரில் சின்ன சின்ன டவுசர், உள்ளாடைகளை முக்கியமான ஆடைகளாக கருதி ரொம்ப மோசமாக ஆடைகளை அணிந்து இருக்கிறார்கள். தமிழ்நாடு கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை கொண்டு வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.
இந்த சீசன், சுமார் 30 நாட்களைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. மேலும், போட்டியின் சுவாரசியத்தை அதிகரிக்க வைல்டு கார்டு என்ட்ரியாக 6 போட்டியாளர்களையும் புதிதாக இறக்கியுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை விரைவாகத் தடை செய்ய வேண்டுமெனக் கோரியும், சென்சார் நடவடிக்கைகள் தேவை எனவும் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே கருத்துரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதில், பிக்பாஸ் தனது முதல் சீசன் ஒளிபரப்பான சமயத்தில் இருந்தே கலாச்சாரச் சீரழிவுக்கு வழிவகுக்கிறது. நம் பண்பாடுக்கு எதிராக இந்த நிகழ்ச்சி உள்ளது. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருத்துகள்