திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சீனா ஆகிய வெளிநாடுகளைச் சார்ந்தவர்கள் பல்வேறு வழக்குகளில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இணையதளம் வாயிலாக ஆபாசமான படங்களை அனுப்பியது, பல்வேறு யுத்திகளை கையாண்டு இணையதளம் வாயிலாக மிரட்டி பணம் பறித்ததாக சீனாவை சேர்ந்த யுவான்லூன் (வயது 25), ஷியோ யமாவ் (வயது 40) ஆகியோரை சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து திருச்சிராப்பள்ளி சிறப்பு முகாமில் அடைத்தனர்.
இந்த நிலையில், திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த சீன வாலிபர்களிடம், டெல்லி அமலாக்கத்துறை அலுவலர்கள் தேவேந்திர குமார், கவுரவ் சிங் இருவரும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அனுமதியுடன் விசாரணையை மேற்கொண்டனர். சீனாவைச் சேர்ந்த அந்த இருவரையும் தனியாக ஒரு அறையில் வைத்து துருவித் துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இறுதியில் அவர்களைகா கைது செய்து அழைத்துச் சென்றனர். திருச்சிராப்பள்ளி சிறப்பு முகாமுக்கு நவம்பர் மாதம் 13 ஆம் தேதி நான்கு பேர் கொண்ட அமலாக்கத்துறை அலுவலர்கள் குழுவாக வந்தனர். பின்னர் சிறப்பு முகாமில் இருந்த சீன நாட்டை சேர்ந்த 2 பேரை தனியாக ஒரு அறைக்கு அழைத்து வந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில். தொடர்ந்து இருவர் மீதும் 294-B, 384, 506(I) உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் இருவரையும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அனுமதியுடன், திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கைது செய்து, சென்னை அழைத்துச் சென்றனர். பின்னர் சென்னை நீதிமன்றம் அனுமதியுடன் 3 நாள் காவல்துறை கஸ்டடியில் அலுவலர்கள் விசாரணை நடத்தி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நவம்பர் மாதம் 29 ஆம் தேதி வரை காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கண்ட குற்றவாளிகள் திருச்சிராப்பள்ளியில் தங்கி, ஆன்லைன் செயலி வாயிலாக கடன் வழங்கி, கந்து வட்டி வசூலித்தவர்களை மூன்று நாள் காவலில் விசாரித்த பின், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் நேற்று ஆஜர்படுத்தினர்.
இருவரையும், நவம்பர் மாதம் 29ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். செயலியை பதிவிறக்கம் செய்யும் போதே, கடன் வாங்குவோரின், ஆதார், பான் கார்டு, வீட்டு முகவரி, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை பெற்றுள்ளனர். அவர்களின் மொபைல் போனில் உள்ள தொடர்பு எண்கள், உறவினர் விபரங்கள், படங்களையும் வாங்கி உள்ளனர்.
கடன் கொடுக்கும் போதே, அதற்கான செயலாக்கக் கட்டணம் என, பிடித்தம் செய்யப்பட்ட, 20 - 30 சதவீதத் தொகை போக, மீதி பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தியுள்ளனர்.
கடன் காலம் முடிந்த உடனேயே, 5000 ரூபாய்க்கு, 10,000 ரூபாய் வசூலித்துள்ளனர். கடனை திருப்பி செலுத்த, அதிகபட்சம் ஏழு நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளனர். உரிய தேதிக்குள் கடனைச் செலுத்தாவிட்டால், மொபைல் போன் வழியாக மிரட்டி உள்ளனர். அவர்களின் மொபைல் போனில் இருந்து திரட்டப்பட்ட எண்களை இணைத்து, 'வாட்ஸாப்' குழு துவக்கி, கடன் வாங்கிய நபர் மோசடி பேர்வழி என, அவதுாறு பரப்பியுள்ளனர்.
கடன் வாங்கியவரின் படங்களை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். கடன் வாங்கியவர்களை துன்புறுத்தியும், மன உளைச்சல் ஏற்படுத்தியும், 49.2 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளனர்.
மேலும், தங்கள் நிறுவனத்தில் இயக்குனர்களாக பணி அமர்த்தப்பட்டவர்களின் பெயரில், ரூபாய் நோட்டுகளை கிரிப்டோ கரன்சிகளாக மாற்ற, 'ஆன்லைன்' தளம் ஒன்றில் கணக்கு துவங்கி உள்ளனர். அதன் வாயிலாக, 2020 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, வெளிநாட்டில் இருந்து கிரிப்டோ கரன்சியாக, 3.54 கோடி ரூபாயை, தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.அந்த தொகையை கடன் கொடுத்து, 5.20 கோடி ரூபாய் வசூலித்து, கிரிப்டோ கரன்சியாக, ஹாங்காங்கிற்கு அனுப்பி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சீன நாட்டினரால் இயக்கப்படும் டிஜிட்டல் லோன் ஆப்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் PMLA, 2002 ன் விதிகளின் கீழ் 13.11.2024 அன்று தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியிலிருந்து 02 சீன பிரஜைகளான Xiao Ya Mao மற்றும் Wu Yuanlun ஆகியோரை அமலாக்கத்துறை அலுவலகம் கைது செய்துள்ளது. முதன்மை அமர்வு நீதிபதி, சென்னை அவர்களை 03 நாட்கள் ED காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், 18.11.2024 அன்று, முதன்மை முதன்மை அமர்வு நீதிபதி, சென்னை அவர்கள் 29.11.2024 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
கருத்துகள்