உலகளவில் தொழிலதிபர் கெளதம் அதானி சார்ந்த அதானி குழுமம் பல்வேறு முதலீடுகளைச் செய்து தொழில் நடத்தி வரும் நிலையில்,
சமீபத்தில் செபி (SEBI) பங்குச்சந்தை விவகாரத்தில் சிக்கி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில், இந்திய உயர் அலுவலகளுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில், கெளதம் அதானி மற்றும் அதன் 7 மூத்த நிர்வாகிகள் மீது அமெரிக்க ஐக்கிய நாடு நியூயார்க் நீதித்துறை சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது,
ரூபாய்.16,000 கோடி இலாபம் பெரும் வகையில் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தினைப் பெற, அதானி குழுமம் இந்திய அரசு அலுவலர்களுக்கு மொத்தமாக ரூபாய்.2,100 கோடி இலஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது குறித்து விசாரணை நடத்திய நியுயார்க் நீதிமன்றம் கெளதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 7 நபர்கள் குற்றவாளி என அறிவித்தது,
அவர்களுக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பித்தது. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற, அலுவலர்களுக்கு இலஞ்சம் கொடுக்க அதானி தனிப்பட்ட முறையில் சில சந்திப்புகள் நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் வசித்து வருகிறார்கள். 2023 ஆம் ஆண்டில் அதானியின் செயல்களை ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை ஊழல்களில் மிகப்பெரியது என கூறி இருந்ததும் தற்போது குறிப்பிடத்தக்கது. கெளதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவில் நியூயார்க் நகரிலிருந்து வந்த உத்தரவையடுத்து இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் அதானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற தொழிலதிபர் அதானி லஞ்சம் தர சம்மதித்துள்ளார் என்ற பரபரப்பான கருத்தை நீதிபதியே தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இந்திய பங்கு வர்த்தகம் செய்யும் அதானி குழுமத்தின் பங்கு சரிவை நோக்கி செல்கிறது. இதன் பொது நீதி யாதெனில் விரைவில் அவரை விட உயர்ந்த தொழிலதிபர் விண்வெளிக்கும் மன்வெளிக்கும் இடையில் புகுந்த பிரபலமான நபர் வருவார் என்பது தான் இச் செயதி தரும் சாராம்சம்.அந்த விரிவான முகமூடி யார் என்பதை விரைவில் பார்க்கலாம்.
கருத்துகள்