முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ்
மகன் திருமண விழாவை நடத்தி முடிக்க திருப்பதி சென்றிருந்தார். அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். செல்வராஜ், வயது 66, கோயம்புத்தூர் மேற்குத் தொகுதியில் 1991ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகி வெற்றி பெற்றார். பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், பின்னர் அதிமுகவில் இணைந்தார். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் சேர்ந்தவருக்கு செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
2006 ஆம் ஆண்டில் காங்கிரஸ் சேவா தளத்தின் தலைவராக இருந்தவர், 2015 ஆம் ஆண்டு நீக்கப்பட்டதையடுத்து அதிமுகவில் இணைந்த கோவை செல்வராஜ், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்தார். 2022 ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து, செய்தித் தொடர்பு துணைச் செயலராக பொறுப்பு வகித்தார்.
தன் மகனின் திருமணத்துக்காக திருப்பதிக்கு சென்றவர், அங்கு மாரடைப்பால் நேற்று காலமானார். இவரது உடல் சனிக்கிழமை கோயம்புத்தூர் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கருத்துகள்