தமிழ்நாட்டில் செயல்பட்ட PVP கேப்பிட்டல்ஸ் லிமிடெட் மற்றும் ரெயின்போ பைனான்ஸ் இந்தியா லிமிடெட், மற்றும் சத்தீஸ்கரைத்
ஸ்தலமாகக் கொண்ட மார்வா பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ராம் அலாய் காஸ்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய 4 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டைச் சேர்ந்த PVP கேபிட்டல் லிமிடெட் மற்றும் ரெயின்போ பைனான்ஸ் இந்தியா ஆகியவற்றின் உரிமம் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அன்று ரத்து செய்யப்பட்டன. பிவிபி கேப்பிட்டல் முதன்முதலாக 2002-ஆம் ஆண்டின் மே மாதம் 23-ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டது. அதே போல் ரெயின்போ பைனான்ஸ் இந்தியா 1998-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.
2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட சத்தீஸ்கரைத் ஸ்தலமாகக் கொண்ட மார்வா பைனான்ஸ் நவம்பர் மாதம் 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 11-ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. அதே போல உத்தரப் பிரதேசத்தை தளமாக கொண்ட ராம் அலாய் காஸ்டிங்ஸ் நிறுவனத்தை 2024-ஆம் ஆண்டின் நவம்பர் 26-ஆம் தேதி அன்று ரத்து செய்தது.
ஆர்பிஐ சில விதிமீறல்கள் செய்யும் வங்கிகளை எதிர்த்து நடவடிக்கையை எடுக்கலாம். விதிகளை மீறி சேவை வழங்குதல், வாடிக்கையாளர் பணத்தை தவறாக பயன்படுத்துதல் போன்றவையும் அடங்கும். ஆனால் தற்போது இந்த நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து எந்தவித காரணமும் இந்திய ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து வரவில்லை. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம்.
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) எவ்வாறு செயல்படுகிறது என்பதை நிர்வகிக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உண்டு. இந்நிறுவனங்களில் செயல்முறைகளில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்பட்டால் உடனடியாக ஆர்பிஐ அதற்கு நடவடிக்கை எடுக்கும். அப்படித்தான் இந்தியாவில் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளையும் ஆர்பிஐ கண்காணித்து வரும் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளது.
கருத்துகள்