திருப்போரூா் கந்தசுவாமி கோவில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோயிலாகும்.
பேரூரின் மையத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள. திருப்போரூா் ஸ்ரீ கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என அழைக்கப்படுகிறது.
அங்கு அக்டோபர் மாதம் தரிசனம் செய்த சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற நபரின் செல்போன் தவறி உண்டியலில் விழுந்ததையடுத்து செல்போனை இன்று அவர் ரூபாய்.10,000 கட்டி ஏலத்தில் எடுத்தார்.
கோயிலில் தவறி விழுந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து பலரும் குரல் எழுப்பிய நிலையில், மொபைல் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ரூபாய்.10,000 கட்டிய பின்னர் செல்போன் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தினேஷ் தரிசனத்திற்கு பிறகு உண்டியலில் காணிக்கை செலுத்த முயன்றபோது அவர் வைத்திருந்த ஐபோன் தவறி உண்டியலில் விழுந்திருக்கிறது. உடனடியாக அவர், ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்திடம் செல்போனை திரும்பக் கேட்டிருக்கிறார். ஆனால், "உண்டியலில் விழுந்தது அனைத்தும் முருகனுக்கே" என்று கோவில் நிர்வாகம் கூறிவிட்டது. மட்டுமல்லாது உண்டியலை எங்களால் திறக்க முடியாது. எனக் கூறி, ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் அணுக வழிகாட்டியது.
சென்னையில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் இது குறித்து எழுத்துப்பூர்வமாக தினேஷ் கோரிக்கை வைத்தார். ஆனால், அங்கும் அலுவலர்கள் அது குறித்து பதிலில்லை வில்லை. கோவில் நிர்வாகம் சொன்னதையே ஹிந்து சமய அறநிலையத்துறையும் கூறியது. இருப்பினும் தினேஷ் தொடர் கோரிக்கையையடுத்து அறநிலையத்துறை உண்டியல் திறக்கப்படும் நாளில் செல்போனிலிருந்து டேட்டாக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், மற்றபடி செல்போன் முருகனுக்கே என்று கூறியது. இந்த விவகாரம் குறித்து ஹிந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் பத்திரிகையாளர்கள் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டன. பதிலளித்த அமைச்சர், என்ன வாய்ப்பு இருக்கிறது என்பதை ஆய்வு செய்து பிறகு முடிவெடுத்துத் தெரிவிப்போம் எனக் கூறினார். அதையடுத்து அவர் செல்லும் இடமெல்லாம் இந்தக் கேள்விகள் எதிரொலித்தன. ஜனவரி மாதம் 5 ஆம் தேதி, "இந்த ஆட்சி மக்களுக்கு கொடுக்கிற ஆட்சி. எடுக்கிற ஆட்சி கிடையாது. எனவே பக்தரின் செல்போன் திரும்ப ஒப்படைக்கப்படும்" என சேகர்பாபு உறுதியளித்தார்.அதையடுத்து இன்று உண்டியல் திறக்கப்பட்டு, உள்ளிருந்த செல்போன், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் முன்னிலையில் எடுத்து ஏலத்தில் விடப்பட்டதிதில் ரூபாய்.10,000 கட்டி அதன் உரிமையாளர் தினேஷ் என்பவர் ஏலத்தில் எடுத்திருக்கிறார். எப்படியோ செல்போன் கிடைத்தால் போதும் என்றிருந்த தினேஷ், மகிழ்ச்சியடைந்தார் தினேஷ் ஒரு பக்தர், தவறுதலாகதான் செல்போன் விழுந்திருக்கிறது. அதை முருகன் ஒன்றும் எடுத்து பயன்படுத்தப்போவதில்லை. அவர் பெயரைச் சொல்லி ஆலயத்தில் வருவாய் ஈட்டும் அறநிலையத்துறை செல்போனை கொடுக்க மறுத்ததுடன், நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் தான் கொடுத்திருக்கிறீர்கள். தவறி விழுந்த பொருளை அப்போதே உரியவரை அழைத்து கொடுப்பது தானே அறம்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இதில் பொது நீதி யாதெனில் அறநிலையத் துறையில் நடக்கும் ஊழலுக்கு அறமுண்டா என்பதே இங்கு எழுவினா?.
கருத்துகள்