திருப்பரங்குன்றம் (மலை) அக்கிரமப் பிரவேசம் மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஹிந்து முன்னணி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த
நிலையில் மதுரை மாநகரம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு (163 BNSS) சட்டப்படி பிறப்பிக்கப்பட்டது.
ஹிந்து முன்னணி போராட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும் இன்றும், மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன்படி, மதுரை மாநகரில் நேற்று காலை முதல் இன்று இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்தார். பொது அமைதியைக் குலைக்கும் வகையில் போராட்டங்கள், தர்ணா மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்த காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் உருது இஸ்லாமிய பிரமுகர் அடக்கம் செய்யப்பட்ட தர்காவில் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆனால், கடந்த சில நாட்களாக மலைமீதுள்ள தர்காவில் ஆடு மற்றும் கோழி பரங்குன்றத்தில் பலி கொடுக்கக் கூடாதென ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தினர். இது அரசியல் விவகாரமான
நிலையில், திருப்பரங்குன்றம் மலையைக் காக்க, இன்று அறப்போராட்டம் நடத்தப்படுமென ஹிந்து முன்னணி அமைப்பு அறிவித்ததனால் அசம்பாவிதங்களோ, மதரீதியான மோதல்களே ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், மதுரை மாவட்ட நிர்வாகம் தற்போது மாநகர் முழுவதும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இருப்பினும், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் தர்காவில் வழிபடத் தடையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு தொடர்பாக மதுரை மாநகரக் காவல் துறை ஆணையர் லோகநாதன் தெரிவித்ததில், "திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக சில நாட்களாக இரு வேறு பிரிவினர்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்பட்டநிலையில், அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையிலும் இருபிரிவினர் சார்பில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஹிந்து முன்னணி அமைப்பு நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுத்த விவரம் தெரிந்து வீடியோ, தண்டோரா போட்டு திருப்பரங்குன்றத்திற்கு பொதுமக்களை அதிக அளவில் திரட்டும் செயல்களில் ஹிந்து முன்னணி அமைப்பு ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறி பங்கேற்போர் மீதும், வாகனங்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என எச்சரித்தார். மதுரை காவல்துறையினர் ஹிந்து முன்னணியினர் போராட்டம் நடத்த அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் தற்போது இந்தச் சூழலில் அதிகம் கவனம் ஈர்த்த நிலையில் பிரிட்டிஷ் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியின் நிர்வாகத்தில் இருந்த
1923 ஆம் ஆண்டு மதுரையிலுள்ள முதல் கூடுதல் துணை நீதிமன்றம், பரங்குன்றம் மலையின் உரிமையைக் கோரி ஆங்கில அரசாங்கம் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றத்தில் உத்தரவை பிறப்பித்தபோது, மலைகளில் உள்ள சிக்கந்தர் சமாதி எனும் தர்கா மற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கான எல்லையை வகைப்படுத்துவதற்கு முன்பு 300 ஆவணங்களை மதிப்பிட்டு 21 சாட்சிகளை விசாரித்ததாக தகவல் உண்டு.
பின்னர், மதராஸ் அரசாங்கம் அதை லண்டன் பிரிவி கவுன்சிலிடம் (அப்போது சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியின் உச்ச நீதிமன்றம்) மேல்முறையீடு செய்தது, அங்கு கவுன்சில் மே மாதம் 1931 ஆம் தேதியில் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, தர்கா நிலத்தின் உரிமையைக் கோரி அரசு சுதந்திரமடைந்த பின்னர் மீண்டும் 1975 ஆம் ஆண்டில் III வது கூடுதல் துணை நீதிமன்றத்தை அணுகியது, அங்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உற்றுநோக்கு வேண்டும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஐந்து மனுக்கள் விசாரணை நிலுவையில் உள்ளது. மேலும், சில வழக்குகளையும் பதிவு செய்து விசாரணையில் உள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை ஹிந்து முன்னணி போராட்டம் நடத்தவிருந்தது, ஆனால் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதில் மக்கள் பங்கேற்க வேண்டாம் என்றும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
கருத்துகள்