முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நகைகளை இரண்டாம் தரப்பு வாரிசான தீபாவிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவிப்புக்காகத் தொடரப்பட்டு தண்டனை பெற்ற வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது
முன்னாள் முதல்வர் தமிழ்நாடு செல்வி ஜெ.ஜெயலலிதவுக்கு.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் தண்டனை வழங்கப்பட்டது மிக முக்கியமான தீர்ப்பாக தனி நீதிமன்றத்தின் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பு அமைந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான அந்தத் தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தள்ளுபடி செய்தார்.
ஆதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடுகள் செய்யப்பட்ட நிலையில், 2016 ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா உயிரிழந்த நிலையில் தண்டனையில் இருந்து மட்டும் அவர் நீக்கம் செய்து அபராதம் விதிக்கப்பட்டது பின்பு, 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பிலிருந்து வி.கே.சசிகலா நடராஜன், ஜெ.இளவரசி. வி.என்.சுதாகரன் உள்ளிட்டோரை குற்றவாளிகளாக அறிவித்ததோடு தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த நிலையில் நகைகள் மீது உரிமை கொண்டாடிய ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோரின் மனுக்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கெதிராக தீபா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில் சட்டப்படி எங்கள் அத்தைக்கு நாங்கள் தான் வாரிசு. எனவே அவருடைய சொத்துக்கள் மீது எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எனவே அரசின் கருவூலத்தில் உள்ள நகைகள் உள்ளிட்டவற்றை எங்களிடமே ஒப்படைக்க வேண்டுமென தீபா அந்த தாக்கல் செய்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் இதில் பொது நீதி யாதெனில்:- இவர் தான் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு எனில் ஜெ.ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 100 கோடியை இவரிடமிருந்தது வசூல் செய்யவும் நடவடிக்கைகள் தேவை தான். தீர்ப்பு வந்த பின்னர் இதுவே விவாதமாக மாறும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேலும் முதல் குற்றவாளி ஜெ.ஜெயலலிதாவுக்கு ரூபாய்.100 கோடியும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூபாய்.10 கோடியும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரத்து செய்து, அவர்கள் 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. ஆனால் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பு வந்தபோது, ஜெ.ஜெயலலிதா மரணம் அடைந்த காரணத்தால், அவரது பெயர் மட்டும் தீர்ப்பில் தண்டனையிலிருந்து கைவிடப்பட்டது. ஆனால் அபராதம் விதிக்கப்பட்டது சசிகலா உள்பட மற்ற 3 பேரும் பெங்களூரு பிரப்பனஅக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்தனர். சசிகலாவும், இளவரசியும் அபராதத் தொகையைச் செலுத்தினர். ஆனால் சுதாகரன் அபராத் தொகையைச் செலுத்தாததால் கூடுதலாக ஓராண்டு காலம் சிறைத் தண்டனையை அனுபவித்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு நகரத்தின் சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெ.ஜெயலலிதா உள்பட 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 29 வகையான பொருட்களை ஏலம் விட கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசுக்கு உத்தரவிடக் கோரினார். இந்த மனு மீது நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதற்கிடையே தாங்கள் ஜெ.ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதால் அவரது சொத்துகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கோரி தனி நீதிமன்றத்தில் ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் பொருட்களை ஏலம் விடக்கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணை பெங்களூரு நகரத்தின் சிவில் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
கர்நாடக அரசு சிறப்பு வக்கீல் கிரண் ஜவளி சார்பில் அவரது இளநிலை வக்கீலும், தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை அலுவலரும் ஆஜரானார்கள். வழக்கு விசாரணையின் போது, கர்நாடக அரசு வக்கீல், இந்த வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் ஏலம் விடப்படக்கூடிய சொத்துகள் குறித்த பட்டியலை மூடிய கவரில் தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து நீதிபதி மோகன், சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய சொத்துகளை மட்டுமே ஏலம் விட முடியும் என்றும், புடவைகள், செருப்புகள் உள்ளிட்ட 28 வகையான பொருட்களை ஏலம் விட முடியாதென்றும் கூறினார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முடக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் எழுதி அதன் டெபாசிட் விவரங்களைப் பெற வேண்டும் என்று நீதிமன்றத்தின் அலுவலருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அந்த 27 கிலோ தங்க, வைர நகைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துகளின் இன்றைய மதிப்பு குறித்தும் தெரிவிக்கும் படி அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பில் கூறியுள்ளபடி 27 கிலோ தங்க, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையில் ரூபாய்.100 கோடியை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தொகையில் ரூபாய்.5 கோடியை கர்நாடக மாநிலத்தில் அரசுக்கு தமிழ்நாடு அரசு வழக்கு செலவு தொகையாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
கருத்துகள்