நடிகர் இயக்குனர் சீமான் நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில்
கிளைமேக்ஸ் காட்சி, பாலியல் புகார் வழக்கை விஜயலட்சுமியே நினைத்தாலும் இனிமேல் வாபஸ் பெற முடியாது. அதை ரத்து செய்யவும் இயலாது. காதலர் என நடித்து, காசைப் பறித்து,7 முறை கருக்களைப்பையும் செய்த சீமான். இது உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் நா த க தலைமை ஒருங்கிணைப்பாளரான நடிகர் இயக்குனர் சீமானுக்கு அளித்த சான்றிதழ் தான் இந்தத் தீர்ப்பு.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரிய நடிகர் சீமான்
தாக்கல் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில்,
வழக்கை ஆராய்ந்த போது நடிகை விஜயலட்சுமிக்கு, சீமான் மீது எந்தவிதமான காதலுமில்லை, குடும்பப் பிரச்சினை மற்றும் திரைத்துறையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக நடிகர் மற்றும் இயக்குனருமான சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகியுள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நடிகை விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்துள்ளது தெளிவாகத் தெரிய வருவதாகவும் , உத்தரவில்
நடிகை விஜயலட்சுமியிடம் பெருந்தொகையைப் பெற்ற அப்போது கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்திய சீமான் நடத்திய பாலியல் வன்கொடுமைப் புகார் மிகவும் தீவிரமானதென்பதால், அந்தப் புகாரை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை
மேலும் சட்டப்படி அனைவரும் அறியும் வகையில் கூறினால் திருமணம் செய்து கொள்வதாக சீமான் கூறியிருந்தாரென்றும் அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், விஜயலட்சுமியிடம் பெருந்தொகையை பெற்றிருப்பதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரிவித்துளள நிலையில்

திரைப்படங்களில் நடித்து தான் சம்பாதித்துச் சேமித்து வைத்திருந்த சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை சீமான் எடுத்துக் கொண்டதாகவும் அந்தப் புகார் மனுவில் நடிகை விஜயலட்சுமி கூறியிருந்தார். இந்த புகாரை சென்னை அண்ணா நகர் காவல்துறை துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தி
நடிகையின் வாக்குமூலம் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் 161 பதிவு செய்யப்பட்டது.
அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரைத் திரும்பப் பெறக் கடிதம் அனுப்பிதாகவும் விஜயலட்சுமி கூறியுள்ளார் எனக் குறிப்பிட்ட நீதிபதி, இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான், புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது.பாலியல் வன்கொடுமைப் புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை
தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. விஜய லட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள், அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது எனக் கூறிய நீதிபதி, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். மேலும் சீமானுடன் தான் இருக்கும் சில வீடியோக்களையும் விஜயலட்சுமி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் 2011ஆம் ஆண்டு புகார் அளித்த விஜயலட்சுமி 2012 ஆம் ஆண்டு அந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் காவல் நிலையத்தில் இந்த வழக்கை முடித்து வைத்தனர். தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே வழக்கு ரத்து செய்ய வேண்டுமென சீமான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு பதினேழாம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது மேலும் விசாரணையை 12 வாரத்திற்குள் முடித்து இறுதியாக தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் தற்போது வழக்கு விபரங்கள் வெளியானது.
கருத்துகள்