டெல்லியின் புதிய முதலமைச்சராக ரேகா குப்தா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்,
துணைநிலை ஆளுநர் அதை ஏற்றுக்கொண்டார்.
டெல்லியின் அடுத்த முதலமைச்சராக திருமதி ரேகா குப்தா பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியான இன்று பதவியேற்பார்.
பிப்ரவரி மாதம் 19, ஆம் தேதி 2025 நேற்று புது தில்லியிலுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில அலுவலகத்தில், ரேகா குப்தா அடுத்த டெல்லி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
பாரதிய ஜனதா கட்சி ரேகா குப்தாவை டெல்லி சட்டமன்றக் கட்சித் தலைவராக அறிவித்தது . பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி இன்று பதவியேற்பு விழாவின் போது அவர் டெல்லியின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்.
டெல்லியின் அடுத்த முதல்வர், அமைச்சர்களை வரவேற்க ராம்லீலா மைதானத்தில் தளங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
டெல்லியின் நான்காவது பெண் முதல்வர் திருமதி ரேகா குப்தா ஆவார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் மற்றும் அதிஷி ஆகியோர் இந்தப் பதவியை வகித்த மற்ற பெண்களாவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற முக்கியப் பிரமுகர்கள் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 20, 2025) நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .
விழாவிற்கு முன்னதாக இசை மற்றும் பாடல்கள் இடம்பெறும் கலாச்சார நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கு சுமார் 30,000 விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மற்றும் ஊழியர்களும் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். டெல்லி முதல்வரின் 'வரலாற்றுச் சிறப்புமிக்க, பிரமாண்டமான' டெல்லி யூனியன் பிரதேச சட்டமன்றக் கட்சித் தலைவராக ரேகா குப்தாவை பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.
"ஒரு சாதாரண கட்சி ஊழியர் மீது பிரதமர் மோடி மற்றும் ஆர் எஸ் எஸ் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்": டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி என்னைப் போன்ற ஒரு சாதாரண கட்சி ஊழியர் மற்றும் மகள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். அவரது எதிர்பார்ப்புகளை நான் நிறைவேற்றுவேன்" என்றார்.
டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தாவை ஏராளமான மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் வரவேற்றனர். ஷாலிமார் பாக் இல்லத்தை அடைந்தபோது, ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் வரவேற்கப்பட்டார்.
இன்று ராம்லீலா மைதானத்தில் டெல்லி முதல்வராக அவர் பதவியேற்க உள்ளார்.டெல்லியில் ஆட்சி அமைக்க ரேகா குப்தாவுக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா அழைப்பு
டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா, பாஜகவின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தாவை புதிய அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
பிப்ரவரி 19, 2025 அன்று நடைபெற்ற பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில், முதல் முறையாக உறுப்பினரான ரேகா குப்தா டெல்லி சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. டெல்லி சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் ரேகா குப்தா, துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை ராஜ் நிவாஸில் சந்தித்து, டெல்லியின் NCT ன் புதிய அரசாங்கத்தை அமைக்க தனது உரிமைகோரலை முன்வைத்த நிலையில் துணை நிலை ஆளுநர் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, புதிய அரசாங்கத்தை அமைக்க அவரை அழைத்தார். ரேகா குப்தாவின் தந்தை ஜெய் பகவான். இந்தியன் வங்கியில் பணிபுரிந்து. 1972-73 ஆம் ஆண்டில் அவர் மேலாளராக பொறுப்பேற்ற போது, டெல்லிக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு குடும்பம் டெல்லிக்கு குடிபெயர்ந்தது. இதன் காரணமாக, ரேகா குப்தாவின் பள்ளிக் கல்வி, பட்டப்படிப்பு மற்றும் எல்.எல்.பி படிப்புகள் டெல்லியில் மட்டுமே இருந்தன ரேகா குப்தா 1998 ஆம் ஆண்டு தொழிலதிபர் மனிஷ் குப்தாவை மணந்தார். பார்க்கலாம் ஒன்று பட்ட இந்தியா உருவாகும் முன்னர் குப்தர்கள் காலம் பொற்காலம் தான் ஆனால் அந்த நிலை இப்போது வருமா ... காத்திருப்போம் கனவுகளுடன்.
கருத்துகள்