காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மீது பதிவுத்துறையின் ஒருங்கிணைப்புக்குழு புகார்
கூறியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் ஆய்வாளராக 15 வருடங்களும், துணைக் கண்காணிப்பாளராக 6 வருடங்களும் கலைச்செல்வன் பணியாற்றுகிறார். மேலும் இவர் திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் சார்பதிவாளர்களைத் தொடர்புகொண்டு முறை கேடான ஆவணங்களைப் பதிவு செய்யும்படி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளதாக
இவர் மீது பதிவுத்துறை ஒருங்கிணைப்புக்குழு புகார் தெரிவித்துள்ளனர் கலைச்செல்வன் மீது தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக் குழு பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளது.
தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பதிவாளராகப் பணியாற்றி வரும் செந்தூரபாண்டியனின் மாமானார் வீட்டில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஒரு ஆவணமோ, நகையோ, பணமோ கைப்பற்றப்படவில்லை. இந்த் நிலையில் கலைச்செல்வன் DVAC-யில் பணிபுரியாத வெளிநபர்களை அழைத்துச் சென்று அவர்கள் மூலமாக தவறான தகவலை செய்தி நிறுவனங்கள் மூலம் வெளியிட்டு மாநிலத் தலைவராக உள்ள நபரை பொதுவெளியில் அசிங்கப்படுத்த முயற்சி செய்துள்ளார். எனவும் மேலும் செந்தூர் பாண்டியனை கைது செய்துவிட்டதாகவும் பொய்யான தகவலைப் பரப்பியுள்ளதாகவும். இது சம்மந்தமாக அவர் மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடரப்பட இருக்கிறது எனவும்.
கலைச்செல்வன் மீது தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக் குழு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
முத்திரைக் கட்டணத்தை குறைவாகப் பதிவு செய்து ரூபாய் 1.34 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக திருப்பத்தூர் மாவட்டப் பதிவாளரான செந்தூர் பாண்டியன் வீட்டில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றிய போது முத்திரை கட்டணம் குறைவாக பதிவு செய்து அரசுக்கு ரூபாய்.1.34 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக செந்தூர் பாண்டியன் மீது ஊழல் புகார் எழுந்தது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியிலுள்ள செந்தூர் பாண்டியன் வீட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், ஆய்வாளர் கீதா தலைமையில் 7 பேர் சோதனை நடத்தினர். நடைமுறை தவறு ஏதும் இல்லாத ஆவணப்பதிவில் பொய்ப் புகாரை விசாரித்ததாக DVAC-யின் புகாரினை எதிர்த்து செந்தூர் பாண்டியனால் உயர்நீதிமன்றத்தில் (வழக்கு எண் W.P.No.18072/2024) வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும்.
திருப்பத்தூர் மாவட்டப் பதிவாளர் செந்தூர் பாண்டியனுக்கு பணிப் பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் வழங்க வேண்டும் எனவும். தமிழ்நாடு பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ ஊழல் குறித்து பதிவுத்துறை ஊழியர்கள் மீதான புகார்கள் தொகுப்பு:-
இது குறித்து உரிய அலுவலர்களுக்குத் தெரியப்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மேலும் பத்திர எழுத்தர்கள் முறையான பத்திர பதிவுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணங்களை வைத்து, பதிவு செய்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும் எனவும் குறிப்பிட்ட இந்த போலியான பத்திரப்பதிவுகளுக்கு துணை போன சார்பதிவாளர்கள் 2 பேரையும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பத்திரப்பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திற்கு அறிககை நடவடிக்கைகள் இல்லாமல் இருக்கும் நிலையில் அதுவும் ஊழல் தான் .
இருப்பினும் இதில் 'நிமிர்ந்து நில்' திரைப்படக் கதையில் வரும் ஊழல் செய்து கைதான பல அலுவலர்கள் சங்கம் அமைத்து தங்கள் மீது மீது குற்றமில்லை என பிரஸ்தாபிக்கும் நடவடிக்கைகள் போலவே இப்போது பதிவுத்துறை சங்கம் வெளியிட்ட அறிக்கை உள்ளது . ஊழல் செய்து மாட்டிக்கொண்ட நபருக்கு ஆதரவாக இவர்கள் சங்கம் வருவதால் அதில் சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த நபர்கள் மீதும் விசாரணை தேவை என்பது தான் இங்கு பொது நீதி.
கருத்துகள்