பாரதப் பிரதமரின் அமெரிக்கப் பயணத்தையொட்டி வெளியிடப்பட்ட இந்தியா அமெரிக்கா கூட்டு அறிக்கை
அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை, வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் ஜே.டிரம்ப் வரவேற்றார்.
சுதந்திரமான, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், பன்முகத்துவத்தை மதிக்கும் இறையாண்மை மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களான, அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் இந்தியா-அமெரிக்காவின் உறுதியான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு நாட்டு மக்களிடையேயான நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் வலுவான ஈடுபாடுகளையும் அவர்கள் உறுதிபடுத்தினர்.
இரு நாடுகளிடையே “21-ஆம் நூற்றாண்டிற்கான ராணுவ கூட்டாண்மைக்கான வாய்ப்புகள், விரைவான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்” குறித்து அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி புதிய முயற்சியைத் தொடங்கினர். ஒத்துழைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான இந்த முயற்சியின் கீழ், பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைக்கான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், இந்த ஆண்டு அமையும் என்று இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.
அமெரிக்க-இந்தியா உத்திசார் நலன்களின் ஆழமான ஒருங்கிணைப்பை எடுத்துரைத்து, பல துறைகளை உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பு கூட்டாண்மைக்கான தங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். பாதுகாப்பு உறவுகளை மேலும் முன்னேற்றுவதற்காக, 21-ஆம் நூற்றாண்டில் அமெரிக்க-இந்தியா முக்கிய பாதுகாப்பு கூட்டாண்மைக்கான புதிய பத்து ஆண்டு கட்டமைப்பில் இந்த ஆண்டு கையெழுத்திடும் திட்டங்களை தலைவர்கள் அறிவித்தனர்.
அமெரிக்காவின் பாரம்பரிய பாதுகாப்பு தளவாடங்கள் இந்தியாவிற்கு வழங்கப்படுவதில் இன்றுவரை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர். இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காக, ராணுவ பீரங்கிகளை அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் தரைப்படையினரின் போர் வாகனங்களுக்கான புதிய கொள்முதல் மற்றும் கூட்டு உற்பத்தி ஏற்பாடுகளையும் இந்த ஆண்டு இந்தியாவில் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்தும் அவர்கள் அறிவித்தனர். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பு வரம்பை மேம்படுத்துவதற்காக, அமெரிக்காவின் ஆறு கூடுதல் P-8I கடல்சார் ரோந்து விமானங்களுக்கான கொள்முதலை இறுதி செய்வது குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.
அமெரிக்காவின் உத்திசார் வர்த்தக அங்கீகாரத்துடனான முக்கிய கூட்டாளியாக இந்தியா இருப்பதுடன் குவாட் அமைப்பின் முக்கிய கூட்டாளியாகவும் இருப்பதை அங்கீகரித்து, அமெரிக்காவும் இந்தியாவும் சர்வதேச ஆயுதப் போக்குவரத்து விதிமுறைகள் உள்ளிட்ட ஆயுதப் பரிமாற்ற விதிமுறைகளை மதிப்பாய்வு செய்யும். இது, பாதுகாப்பு வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம், பராமரிப்பு, மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பை ஒழுங்குபடுத்தும். தங்கள் கொள்முதல் அமைப்புகளை சிறப்பாக சீரமைக்கவும், பாதுகாப்பு பொருட்கள் மற்றும் சேவைகளின் பரஸ்பர விநியோகத்தை செயல்படுத்தவும் பரஸ்பர பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தம் குறித்து இந்த ஆண்டு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் தலைவர்கள் முடிவு செய்தனர்.
விண்வெளி, வான் பாதுகாப்பு, ஏவுகணை, கடல்சார் தொழில்நுட்பங்கள் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் தலைவர்கள் உறுதியளித்தனர். இந்தியாவிற்கு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது குறித்த அதன் கொள்கையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தது.
பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்புக்காக அமெரிக்க-இந்தியா இடையே செயல் திட்டத்தை உருவாக்கி, தன்னாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, இந்தோ-பசிபிக் பகுதியில் தொழில்முறை கூட்டாண்மை மற்றும் உற்பத்தியை வலுப்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக தன்னாட்சி அமைப்புகள் தொழில் கூட்டணியை தலைவர்கள் அறிவித்தனர்.
பிராந்திய அளவிலான பாதுகாப்பை வலுப்படுத்த அதிநவீன கடல்சார் அமைப்புகள் மற்றும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ஆளில்லா வான்வழி பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றை இணைந்து உருவாக்குவதற்கும், உற்பத்தி செய்வதற்கும் மேம்பட்ட தன்னாட்சி தொழில்நுட்பங்கள் குறித்து அமெரிக்காவின் ஆண்ட்ரில் தொழில் நிறுவனம், இந்தியாவின் மஹிந்திரா குழுமம் இடையே புதிய ஒப்பந்தத்தையும், மேலும் தற்போது செயல்பாட்டில் உள்ள L3 ஹாரிஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இடையேயான இழுவை வரிசை அமைப்புகளின் கூட்டு மேம்பாட்டிற்கான ஒப்பந்தத்தையும் தலைவர்கள் வரவேற்றனர்.
மேம்பட்ட பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள், சமீபத்திய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதன் மூலம், வான், நிலம், கடல், விண்வெளி மற்றும் இணையவெளி ஆகிய அனைத்து களங்களிலும் ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் தலைவர்கள் உறுதியளித்தனர். இரு நாடுகளிடையே இந்தியாவில் நடத்தப்படவுள்ள பெரிய அளவிலான முப்படைப் பயிற்சியையும் தலைவர்கள் வரவேற்றனர்.
இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்க மற்றும் இந்திய ராணுவங்களின் வெளிநாட்டுப் பயன்பாடுகளை ஆதரிப்பதற்கும், நிலைநிறுத்துவதற்கும் புதிய தளத்தை உருவாக்க தலைவர்கள் உறுதியளித்தனர்.
இருநாட்டு மக்களை மேலும் வளப்படுத்தவும், இருநாடுகளின் வலிமைக்காகவும், பொருளாதார மற்றும் விநியோக முறைகளை மேலும் புதுமையாக்கவும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்தவும் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். தேசிய பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை உறுதி செய்யும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவை விரிவுபடுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இதற்காக, “மிஷன் 500″ என்ற ஒரு புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மொத்த இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கி 2030-ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்தும். மேலும் இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி-எலான் மஸ்க் சந்திப்புகள் நடந்தது உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத் துறைச் செயலாளர் கலந்து கொண்டனர். https://www.youtube.com/live/gJdlaUF88D8?si=Mp3fb56baWhtClpP நமது பிரதமருக்கு அமெரிக்க அதிபர் மிகுந்த மரியாதை நிமித்தமாக சந்திப்பு நிகழ்ந்தது. அதன் பின்னர் எலன் மாஸ்க் சந்தித்த போது அவரது குழந்தைகள் இருந்தனர் அது குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் எலன் மாஸ்கின் பிள்ளைகள் சென்றுள்ள இடங்களை பலரும் பார்க்கவே போவதில்லை.
வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பு முதல் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவும் தளத்தில் கட்டுப்பாட்டு அறைகள் வரை, எலன் மாஸ்கின் குழந்தைகள் – தொழில்நுட்பம், தொழில், இப்போது அரசியலிலும் - தங்கள் தந்தையின் முன்னெடுப்புகளில் எப்போதும் உடன் இருந்திருக்கின்றனர்.
அமெரிக்க அரசில் புதிதாக உருவாக்கப்பட்ட துறைக்கு தலைமையேற்க தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரரும் டெஸ்லா இணை நிறுவனருமான எலன் மஸ்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுத்த பின்னர், எலன் மஸ்கின் குழந்தைகள் தலைநகரில் அடிக்கடி தோன்றியிருக்கின்றனர்.
எலன் மாஸ்கின் 4 வயது மகன் "லில் எக்ஸ்", கோட் மற்றும் காலர் வைத்த சட்டையும் அணிந்து, ஓவல் அலுவலகத்தில், அதிபரின் மேசையின் மேல் காணப்பட்டார். கடந்த வியாழக்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவரது தொழில்நுட்பம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது, எக்ஸும் அவருடன் பிறந்த மற்ற இருவரும் பிரதமர் நரேந்திர மோதியுடன் பரிசுகளைப் பகிர்ந்துகொண்டனர். வாஷிங்டனுக்கு வருவதற்கு முன்னரும் எலன் மாஸ்க் தனது குழந்தைகளுடன் காணப்பட்டுள்ளார். துருக்கி அதிபருடனான சந்திப்பு, அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சி, 2021ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக எலன் மாஸ்கை அறிவித்து ஒரு பத்திரிகை நடத்திய விழா போன்றவற்றில் எலன் மாஸ்குடன் அவரது குழந்தைகளும் பங்கேற்றுள்ளனர்.பொது இடங்களில் தோன்றும் போது குழந்தைகளை அவருடன் வைத்துக் கொள்வது, அவரை மேலும் சிறந்தவராகக் காட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு அரசியல்வாதியின் முயற்சி அல்லது ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கையாகவே இதைப் பார்க்கலாம். எலன் மாஸ்க் மூன்று பெண்களை மணந்து அவர்கள் மூலம் 12 குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளார்
தற்போது 13 வது குழந்தைக்கும் தந்தை என டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் மீது அஷ்லே செயின்ட் கிளேர் என்ற இளம்பெண் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
காதலர் தினத்தன்று, எலான் மஸ்க் தன்னை கர்ப்பமாக்கியதாகவும், தனது 13வது குழந்தையின் தாயாக தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அஷ்லே செயின்ட் கிளேர் யார், இந்த விவகாரம் என்ன என்பதைப் பார்ப்போம்.அஷ்லே செயின்ட் கிளேர் ஒரு சமூக ஊடக பிரபலம் மற்றும் எழுத்தாளர். 'எலிஃபண்ட்ஸ் ஆர் நாட் பேர்ட்ஸ்' உட்பட பல கிறிஸ்தவ சிறுவர் புத்தகங்களை எழுதியுள்ளார். பல பிரபலங்களுடன் அஷ்லே புகைப்படங்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்க்கின் 13வது குழந்தையின் தாய் தான் என்றும், தனது மகனுக்கு 5 மாதங்கள் ஆவதாகவும் அவர் கூறுகிறார். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் பத்திரிக்கை ஒன்றில் அளித்த பேட்டியில், கர்ப்பமான பிறகு, எலன் மஸ்க் இந்த உறவை ரகசியமாக வைத்திருக்கச் சொன்னதாகவும், யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தடுத்ததாகவும் அஷ்லே கூறியுள்ளார்.
கருத்துகள்