மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் திங்கள்கிழமை முதல் ஔரங்கசீப்பின் கல்லறையை
அகற்றக் கோரி வலதுசாரி அமைப்பு நடத்திய போராட்டத்தின் போது இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறில் பதற்றம் அதிகரித்தது, இது நாசவேலை மற்றும் தீ வைப்புக்கு வழிவகுத்தது. 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது
நாக்பூரின் மஹால் பகுதியில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன, கற்கள் வீசப்பட்டன. கூடுதலாக, தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டன. இரண்டு ஜேசிபிகள் தீப்பிடித்து எரிந்ததாகவும், ஒரு தீயணைப்பு வீரர் காயமடைந்ததாகவும் தீயணைப்பு படை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். அவுரங்கசீப் விவகாரத்தில் நாக்பூரில் அமைதி மார்கத்தினர் வன்முறை. தேவேந்திர பட்னவிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். கலவரம் செய்த ஒருவரையும் விடப்போவதில்லையாம். குல்டாபாத் நகர், சத்ரபதி சம்பாஜி நகரிலிருந்து முன்னதாக ஒளரங்காபாத் 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது.
ஒளரங்கசீப்பின் கல்லறை இந்த நகரில் அமைந்துள்ளது. ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்று வருகிறது. ஒளரங்கசீப் கல்லறையின் நுழைவாயிலில் ஓர் அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.
இது பாதுகாக்கப்பட்ட சின்னம். இதைச் சேதப்படுத்துவோருக்கு இந்திய தொல்லியல் ஆய்வுச் சட்டத்தின் கீழ் 3 மாத சிறை அல்லது 5000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 300 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்பது குறித்து வரலாறு அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அஃப்சல் கானின் கல்லறை சத்ரபதி சிவாஜி மகராஜ் மற்றும் அவரது சந்ததியினரால் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது.
அப்படி, முகலாய கடைசி பேரரசர் ஒளரங்கசீப்பின் கல்லறையும் கடந்த 300 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது குல்டாபாத் மத மற்றும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டது. குல்டாபாத் பழங்காலத்தில் 'பூமியிலுள்ள சொர்க்கம்' எனறழைக்கப்பட்டது. பத்ர மாருதி இங்குள்ள புகழ்பெற்ற இஸ்லாமிய மதத் தலமாகும். குல்டாபாத் பகுதியில் கிரிஜி கோவில், தத் கோவில் ஆகியவையும் அமைந்துள்ளன.குல்டாபாத்தில் 52 பகுதிகள் உள்ளன. பிராமின் வாடா, பில் வாஜா, கும்பர் வாடா, சம்பர் வாடா, டோபி வாடா, சாலி வாடா, இமாம் வாடா ஆகியவை இதில் அடங்கும்.குல்டாபாத்தின் மக்கள் தொகை ஒரு லட்சத்து 40 ஆயிரம். வெருல் குகை முதல் ஒளரங்கசீப் கல்லறை வரை பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். உலகப் புகழ் பெற்ற வெருல் குகை குல்டாபாத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.டெல்லியின் பேரரசராக சகோதர்களைப் படுகொலை செய்து ஆட்சியில் இருந்த ஒளரங்கசீப், அகில்யாநகரில் (அப்போது அஹமத்நகர்) உயிரிழந்தார். அவரது உடல் அதன் பிறகு குல்டாபாத்திற்கு கொண்டு வரப்பட்டது.
தனது மரணத்திற்குப் பிறகு தனது தர்ஹா அல்லது சமாதி, ஆன்மீக ஆசான் சையத் ஜைனூதீன் சிராஜியின் சமாதிக்கு அருகிலிருக்க வேண்டும் என்று மன்னர் ஒளரங்கசீப் தனது உயிலில் எழுதியிருந்தார்.
ஒளரங்கசீப் படிக்கும் பழக்கம் கொண்டவர். இதில் அவர் சிராஜியை தொடர்ந்தார். அதன் பின்னர், சிராஜியின் அருகே கல்லறை கட்டப்பட வேண்டும் என ஒளரங்கசீப் தனது உயிலில் எழுதியிருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஒளரங்கசீப்பின் இறப்புக்குப் பிறகு, அவரது மகன் அஷம் ஷா அவரது கல்லறையை குல்டாபாத்தில் கட்டினார். ஒளரங்கசீப்பின் கல்லறை அவர் குருவாகக் கருதிய ஜைனுதீன் சிராஜியின் கல்லறைக்கு அருகே அமைந்துள்ளது.
அந்த நேரத்தில் இந்தக் கல்லறையைக் கட்ட 14 ரூபாய் 12 அணா செலவானதாகச் சொல்லப்படுகிறது.கடந்த கால வரலாற்றின் கசப்பான பக்கங்களை எடுத்து மத அரசியலுக்கு தீனி போட்டுள்ளது, சாவா (chavva) திரைப்படம். இது சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு சம்பந்தப்பட்டதாகும். மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள இந்தப் படத்தை லக்ஷமன் உடேகர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விக்கி கவுஷால் மராத்திய மன்னர் சம்பாஜி மகாராஜாவாகவும், அக்ஷய் கண்ணா ஔரங்கசீப்பாகவும் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் முகலாயர்களுக்கு எதிரான மராத்திய மன்னனின் வீரஞ்செறிந்த போராட்டத்தையும்,இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டதையும் கொடூரமாக சித்தரிக்கிறது.
எனவே, இந்தப் படம் ஹிந்துத்துவ உணர்வையும், மராத்திய இன உணர்வையும் ஒருசேர உசுப்பி இஸ்லாமியர்களுக்கு எதிரான சிந்தனையோட்டத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதை திரைப்பட தணிக்கை துறை உணர்ந்து கைவைக்க வேண்டிய இடங்களில் கை வைத்திருக்கலாம் ஆனால் தவற விட்டு விட்டு
இன்றைக்கு மகாராஷ்டிராவில் நாக்பூர் தீ பிடித்து எரிகிறது. பாபர் மசூதி பிரச்சினைகள் போல ஔரங்கசீப் சமாதியை இடிக்க ஒரு வலதுசாரிக் கூட்டம் கிளம்பியது. நாக்பூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளம் நடத்திய போராட்டத்தில் மதச் சண்டைக்கு அம்சங்கள் தூக்கலாக வெளிப்பட்டது. இதற்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் இரு பிரிவுகளும், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.
இந்தப் படத்தை குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியுள்ளது இதன் ஒப்புதல் வாக்குமூலமாகிறது.
"சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வரலாற்றை ‘சாவா’ திரைப்படம் மக்களுக்கு எடுத்துச் சொன்னதன் மூலம் அவர்களின் உணர்ச்சிகளைத் துண்டிவிட்டுள்ளது. அத்துடன், முகலாய மன்னர் ஔரங்கசீப் மீதான பொதுமக்களின் கோபத்தையும் அந்தப் படமே தூண்டிவிட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார், தேவேந்திர பட்னாவிஸ்.
இது ஒருபுறமிருக்க, மராட்டிய மாநிலத்தில் சட்டப் பேரவையின் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய சமாஜ்வாதி கட்சி சட்ட மன்ற உறுப்பினர் அபு ஹாஸ்மி, ‘’ஔரங்கசீப் நடவடிக்கையை பாராட்டியதுடன், அவரது புகழ் வாழ்க’’ என கோஷமிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்துள்ளார். இந்த வார்த்தை ஹிந்துக்களை உசுப்பிவிட்டு, இஸ்லாமியர்களின் இயல்பு வாழ்க்கைக்கு உலை வைக்கும் என்ற அடிப்படை சிந்தனை கூட அவருக்கு இருக்காதா? அல்லது அரசியல் ஆதாயத்திற்காக இஸ்லாமியர்களின் வாழ்வை பணயம் வைத்தாரா? என்பது தெரியவில்லை.
வாழ்ந்து முடிந்தவர்களின் வரலாற்றை தோண்டி எடுத்து பார்ப்பதன் மூலம் நிகழ்கால வாழ்வை நரகமாக்கிக் கொள்வதற்கான புரிதலை தருவது நல்ல படைப்பாகாது. மாறாக, கடந்த கால தவறுகளை மீண்டும் யாரும் செய்துவிடாதபடிக்கு சகோதர இணக்கத்தையும், சகிப்புத் தன்மையையும் ஏற்படுத்துவதே ஆகச் சிறந்த படைப்பாகக் கருத முடியும்.
கருத்துகள்