பொதுக் கோவிலுக்கு உரிமை கோர.எந்த ஒரு தனிப்பட்ட ஜாதியினருக்கும் உரிமை இல்லை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
எந்த ஒரு தனிப்பட்ட ஜாதியினரும் பொதுக் கோவிலுக்கு உரிமை கோர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
அருள்மிகு பொன்காளியம்மன் கோவிலின் நிர்வாகத்தை அருள்மிகு மாரியம்மன், உள்ளிட்ட அங்காளம்மன் மற்றும் பெருமாள் கோவில்களிலிருந்து பிரிக்கும் பரிந்துரையை அங்கீகரிக்க
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்கு (HR&CE) உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவின் மீது நீதிமன்றம் இக் கருத்தைத் தெரிவித்தது.
மனுதாரர், மற்ற மூன்று கோவில்களும் பல ஜாதிகளைச் சேர்ந்த தனிநபர்களால் நிர்வகிக்கப்படுவதாகவும், அருள்மிகு பொன்காளியம்மன் கோவில் கடந்த கால வரலாற்று ரீதியாக தனது ஜாதியைச் சேர்ந்தவர்களால் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருவதாக வாதிட்டார். இருப்பினும், மனுதாரரின் நிலைப்பாட்டை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது, இதுபோன்ற கூற்றுக்கள் ஜாதிப் பிளவுகளை நிலைநிறுத்துகின்றன, ஜாதியற்ற சமூகம் என்ற அரசியலமைப்பின் இலக்கிற்கு முரணாக உள்ளன என வலியுறுத்தியது.
மனுவின் கோரிக்கையானது " ஜாதி நிலைத்திருப்பதோடு, சக மனிதர்கள் வெவ்வேறு உயிரினங்களைப் போல வெறுப்பையும்" வெளிப்படுத்துவதாகக் கூறியது.
"இக் கோவில் ஒரு பொதுக் கோவில், எனவே, அனைத்து ஜாதி சார்ந்த பக்தர்களும் வழிபடலாம், மற்றும் நிர்வகிக்கலாம், ஜாதி ஒரு சமூகத் தீமை, ஜாதியை நிலைநிறுத்துவதற்கான எதையும் எந்த நீதிமன்றமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்திய முந்தைய தீர்ப்புகளையும் நீதிபதி பரத சக்கரவர்த்தி குறிப்பிட்டார்.
காசி விஸ்வநாதர் கோவிலின் ஸ்ரீஆதி விஸ்வேஷ்வரா எதிர் உத்திரப் பிரதேச மாநிலம் வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, ஜாதி அடிப்படையில் கோவில் நிர்வாக உரிமையைக் கோர முடியாது என்றது.
இந்திய அரசியலமைப்பின் 25 மற்றும் 26 வது பிரிவுகளின் கீழ், தனித்துவத் தத்துவத்தைப் பின்பற்றும் அத்தியாவசிய மத நடைமுறைகள் மற்றும் மதப் பிரிவுகள் மட்டுமே பாதுகாப்பிற்கு உரிமை உண்டு என்பதை அது வலியுறுத்தியுள்ளது."எனவே, குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே கோவில் சொந்தம் அல்லது ஜாதி உறுப்பினர்கள் மட்டுமே கோவிலின் அறங்காவலர்களாக இருக்க முடியும் என்ற கூற்று, பிரிவு 25 மற்றும் 26 ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளின் விதிவிலக்குகளுக்குள் வராது, எனவே, மதச்சார்பற்ற கட்டமைப்பிற்குள் இது பரிசோதனைக்கு உட்பட வேண்டும், எனவே, ஜாதி நிலைத்திருப்பதற்கு எதிரான அரசியலமைப்பு இலக்கு மற்றும் பொதுக் கொள்கையின் ஆய்வுகளை தாங்க முடியாது," என்ற நிலையில் மனுவை தள்ளுபடி செய்வதற்கு முன்பு குறிப்பிட்டது.
ஜாதியின் பெயரால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சமூகக் குழுக்கள் வழக்கமான வழிபாட்டு நடைமுறைகளை மேற்கொள்ள உரிமை பெற்றிருக்கலாம், ஆனால் ஒரு ஜாதி மட்டும் பாதுகாக்கப்பட்ட 'மதப் பிரிவு' அல்ல என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி கருத்து தெரிவித்தார்.
(சி கணேசன் //எதிர் //இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், ) வழக்கில் குறிப்பிட்டது.
கருத்துகள்