கோயம்புத்தூர் வாங்கிய லஞ்சதை கோவில் குளத்தில் வீசி தப்பிக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் கைது பணம் பறிமுதல்
கோயம்புத்தூர் தொம்பிலிபாளையம் கிருஷ்ணசாமி.
தனக்கு வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார்.
சான்றிதழ் சட்டப்படி வரவேண்டிய நாட்கள் கடந்த நிலையில் வழங்குவதற்கு தாமதம் ஆன நிலையில் மத்வராயபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று அங்கு கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலை, கிருஷ்ணசாமி அணுகிய போது வெற்றி வேல், வாரிசு சான்றிதழ் தரவேண்டுமானால் ரூபாய் 3500 ஐ லஞ்சமாகத் தரவேண்டும் எனக் கேட்டதாகத் தெரிகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி ரூபாய் 3500 லஞ்சத்தை கொடுக்க மறுத்தார்."வாரிசு சான்றிதழுக்காக எல்லா ஆவணங்களும் சரியாக இணைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது எதற்காக ரூபாய் 3500 தர வேண்டும்" என கிருஷ்ணசாமி, வெற்றிவேலிடம் கேட்ட நிலையில்
அதில் கோபமான கிராம நிர்வாக அலுவலர் "பணம் கொடுக்காமல் நீ எப்படி சர்டிபிகேட் வாங்குறேனு பார்க்கிறேன்" என்ற படியே வெற்றிவேல், வாரிசு சான்றிதழைத் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது. முறையான ஆவணங்கள் இருந்தும் சான்றிதழ் கேட்டு அலைந்து நடையாய் நடந்த கிருஷ்ணசாமி, இந்த விவகாரத்தை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் தெரிவித்தார். அதையடுத்து கிருஷ்ணசாமி கொண்டு வந்த பணம் அரசு சாட்சிகள் முன்னிலையில் பினாப்தலின் இரசாயனப் பொடி கலந்த ரூபாய் நோட்டுகளை திரும்ப கிருஷ்ணசாமியிடம் கொடுத்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் லஞ்ச ஒழிப்பு துறையினர், அதை லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலிடம் கொடுக்குமாறு கூறினர். அதையடுத்து இரவு, வெற்றிவேலுக்கு போன் செய்த கிருஷ்ணசாமி, "சார் நீங்கள் கேட்ட பணம் தரத் தயாராக இருக்கிறது. எனக்கு வாரிசு சான்றிதழ் கொடுத்துடுங்க, பேரூர் கிட்ட இருக்கேன், வந்து பணத்தை வாங்கிக்கோங்க" எனக் கூறிய நிலையில்.
அதையடுத்து வெற்றிவேலும், "அப்படிவா வழிக்கு" எனக் கூறிய நிலையில் பேரூருக்கு சென்றார். அங்கு கிருஷ்ணசாமியிடம் ரூபாய் 3500 பணத்தை கிராம நிர்வாக அலுவலர் பெற்ற போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை பிடிக்க முயன்றனர்.
அதனால் அதிர்ச்சியடைந்த வெற்றிவேல், தனது பைக்கில் தப்பிச்செல்ல முயன்ற நிலையில். சிறிது தூரத்தில் பேரூர் பெரியகுளத்திற்குள் பணத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல் குதித்தார். அவரை துரத்தி வந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் லஞ்ச ஒழிப்புத் துறையினரும் குளத்தில் குதித்து வெற்றிவேலைப் பிடித்தனர். எனினும் இரசாயனம் தடவிக் கொடுத்த பணம் குளத்தில் விழுந்து விட்டது.
அதையடுத்து வெற்றிவேலை பேரூர் தாலுகா அலுவலகத்திற்கு கூட்டி வந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். இதே வேளையில் குளத்தில் விழுந்த இரசாயனப் பொடி தடவிய பணத்தைத் தேடி எடுத்தனர். அதையடுத்து வெற்றிவேலை சோடியம் கார்பனேட்டு கரைசல் சோதனைக்கு உட்படுத்திய ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்
கருத்துகள்