ஒருங்கிணைந்த மதுரை ஜில்லா தற்போது தேனி மாவட்டத்தில்
உத்தமபாளையம் தாலுகா, பண்ணைப்புரத்தில் கரியமனம்பட்டி பாவலர் வரதராஜனின் தம்பிகள் ஒரே தந்தையின் இரு தாய் மக்கள்
எஸ்டேட் கங்காணியாக பட்டியல் ஜாதி மக்கள் பகுதியில் பிறந்தாலும் அணைத்து மக்கள் வாழ்வில் கலந்து கம்யூனிஸ சித்தாந்தம் கொண்ட பாடல்கள் மூலமாக அழகிய இசைப்பயணம் வந்தவர்கள். வரதராஜனின் தம்பி இராஜையாவாக தெருக் கச்சேரி கடந்து அண்ணக்கிளி திரைப்படத்தில் தூயவன் மூலம் பஞ்சு அருணாசலம் அறிமுகம் செய்து பிரபலமான இசைஞானியாக இந்தியத் தெருக்களில் வலம் வந்த செல்லப்பிள்ளை நமது இளையராஜா ஆனால் இன்று உலகில் யாராலும் நினைத்துப் பார்க்காத ஒரு சாதனை!
பல ஆண்டுக்கணக்கில் யோசித்து எழுதப்படும் இசைக் குறிப்பு சிம்பொனியை 34 நாட்களில் எழுதி முடித்துள்ளார், இசையமைப்பாளர் இளையராஜா!
மார்ச் மாதம் 8- ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் ஈவெண்டிம் அப்பல்லோ அரங்கில் வேலியன்ட் (Valiant) பெயரில், இளையராஜா உருவாக்கிய முதல் சிம்ஃபொனி வெளியிடப்பட்டது இலண்டன் செல்வதற்கு விமான நிலையத்திற்கு வந்த இசையமைப்பாளர் இளையராஜாவை அங்கிருந்த செய்தியாளர்கள் மறித்துக் கேட்க
அவர் மகிழ்ச்சியோடு பேட்டி தருகிறார். மகிழ்வில் திளைத்த அவரது முகம் சட்டென்று அதிர்ந்து மாறும்படி, அந்தச் சூழலுக்கு தேவையற்ற கேள்விகளும் வீசப்படுகிறது!
முக்கிய இசைக் கலைஞானியுமான பிரமுகரிடம் எந்தத் தருணத்தில் பேட்டி எடுக்கிறோமோ, அது தொடர்பான கூடுதல் விபரம் தெரிந்தது கொண்ட பின்னர் விளக்கத்தையோ, தகவல்களையோ பெறுவதற்காக கேள்விகள் கேட்டிருந்தால், அது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
ஆனால், அந்தச் சூழலுக்கு முற்றிலும் பொருத்தமற்ற ஒரு கேள்வியை, பரபரப்புக்காக கேட்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். அவர் முகம் வாடியதையும், மகிழ்வான தருணம் மாறி உள்ளத்தில் கொந்தளிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவர் மேலும் பேசியதையும் பார்த்த போது மனம் பதைத்தது, அவரை மிகத் தீவிரமாக நேசிக்கும் பல கோடி ரசிகர்கள் மனம் துடித்திருக்கும். இது ஊடகத்தினர் மீதுள்ள மரியாதையைத் தகர்த்துவிடும் என்பதை அறியாத அறிவிலிகள் வந்த நிலையில்.
இளையராஜா மீது நமக்கு ஆயிரம் தனித்த விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தும் சமயத்தில் – அந்தச் சாதனையில் ஒட்டுமொத்த இந்தியாவும், தமிழ் மொழி சார்ந்த சமூகமும் பெருமைப்படலாம். சமயத்தில் இவற்றையெல்லாம் புறந்தள்ளி அவரைக் கொண்டாடி மகிழ வேண்டியது ஊடகத்தின் கடமை.
தமிழ் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் இந்த இளம் பத்திரிகையாளர்களை சரியாக வழி நடத்த வேண்டும் என்பதே நமது அவா.. இசைஞானி இளையராஜா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வருத்தப்பட்ட நிகழ்வையே பிரேக்கிங் செய்தியாக்கி, பார்வையாளர்கள் கவனத்தை ஈர்க்கும் முன்னெடுப்புகள் கவலையளிக்கிறது. இந்த அளவுக்கு விவஸ்தையில்லாமல் ஊடகங்கள் வேகமாக பயணிப்பதிலிருந்து எப்போது விடுபடுவார்களோ..? தெரியவில்லை.
கடந்த அரை நூற்றாண்டாக நம் வாழ்வில் இன்ப, துன்பங்களில் இணைந்து பயணிக்கும் அவரது இசைச் சேவைக்கு அவரை வாழ்நாளில் மரியாதையோடு மகிழ்விக்க வேண்டும்.
கட்சி சார்ந்து, அரசியல் சார்ந்து, அதிகார மையங்கள் சார்ந்து..அவர் இயங்கும் தருணங்களில் நாம் அவரோடு முரண்படலாம். அது அந்தத் தருணத்தின் வெளிப்பாடு தானேயன்றி, அதுவே நிரந்தரமானதல்ல!
இசைஞானி இளையராஜா தமிழ் சமூகத்தின் மாபெரும் பொக்கிஷம்! அதே சமயம் நாம் மட்டுமே அவரைக் கொண்டாட முடியாத அளவுக்கு இன்று அவர் சர்வதேசங்களின் பொதுச் சொத்தாகி விட்டார். உலகில் மொழி புரியாதவர்கள் கூட இளையராஜாவின் இசையில் மயங்குகிறார்கள்!
அந்த வகையில் நம்மை 400 ஆண்டுகள் ஆண்ட ஆங்கிலத்தை நமது இசை நேற்று ஆள்வது தான் அந்த மகிழ்ச்சி. காதுள்ள அனைத்து இசை ரசிகர்களுக்குமே அவர் காதலராகத் திகழ்கிறார். பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் நாமும் வாழ்த்துவோம்..
அவர் கடந்து வந்த பாதையிலிருந்து... இசைஞானி இளையராஜாவை! முதலில் சிம்பொனி என்றால் என்ன? என்பது அணைவரும் அறிய வேண்டும்.
ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் நான்கு பகுதிகளாகச் சொல்வதற்குப் பெயர் தான் சிம்பொனி எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவு தான்.
உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ராக்கள் உள்ளது. அதில் முக்கியமானவை:
1.சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra)
2.சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra).
16 ஆம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாகக் கலந்தே இருந்த காலம். இசையை மட்டும் தனியாகக் கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது தான் சிம்பொனி! இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டு வந்து இதை புகழ் பெற வைத்தவர் Father of Symphony என்று அழைக்கப்படும் ஜோசப் ஹைடன் (1732 ஆம் ஆண்டு முதல் 1809 ஆம் ஆண்டு வரை). உள்ள காலத்தில் வாழ்ந்தவர் மொசாட் மற்றும் பீத்தோவன் இருவருக்கும் இவர் தான் குருநாதர்.
மீண்டும் சிம்பொனிக்கு வருவோம்.
ஒரு இசை வடிவம் எப்பொழுது சிம்பொனி என்று அழைக்கப்படுகிறது? ஒரு சிம்பொனி எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்? எத்தனை இசைக் கருவிகள் பயன்படுத்த வேண்டும்? எவ்வளவு இசைக் கலைஞர்கள் பங்குபெற வேண்டும்? என்பது முக்கியம்.
ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும். 18 முதல் 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும்.
இந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் கூட அது சிம்பொனி ஆர்கஸ்ட்ரா என்று அழைக்கப்படமாட்டாது. மாறாக அது சேம்பர் ஆர்கஸ்ட்ரா என்று தான் அழைக்கப்படும்.
ஏன் இதற்கு இவ்வளவு கட்டுபாடுகள்? எனப் பார்த்தால்.
இதற்கு சிம்பொனி எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டால் இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
சிம்பொனி நான்கு பகுதிகளாக இசைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் பார்த்தோம். இப்போது அந்த நான்கு பகுதிகள் எவை? அது எப்படி இருக்க வேண்டும்?
இதை விளக்குவதற்கு இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். 1. The Fast Movement:
காலையில் திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. இது துவக்க நிலை உறவினர்கள், நண்பர்கள், முக்கியப் பிரமுகர்கள் போன்ற அணைவரும் அங்கு வருகை தர ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் கோலாகலமாக இருக்கும். இதை குறிப்பதற்கு இசைத் துள்ளலாக, கொஞ்சம் அதிரடியாக இருக்க வேண்டும். -விளம்பரம்-
-விளம்பரம்-2.The Slow Movement:
இப்போது அரண்மனைக்குள் அனைவரும் செட்டில் ஆகியிருப்பார்கள். மணமகன், மணமகள் அங்கு தோன்றுவார்கள். இப்போது துவக்க நிலை இசையை நன்றாக விரிவுபடுத்தி இசையின் ஆழத்திற்குச் செல்ல வேண்டும். இந்த பகுதி அமைதியானதாக இருக்க வேண்டும். மெலடி டியூன்ஸ் இங்கு அதிகம் வாசிக்கப்படும்.
3. The Dance Number:
திருமணம் முடிந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கிறது. இப்போது அந்த இடம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். இதை குறிக்கும் வகையில் இசை என்பது நடனம் ஆடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். 4. An Impressive Fast Movement:
இப்போது அரண்மனைக்குள் தீ பிடித்து விடுகிறது. அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் பதட்டமாக இருக்கும். இதுதான் சிம்பொனியின் உச்சகட்டம். இங்கு இசையில் நிறைய பரிசோதனைகள் செய்து பார்க்கப்படும். இங்கு இசையமைப்பாளர் தன் முழு திறமையையும் காண்பித்து சிம்பொனியை நிறைவு செய்வார்.
இந்த நான்கு பகுதிகளையும் உருவாக்குவதற்கு தான் இருபது நிமிடங்களுக்கு மேல் இசை தேவைப்படுகிறது. இதற்குத்தான் எண்பதுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.
மிக முக்கியமாக, சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்கு உள்ளே உருவாக்கி பின்னர் அதை வெளியிடக் கூடாது. ஒரு பெரிய அரங்கத்தில் 80 க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களோடு, ஒவ்வொரு இசையையும் இருபது நிமிடங்களுக்கு மேல் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இசைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது சிம்பொனியாகக் கருதப்படும்.
"நேற்று இல்லே நாளை இல்லே. எப்பவும் நான் ராஜா. கோட்டையில்லே. கொடியுமில்லே. அப்பவும் நான் ராஜா...... ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா." இளையராஜா.
கருத்துகள்