நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரத்தில் இறுதி முடிவை தலைமை நீதிபதி எடுப்பார்
டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வந்த யஷ்வந்த் வர்மாவின் அரசு இல்லத்தில், பொருட்கள் வைக்கும் அறையில் மார்ச் மாதம் 14-ஆம் தேதி இரவு தீப்பிடித்து. எரிந்த நிலையில் பணக் கட்டுகள் சிக்கியது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தெரிவிக்கப்பட்ட உடன் கொலீஜியத்தில் ஆலோசனை நடத்தி, யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உபாத்யாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக கூறப்படும் பணத்துக்கும், தனது குடும்பத்தினருக்கும் சம்பந்தமும் இல்லை, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த நடந்த சதி என நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம் அளித்தார். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய உள் விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்ததில் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தவாலியா, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல்நாகு, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் இடம் பெற்றனர்.
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், காவல் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வழக்கறிஞர் நெடும்பாரா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, தீ விபத்து குறித்தோ, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணம் கண்டுபிடிக்கப்பட்டது குறித்தோ என் எஃப்.ஐ.ஆர் பதிவு
செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழுவின் அதிகார வரம்பு குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா விசாரணைக் குழு முன் ஆஜராவதற்கு முன்பு வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
நீதிபதி வர்மாவோ, அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ தனது வீட்டின் சேமிப்பு அறையில் ஒருபோதும் பணத்தை வைத்ததில்லை என்று கூறினார். எரிந்த பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் தனது இல்லத்திலிருந்து டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, புதன்கிழமை உள் விசாரணைக் குழுவின் முன் ஆஜராவதற்கு முன்பு வழக்கறிஞர்கள் குழுவைச் சந்தித்தார்.
ஆதாரங்களின் படி, உயர் நீதிமன்ற நீதிபதி, மூத்த வழக்கறிஞர்களான சித்தார்த் அகர்வால், மேனகா குருசாமி, அருந்ததி கட்ஜு மற்றும் வழக்கறிஞர் தாரா நருலா ஆகியோரிடமிருந்து சட்டக் கருத்தைக் கேட்டார். அவர்கள் லுட்யன்ஸ் டெல்லி இல்லத்திற்குச் சென்றனர். உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு இந்த வாரம் நீதிபதி வர்மாவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தும் குழு, செவ்வாய்க்கிழமையன்று அவரது 30 வது துக்ளக் கிரசென்ட் இல்லத்திற்குச் சென்றது. பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் நீதிபதி வர்மாவின் இல்லத்தில் சுமார் 30 முதல் 35 நிமிடங்கள் பார்வைமிட்டு அங்கு இருந்தனர்.
நீதிபதி உஜ்ஜல் பூயானுடன் கூடிய அமர்வுக்கு தலைமை தாங்கும் நீதிபதி ஏ.எஸ்.ஓகா, “தற்போது, உள் விசாரணை நடந்து வருகிறது. அறையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணத்துக்கு நீதிபதி வர்மா எவ்வாறு கணக்கு காட்டுகிறார்; பணத்துக்கான ஆதாரங்கள் குறித்து மார்ச் மாதம் 15 ஆம் தேதி அன்று அறையிலிருந்து அதை யார் அகற்றினார்கள் எனும் மூன்று கேள்விகளை குழு ஆழமாக ஆராய்ந்து வருகிறது. குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தவுடன், இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு முன் அனைத்து கருத்துக்களும் உள்ளது. எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்கு அவர் ஒப்புக் கொள்ளலாம் அல்லது நீதிபதியை நீக்குவதற்காக குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு அனுப்பலாம்” என வழக்கறிஞரும் மனுதாரருமான மேத்யூஸ் ஜே.நெடும்பராவிடம் கூறினார்.
யஷ்வந்த் வர்மாவின் வழக்கு தொடர்பாக உள் விசாரணை நடந்து வருவதால் இந்த மனுவை ஏற்றுக்கொள்வது பொருத்தமற்றது எனத் தீர்ப்பளித்துள்ள அமர்வு, மனுவில் முன்வக்கப்படும் கோரிக்கைகள் தற்போதைய கட்டத்தில் ஆராய வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்குவது என்பது இந்திய அரசியலமைப்பின் கீழ் ஒரு கடினமான நடைமுறையே.
Misconduct or Incapacity ஆகிய இரு காரணங்களுக்காகப் பதவி நீக்கம் செய்யலாம்.
C.ரவிச்சந்திரன் ஐயர் vs Justice A.M.பட்டாச்சாரியா& பலர் வழக்கில் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதான தவறான நடத்தை தொடர்பான புகார்களை விசாரிக்க In-house Procedure முறையை உச்சநீதிமன்றம் உருவாக்கியது.
நீதிபதி மீது எழுத்துப்பூர்வமாக தலைமை நீதிபதிக்கு (CJI) புகார் அளிக்க வேண்டும்.
புகாரில் முகாந்திரம் இருந்தால் தலைமை நீதிபதி (CJI) மூன்று மூத்த நீதிபதிகள் கொண்ட குழுவினை அமைத்து நீதிபதியின் நடத்தை குறித்து விசாரிக்கப்படும்.
புகார் உறுதியானால், நீதிபதியை ராஜினாமா செய்ய அறிவுரை வழங்கப் படும். நீதிபதி ராஜினாமா செய்ய மறுத்தால், அந்த அறிக்கை பதவி நீக்க நடவடிக்கை வேண்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் படும்.
பதவி நீக்க நடை முறை யாதெனில்
1.நாடாளுமன்ற மக்களவை 100 உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களவை 50 உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் தீர்மானம் முன்வைக்கப்பட வேண்டும். 2. ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மற்றும் ஒரு பிரபல சட்ட அறிஞர் அடங்கிய மூன்று உறுப்பினர் கொண்ட குழுவிற்கு சபாநாயகர் அல்லது தலைவர் விசாரணைக்கு பரிந்துரைப்பார். 3. இந்தக் குழு குற்றச்சாட்டுகளை விசாரித்து, ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும். 4. குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் இரண்டு அவைகளிலும் (லோக்சபா மற்றும் ராஜ்யசபா) இந்தத் தீர்மானம், அவையின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மையாலும், மற்றும் கலந்து கொண்ட மற்றும் வாக்களித்த உறுப்பினர்களின் 2/3 பகுதி பெரும்பான்மையாலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
5.இரண்டு அவைகளின் அங்கீகாரத்திற்குப் பிறகு, ஜனாதிபதி நீதிபதியை நீக்க உத்தரவு பிறப்பிக்க இயலும்.
இதே நடைமுறை தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கத்திற்கும் பின்பற்ற படும்.
இந்தியாவில் இதுவரை இந்த நடைமுறை மூலம் எந்தவொரு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியோ உயர்நீதிமன்ற நீதிபதியோ பதவி நீக்கம் செய்ய பட்டதில்லை. என்பது தான் உண்மை
கருத்துகள்