இராமநாதபுரம் காவல்துறை சரகத்தின் டி.ஐ.ஜி.,
திருநெல்வேலி சரகத்தின் டி.ஐ.ஜி., உள்ளிட்ட ஐ.பி.எஸ்., உயர் அலுவலர்கள்பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் ஜாகிர் உசேன் திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட நிலையில், திருநெல்வேலி சரகத்தின் டி.ஐ.ஜி., பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.ஐ.பி.எஸ்., உயர் அலுவலர்கள் இடமாற்றம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் உள்ளதாவது:
இராமநாதபுரம் சரக காவல்துறை டி.ஐ.ஜி., அபிநவ் குமார் - மதுரை சரகத்தின் டி.ஐ.ஜி., யாகவும்
திருநெல்வேலி சரகத்தின் டி.ஐ.ஜி., மூர்த்தி - இராமநாதபுரம் சரகத்தின் டி.ஐ.ஜி.,யாகவும்
திருநெல்வேலி காவல்துறை ஆணையர் சந்தோஷ் ஹதிமானி திருநெல்வேலி சரகத்தின் டி.ஐ.ஜி., பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார்.
திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சுஜாதா- ஈரோடு மாவட்டக் காவலதுறை கண்கானிப்பாளராகவும் ஈரோடு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர்- சிபிசிஐடி வடக்கு மண்டல காவல்துறை கண்காணிப்பாளராகவும் சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையர் சக்திவேல் - சென்னை மாநகரக் காவல்துறை உளவுப்பிரிவின் துணை ஆணையராகவும்சென்னை கிழக்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் பாஸ்கரன் - சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராகவும்
சென்னை காவல்துறை நலன் மற்றும் எஸ்டேட் பிரிவு துணை ஆணையர் மேகலினா ஐடன்- சென்னை கிழக்கு போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையராகவும்.
சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் - சென்னை மாநகர் காவல்துறை நலன் மற்றும் எஸ்டேட் பிரிவுத் துணை ஆணையராகவும்
பழனி தமிழ்நாடு காவல்துறை சிறப்பு படை பிரிவு 14வது பெட்டாலியன் கமாண்டன்ட் கார்த்திக் - சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்