கடந்த காலங்களில் சிவகாசி தியேட்டரில் இன்று முதல் நான்கு காட்சிகள் என மைதா மாவு பசை வாளியுடன் தெருவில் சுவரொட்டி ஒட்டி வந்த ராஜேந்திரன்
பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற சுந்தர்ராஜன் எடுபிடி உதவியாளரான பின்னர் வாழ்க்கையில் பெயர் மாற்றம் செய்து ராஜேந்திர பாலாஜியாக மாறினார். அமைதிப்படை திரைப்பட அம்மாவாசை எப்படி நாகராஜ சோழனாக மாறி பின்னர் சோழர் பரம்பரையில் ஒரு எம் எல் ஏ ஆன கதை போல அதிர்ஷ்டக் காற்று இவர் பக்கம் வீசுகிறது கேரளத்தின் பணிக்கர் ஜோதிடம் பாலாஜி ஜாதகம் கொண்ட நபர்களைத் தேர்வு செய்ய அவரது மம்மி எனும் செல்வி ஜெ.ஜெயலலிதா எனும் அவரது அம்மா நம்பிய நிலையால் முதலில் சட்ட மன்ற உறுப்பினர் வாய்ப்புகள் வழங்கவே
வெற்றி பெற்ற நிலையில் வாழ்வு அந்த விஸ்வகர்மாவின் மகனுக்கு திசை மாறிப் பிறந்தது பின்னர் மூன்று எழுத்தில் பெயர் கொண்ட எம்ஜிஆர் போல கே.டி.ஆர். ஆனார் 12 ஆண்டுகள் திருத்தங்கல் நகரத்தின் அதிமுக செயலாளராகவும் , 10 ஆண்டுகள் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளராகவும் , விருதுநகர் மாவட்டச் செயலாளராக 13 ஆண்டுகளாகவும் செயல்படுகிறார்.
கடந்த 35 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்ட அதிமுகவில் முக்குலத்தோர் மற்றும் நாடார் சமூகத்தினர் அதிகமாக வாழும் பகுதிகளில் பகுதி மைனாரிட்டி சார்ந்த இவர் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகவே வலம் வருகிறார். ஹிந்து மதம் சார்ந்த சிறுபான்மை சமுதாயத்தை சார்ந்தவர் பல்வேறு பெரும்பான்மை ஜாதியச் சிந்தனை வேரூன்றி இருக்கும் விருதுநகர் மாவட்ட அரசியலில் இவர் ஊழல் வாதியாக இருந்த போதிலும் ஏழை மக்களின் நட்சத்திரமாக விளங்குவதும் மற்றொரு சிறப்பு. திமுகவில் முக அழகிரி தென்மண்டலச் செயலாளராகவும் மத்திய உரத்துறை அமைச்சராகவும் பொறுப்பில் கோலோச்சிய காலத்திலேயே எதிர்க்கட்சியாக அதிமுக இருக்க ஒரே நாளில் மாவட்ட இளைஞரணிச் செயலாளராக 123 இடங்களில் அதிமுக கொடிகளை ஏற்றியதே இவரின் சாதனையாக அப்போது செல்வி ஜெ.ஜெயலலிதா பார்த்தார், இதனாலயே அவரது மம்மி எனும் அம்மாவின் குட் புக்கில் நிரந்தரமாகவே இடம் பிடித்தார். டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி யாகட்டும் , நடிகர் கமலஹாசனாகட்டும் யார் அதிமுகவிற்கு எதிராகப் பேசினாலும் முதலில் அவர்களுக்கெதிராக அவருக்கே உரிய முறையில் பதிலடி கொடுப்பது இந்த கே.டி.ஆர் தான். வியர்வை வழிய வழிய உழைப்பு மற்றும் அதை நகைச்சுவை ததும்ப கிராமிய உச்சரிப்புடன் ஆக்ரோஷமாகவே பேசும் இவரது ஸ்டைலுக்கு எதிர் முகாமிலும் சிரிப்பு ரசிகர்கள் உண்டு.
வெள்ளந்தியாக இவர் அரசியல் கலந்து இவர் அளித்த தொலைக்காட்சி பேட்டிகள் இன்று வரை வைரலாகும் நிலையில். இவர் சமூக வலைதள வாசிகளுக்கு சிறந்த கன்டென்ட் மேக்கர் என்றால் அதுவும் மிகை இல்லை. அதேபோல் செல்வி ஜெ.ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி இவரது டாடி யானார். அரசியல் பல்டி தான் இருந்தாலும் அதில் ஒரு ஹாஸ்யம் உண்டு. கேடி. ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த அதிமுக தொண்டர்களால் கேடி.R என்று அன்போடு அழைக்கப்படுகின்றார். அந்தக் கட்சியின் தொண்டர்கள் அணுகுவதில் அவரது எளிமையாகவும், எளியவர்களுக்கு உதவும் பண்பும் இவரை தொண்டர்களின் விருப்பத் தலைவராகவே விளங்குகிறார். இவரின் தந்தை தவசிலிங்கம் ஆசாரி. இவரது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகிலுள்ள குருந்தமடம் கிராமம். உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்ட காரணத்தினால் திருமணம் செய்துகொள்ளவில்லை. வெள்ளைச் சட்டை அணிந்த நிலையில் செல்வி.ஜெ.ஜெயலலிதா எனும் அவரது மம்மி மரணத்திற்கு பிறகு. சில காலம் இவரால் அதிமுகவில் மஞ்சள் சட்டைப் படை ஒன்று உருவானது. இது இவர் குறித்த சொந்தத் தகவல் இனி அரசியலுக்கு வருவோம்.
சமீபத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகியை கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று கட்சியினர் மத்தியில் விளக்கமளித்துள்ளார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி இரவு நடைபெற்றதில் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார். அமைப்புச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சரும் பல கட்சி தாவல் செய்த மாஃபா. பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அதில் நடந்த சம்பவம் இப்போது பேசு பொருளாக மாறியது. "என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. விருதுநகரில் அதிமுகவினர் மீது காவல்துறை பொய்வழக்குப் போடமுடியுமா? அதிமுகவை வாழவைக்க எந்த நிலைக்கும் நான் செல்வேன். எடப்பாடிக்கு எதிராக யார் வந்தாலும் அரிவாள், துப்பாக்கி ஏந்தி நிற்பேன். உன்னால் முடியுமா? என்று ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார். வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அதிமுக இயக்கத்தில் தான் இருப்பேன். அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எடப்பாடிக்கு குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. அதிமுகவில் நான் ஒரு குறுநில மன்னர் தான். எனக்கு பின்னால் உள்ள அதிமுக தொண்டர்கள் வாள் ஏந்திய படை வீரர்கள்.
எங்களை அழிக்க நினைப்பவர்களை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாங்கள் ஒன்றும் பேடிகள் அல்ல. திமுகவை தான் எதிர்க்கிறோம்.
நீ ஏன் குறுக்கே வருகிறாய்?
என்னைப் பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும்.. சென்னையில் சென்று ஏன் பேசுகிறார் மாஃபா பாண்டியராஜன்?
வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அதிமுக இயக்கத்தில்தான் இருப்பேன்.
அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் எடப்பாடி பழனிச்சாமி" என்றார் விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த, கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் (வயது 52) கைத்தறியாடை அணிவிக்க வந்தார். ராஜேந்திர பாலாஜிக்கு கைத்தறி ஆடை அணிவித்து விட்டு, அருகே அமர்ந்திருந்த மாஃபா.பாண்டியராஜனுக்கும் அணிவிக்கச் சென்றார்.
அப்போது, திடீரென தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்து ராஜேந்திர பாலாஜி, நந்தகுமாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக நந்தகுமாரை மேடையிலிருந்து இறக்கி, அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அதிமுகவில் சலசலப்பை உறுவாக்கிய நிலையில் சிவகாசியில் நேற்று நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக விளக்கமளித்தார்.அவர், "மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? பல கட்சிக்கு சென்றுவிட்டு வந்த பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் நிர்வாகி கன்னத்தில் அறைந்தேன்.
அதிமுக ரத்தம் எனக்குள் ஓடுகிறது. ஆனால் உனது உடம்பில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, அதிமுக, தேமுதிக, ஓபிஎஸ், அதிமுக. வெக்கமா இல்லையா உனக்கு?
நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ, பைத்தியக்காரனோ அல்ல. தொலைத்துவிடுவேன்". என்றார்
அதிமுகவில் செல்வி ஜெ.ஜெயலலிதா இருந்த போது தனக்கு இருந்த அங்கீகாரம் தற்போது எடப்பாடி கே.பழனிச்சாமி இருக்கும் போது கிடைக்கவில்லை என அதிருப்தியிலிருக்கிறார் மாஃபா. பாண்டியராஜன். மேலும் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட சில மூத்த தலைவர்களும் அதிருப்தியில் இரக்கும் நிலையில் ஒரு முன்னால் அமைச்சரை மற்றொரு முன்னாள் அமைச்சர் ஒருமையில் பேசியது அக் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜேந்திர பாலாஜியின் பேச்சு குறித்து எடப்பாடி கே பழனிச்சாமியை நேரில் சந்தித்து புகாராகக் கொடுத்திருக்கிறார் மாஃபா.பாண்டியராஜன். இந்த சந்திப்பின் போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு ராஜேந்திர பாலாஜி பேசிய வீடியோவையும் போட்டுக் காட்டியதாகக் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம்.. தற்போது ஊடகங்களிடம் எதுவும் பேச வேண்டாம் என எடப்பாடி கே பழனிச்சாமி பாண்டியராஜனிடம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பொது நீதி யாதெனில் :- 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்' என்னும் தத்துவமே.இந்த நிலையில் ஆர் எஸ் எஸ் செல்லப்பிள்ளை மாஃபா பாண்டிய ராஜன் என்பது அரசியல் அறிந்த பலரும் அறிவர் இந்த நிலையில் ஊழல் வழக்கில் ராஜேந்திர பாலாஜியை விசாரிக்கும் இசைவாணையை தமிழ்நாடு ஆளுநர் வழங்கினாரா ? இல்லையா ? என நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆளுநரின் முதன்மைச் செயலாளர் மார்ச் மாதம் 17 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
தமிழ்நாடு அரசின் மனுவின் நிலை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பிப்பு. ராஜேந்திர பாலாஜி மேல்மட்ட அரசியல் அறியாதவர், மாஃபா. பாண்டிய ராஜன் கீழ்நிலை அரசியல் தெரியாதவர். இதுவே இருவர் நடத்தும் சண்டைக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
கருத்துகள்