ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்புக்கு மேல்முறையீட்டு சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம்
ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய மத்திய சட்டம் மற்றும் உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல். ஆளுநர்கள் மற்றும் குடியரசு தலைவருக்கு திட்டவட்டமான காலக்கெடுவை நிர்ணயிக்கும் தீர்ப்புக்கெதிராக ஒரு மனு தயாரிக்கப்பட்டு வருகிறதென ஒரு மூத்த அரசு உயர் அலுவலர் மூத்த பத்திரிகையாளரிடம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு அரசு உயர் அலுவலர், இந்த வழக்கில் வாதங்கள் நடைபெற்ற போது மத்திய அரசின் கருத்துக்கள் போதுமான அளவு முன்வைக்கப்படாததால் மறுஆய்வு அவசியமாகிறது எனக் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் பல மாதங்கள் கடந்த நிலையில் ஒப்புதல் அளிக்காததை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 2023 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
குறித்து மூத்த சட்ட நிபுணர்கள் கூறும் போது, ‘‘வழக்கு விசாரணையின்போது, மசோதா குறித்து முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யக் கூடாதென்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதிட்டார். ஆனால், அவரது கருத்தை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நிராகரித்துள்ளனர். நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, மசோதா குறித்து முடிவெடுக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது’’என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்திருந்தது தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் பற்றிய மசோதாக்களின் மீது, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, ஆளும் தி.மு.க.,வினரை பெரும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.
மாநில உரிமையை தாங்கள் நிலைநிறுத்திவிட்டதாக பறைசாற்றி வருகின்றனர். ஒரு படி மேலாக, 'தமிழ்நாடு முதல்வர் மற்ற மாநிலங்களின் முதல்வர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருக்கிறார்' என்றும் புகழ் பரப்பும் நடவடிக்கைகள் செய்கின்றனர்.
அதே நேரம், 'இது ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு; ஆளுநர் தன் கவுரவத்தைக் காப்பாற்றிக் கொண்டு இராஜினாமா செய்ய வேண்டும்; இல்லை என்றால் தலைக்குனிவோடு செல்ல நேரிடும்' என தி.மு.க.,வினர் ஆளுநரை வார்த்தை மூலம் சீண்டுகின்றனர்.
ஆளுநருக்கு ஆதரவு தரப்போ, ' ஆளுநருக்கு தவறான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் அரசு நிர்வாகத்தில் எல்லை மீறித் தலையிடுகின்றன' என்றெல்லாம் குரல் கொடுத்து வருகின்றனர்.
பரிசீலனை என்பது
'மெய்ப்பொருள் காண்பது அறிவு' எனும் நிலையில் இதை அணுகினால், உண்மை முற்றிலும் வேறானது என்பதை உணரலாம்.
தமிழ்நாடு அரசும் சரி, அதற்கான ஆதரவுக்குரல்களும் சரி, உச்ச நீதிமன்றமும் சரி, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு - 200 என்ற குறுகிய நோக்கில் மட்டும் அணுகி உள்ளனர்.
பிரிவு - 200 ன் படி மாநில அரசு கொண்டு வரும் ஒரு மசோதாவை, ஆளுநர் மூன்று விதமாகப் பரிசீலனை செய்யலாம். முதலாவதாக மசோதாவை ஏற்கலாம்; இரண்டாவதாக அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்; மூன்றாவதாக சட்டசபைக்கே திருப்பி அனுப்பலாம். இதுவரை சட்டம் தெளிவாக இருக்கிறது.
'திருப்பி அனுப்பிய மசோதா மீண்டும் அதே சட்ட மன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் வந்தால், அதை ஆளுனர் ஏற்க வேண்டும்; அவருக்கு வேறு வழியில்லை. இந்த சமயத்தில் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது' என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கருத்து; அதுவே, தமிழ்நாடு அரசின் கருத்து. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்து என்ன என்ற கேள்வி எழும் போது, இதில் ஒரு நுட்பம் உள்ளதை நாம் உணரலாம்.
மசோதாக்கள் மூன்று வகைப்படும். முதலாவது
நிதி மசோதா; அடுத்ததாக முழுக்க மாநிலப் பட்டியலில் உள்ள விஷயம் தொடர்பான மசோதா; அடுத்ததாக மத்திய - மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் உள்ள விஷயம் தொடர்பான மசோதா என மூன்று வகைகள்.
இதில்
நிதி மசோதாவை ஆளுநர் ஒன்றும் செய்ய முடியாது; அப்படியே ஏற்க வேண்டும். அடுத்ததாக
மாநிலப் பட்டியல் விஷயமான மசோதாவை ஒருமுறை திருப்பி அனுப்பலாம்; மறுமுறை வந்தால் ஏற்க வேண்டும்.
அடுத்ததாக
பொதுப்பட்டியல் விஷயமான மசோதாக்களுக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு - 200 பொருந்தாது; அது, பிரிவு - 254 ன் கீழ் மட்டுமே பரிசீலிக்கப்பட வேண்டும்.
இதன்படி வரும் ஒரு மசோதாவில், மாநில அரசு இயற்றும் சட்டம், மத்திய அரசின் சட்டத்தோடு ஒத்துப் போகாமல் மோதுவதாக அமைந்தால், மத்திய அரசின் சட்டமே அதில் செல்லுபடியாகும்.
இப்படிபட்ட விஷயத்தில், மாநில அரசு கொண்டு வந்த மசோதாவை, ஆளுநர் ஏற்க வேண்டிய அவசியமில்லை. அறிவுறுத்தி, திருப்பியும் அனுப்பலாம்; அது மீண்டும் வந்தால், அதை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பலாம். இது, சட்டசபையில் இரண்டு முறை நிறைவேறியதே என்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. இது, நடைமுறை மீறலும் ஆகாது.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள பதினொன்றில் பத்து மசோதாக்களும் உயர் கல்வி சம்பந்தப்பட்டவை. அதாவது, பொதுப்பட்டியல் சார்ந்த மசோதா. எனவே, பிரிவு - 200 இதில் செல்லாது; பிரிவு - 254 ன் அடிப்படையில் மட்டுமே அதை பார்க்க வேண்டும்.
பல்கலைக் கழகங்களில் ஆளுநரை வேந்தர் பதவியில் இருந்து நீக்குவது மற்றும் துணைவேந்தர்களை நியமிக்கும் குழுவில், யு.ஜி.சி., உறுப்பினரை சேர்க்க முடியாது என்பது தான், இந்த பத்து மசோதாக்களின் சாராம்சம்.
மாநில ஆளுநர் வேந்தராக இருப்பார் என்பது மத்திய அரசின் சட்டம்; யு.ஜி.சி., உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் சட்டம். இவை இரண்டையும் இந்த பத்து மசோதாக்களும் மீறுவதால், அவற்றுக்கு எப்போதுமே உயிரில்லை.
உயிர் இல்லாத மசோதாவை, ஆளுநர் எத்தனை காலம் வைத்திருந்தாலும் நஷ்டம் என்ன? என்பதே இப்போது சட்ட வல்லுனரின் கருத்து ஒருவேளை குடியரசுத் தலைவர், விதிவிலக்காக அனுமதி அளிக்கக்கூடும் என்ற நிலையில் அதை எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அனுப்பலாம் என்பது, சட்டப்பிரிவில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் பப்ளிக் ஜஸ்டிஸ் வாசகர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். 'குஜராத் போன்ற மாநிலங்களில், மாநில முதல்வரே வேந்தராகவும் இருக்கிறாரே. அவர்களுக்கு ஒரு சட்டம், தமிழ்நாட்டிற்கு ஒரு சட்டமா? இதுவும் UGC., விதிமுறைக்கு மீறலாகாதா?' என்ற சந்தேகம் எழலாம்.
பொதுப்பட்டியல் தொடர்பான ஒரு மசோதாவில், ஒரு மாநில அரசு, தனக்கு விதிவிலக்கு வேண்டுமென்றால், நிறைவேறிய மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அப்படித்தான் குஜராத் அரசு, இந்த சலுகையை பெற்றுள்ளது. பல வடகிழக்கு மாநிலங்களும் பல்வேறு விதிவிலக்குகளை குடியரசுத் தலைவரிடம் பெற்றுள்ளன. அதை குடியரசுத்தலைவர் நிராகரித்துவிட்டால், அந்த மசோதா நீர்த்துப்போகும்.
எனவே, தவறான ஆலோசனை, தமிழ்நாடு முதல்வருக்குத் தான் வழங்கப்பட்டுள்ளது என்பது மத்திய அரசின் மேல்முறையீட்டு சிராய்வு மனு தீர்ப்பு வெளிப்படுத்தும் என்பதே உண்மை நிலை அதிகாரம் இல்லாத ஒன்றை, இருப்பது போல் பாவித்துக் கொண்டாடுகிறார். மேல்முறையீட்டுக்குப் போனால், மொத்தமும் சரியாகி விடும். என்பது தான் சட்ட வல்லுநர்கள் கருத்து இந் நிலையில் அவசர நிலையில் வெளிவந்த தமிழ்நாடு அரசின் அரசிதழ் அந்த மேல்முறையீட்டு சிராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் வழங்கும் அரசியல் சாசன அமர்வு வழங்கப்போகும் தீர்ப்பில் தான் அது செல்லுமா அல்லது செல்லாதா என தெளிவாகும். அதுவரை பல்கலைக்கழகங்களின் விவகாரத்தில் முடிவு வராது
கருத்துகள்