டாஸ்மாக் ஊழல் முறைகேடு வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை யினர் நடத்திய சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை வழக்கை 07-04-2025 ஆம் தேதி திங்கள்கிழமை பட்டியலிட நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து ஏற்கனவே லாலு லா அசோசியேட் சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.எம்.விஜயன் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிபதியின் சகோதரர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞராக ஏற்கனவே இருந்ததால் டாஸ்மாக் வழக்கு விசாரணையில் புதிய மாற்றம் தேவை என காரணம் கூறப்பட்டது ?
கருத்துகள்