முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராணிப்பேட்டை லஞ்சம் வாங்கிச் சிக்கிய ஊழல் மின்சார வாரிய மஹாராணிகள்

இராணிப்பேட்டை லஞ்சம் வாங்கிச் சிக்கிய ஊழல் மஹாராணிகள் இராணிப்பேட்டைமாவட்டம்


அரக்கோணம் தாலுக்கா அம்மனூர் துரைசாமி நகர் , 5 வது தெரு, எண். 41,ல் வசிக்கும் கோவிந்தசுவாமி மகன் G.சரவணன் என்பவர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில் கொடுத்த புகாரில் "என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் DME முடித்துள்ளேன். நான் கடந்த ஐந்து வருடங்களாக கட்டிட ஒப்பந்தப்பணிகளை செய்து வருகிறேன். என்னுடைய மனைவி ஏஞ்சலின் பிரியதர்ஷிணி திருத்தணி கெங்குசாமி நாயுடு மெட்ரிக்குலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூலில் பிரின்ஸிபாலாக உள்ளார். எங்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நான் தற்சமயம் எங்கள் சொந்தக்காரர் ஜேக்கப் என்பருக்கு சொந்தமான அரக்கோணம் கிருஷ்ணாம்பேட்டை ஓச்சேரி ரோட்டில்


கவர்மென்ட் ஹையர் செகன்டரி ஸ்கூலுக்கு எதிரில் உள்ள வீட்டை மாதம் ரூ.2,000/-தரை வாடகைக்கு எடுத்து அதன் முன்புறம் மெட்டல் ஷீட்டில் ஷெட் ரெடி பண்ணி ஓட்டல் குருமா என்கிற பெயரில் ஓட்டலை கடந்த பத்து நாட்களாக நடத்தி வருகிறேன். அந்த வீட்டின் EB கனெக்ஷன் Domestic -ல் ஜேக்கப் என்பவர் பெயரில் தான் இருக்கிறது. அதை நான் Commercial Tarif ஆக மாற்றுவதற்கு ஓட்டலை ஆரம்பிப்பதற்கு முன்பாக 03-03-2025 தேதியன்று அரக்கோணம் EB ஆபிசுக்கு போய் போர்மென் பல்கீஸ் பேகம் என்பவரை பார்த்து ஜேக்கப் பெயரிலேயே கமர்ஷியல் கனக்ஷனாக மாற்றுவது சம்மந்தமாக பேசினேன். அப்போது அவர் இதற்கு நீங்கள் ADE மேடம் அவர்களைத் தான் பார்க்க வேண்டும் என்றும், நான் மேடத்தை உங்களுடைய ஓட்டலுக்கு கூட்டிட்டு வரேன், அப்போது


அவரிடம் பேசிக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். கடந்த 07-03-2025 தேதியன்று ஓட்டலை தொடங்க பூஜை செய்தேன். பின்னர், கடந்த 08-03-2025 தேதி மாலை சுமார் 5 மணியளவில் நான் ஓட்டலில் இருந்த போது போர்மென் பல்கீஸ் பேகம் என்பவருடன் ADE புனிதாவும், கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் மோனிகா என்பவரும் வந்தனர். அப்போது ADE புனிதா அவர்கள் வந்து ஓட்டலை பார்த்துவிட்டு, டொமஸ்டிக் கனெக்ஷனில் ஓட்டலை நடத்துவது தப்பு,



அதற்காக ஒரு லட்சம் வரை பைன் போட வேண்டும் என்று சொன்ன போது, அவர்களிடம் மேடம் நான் இந்த ஷெட்டை முதன் முதலில் என்னுடைய காரை நிறுத்துவதற்காகத் தான் போட்டேன், அதன் பின்னர் தான் ஓட்டலை நடத்தலாம் என்று நினைத்து டொமஸ்டிக் டேரிப்பை கமர்ஷியல் டேரிப்பாக மாற்றி விட்டு ஓட்டலை நடத்தலாம் என்று தான் உங்களை வந்து பார்த்தேன் என்று சொன்னேன். அதற்கு ADE புனிதா அவர்கள் என்னிடம் பல்கீஸ் பேகம் சொல்வதை போல் கேளுங்கள்,


உங்களுக்குண்டானதை நான் செய்து கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு மூன்று பேரும் போய்விட்டார்கள். அதன் பின்னர், நானும் என்னுடைய ஓட்டல் நடத்துவதை தற்காலிகமாக நிறுத்தியிருந்தேன். அதன் பின்னர், இரண்டு நாட்கள் கழித்து போர்மென் பல்கீஸ் பேகம் அவர்கள் நான் ஓட்டலில் இருந்த போது என்னிடம் வந்து டேரிப்பை மாற்றத் தேவையான டாகுமெண்ட்டுகள், வி.ஏ.ஓ.வின் என்.ஓ.சி., வீட்டிற்குண்டான வரி ரசீது நகல், EB கார்டு ஜெராக்ஸ், வீட்டு உரிமையாளரான ஜேக்கப்பின் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை கொடுக்க வேண்டும் என்றும், ஐம்பதாயிரம் ரூபாய் டெபாசிட் செலவாகுமென ADE சொல்ல சொன்னதாக சொன்னார். அதற்கு நான் அவரிடம் கமர்ஷியல் கனக்ஷனாக மாற்றுவதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமா என்று கேட்டதற்கு, அவர் எல்லாவற்றிற்கும் பில் வந்து விடும் என்று சொன்னார். நானும் அவரிடம் அவர் கேட்ட டாகுமெண்ட்டுகள் நகல்களை அவரிடம் கொடுத்துவிட்டு, நான் பணத்தை ரெடி பண்ணிவிட்டு சொல்கிறேன் என்று சொன்ன பிறகு அவர் போய்விட்டார். பின்னர், கடந்த 18-03-2025 தேதி சாயந்திரம் 6.30 மணிக்கு போர்மென் பல்கீஸ் பேகம் அவர்கள் எனக்கு போன் செய்து ADE காஞ்சிபுரம் போறாங்க, உடனே வாங்க

என்றார். நானும் அவரிடம் ஆபிஸில் வந்து கட்டுகிறேன் என்று சொன்னபோது அவர் மேடம் என்னுடைய வீட்டிற்கு தான் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள், நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து பணத்தை கொடுங்கள், அப்ளிகேஷன் அப்ளை பண்ணுவதிலிருந்து எல்லாவற்றையும் அவரே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் என்று சொன்னார். எனக்கு அதிகம் வேலை இருந்ததால் அடிக்கடி EB ஆபிஸிற்கு என்னால் போக முடியாததால் நானும் வேறு வழியில்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டேன். பின்னர், நான் பல்கீஸ் பேகம் வீட்டின் அட்ரஸை விசாரித்து, உடனே அவருடைய வீட்டிற்கு போய் பார்த்த போது, ஏற்கனவே ADE புனிதா அவர்கள் என்னுடைய ஓட்டலுக்கு வந்தபோது உடன் வந்த கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் மோனிகா அவர்களும் இருந்தார். அவர்களிடம் நான் கொண்டு போன பணம் ஐம்பதாயிரம் ரூபாயை கொடுத்து விட்டு, மேடம் கிட்ட சொல்லி சீக்கிரம் முடிங்க என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். மறுநாள் 19-03-2025 தேதி சாயந்திரம்  மணியளவில் கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் மோனிகா அவர்கள் எனக்கு போன் செய்து, உங்களுடைய அப்ளிகேஷன் அப்ளை பண்ணிட்டிருக்கிறோம், உங்களுடைய போனிற்கு ஓ.டி.பி. மெஸேஜ் வரும் அந்த நெம்பரை சொல்லுங்க என்று சொன்னார். மெஸேஜூம் வந்தது நானும் ஓ.டி.பி. நெம்பரை சொன்னேன். பின்னர், எனக்கு அப்ளிகேஷன் நெம்பர் 200082840325153 எனவும், ரிஜிஸ்ட்ரேஷனுக்குண்டான பணம் ரூ.215/-ஐ செலுத்த சொல்லியும் மெஸேஜ் வந்தது. பின்னர், 20-03-2025 தேதி மதியம் மூன்று மணியளவில் என்னை ரூ.160/-பணம் கட்ட சொல்லி மெஸெஜ் வந்தது. அன்றைய தினம் சாயந்திரம் ஆபிஸிலில் இருந்து வீட்டிற்கு போய்க்கொண்டிருந்தவரை நிறுத்தி, அவர்களிடம் நான் மேடம், இருபத்திரண்டாயிரம் டெபாஸிட்டுன்னு சொன்னீங்க, ரூ.160/- மெஸேஜ் வந்திருக்கு என்று கேட்டதற்கு, அவர் என்னிடம் கோபமாக நாங்க உங்களுக்காக எவ்வளவு ரிஸ்க் எடுத்திட்டிருக்கிறோம், மேடம் உங்களுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இதையெல்லாம் பண்ணிட்டிருக்காங்க, நீங்க சீரியஸ்னெஸ் தெரியாமல் இதையெல்லாம் கேட்டுட்டிருக்கீங்க என்று சொல்லிவிட்டு போய்விட்டார். மறுநாள் பல்கீஸ் பேகம் அவர்கள் எனக்கு போன் செய்து உங்களுடைய வேலை பாதி முடிந்துவிட்டது, மீதி வேலையை முடிப்பதற்கு இன்னும் ஐம்பதாயிரம் ரூபாயை கொடுக்க வேண்டும் என்று சொன்னார். நானும் அவரிடம்

எனக்கு வேறு வழியில்லாததால் சரி தருகிறேன் மேடம், பணத்தை ரெடி பண்ணிவிட்டு சொல்கிறேன் என்று சொன்னேன். பின்னர், மோனிகா அவர்கள் அடிக்கடி ஸ்குவாடு வருவதாகவும், போன் முலமாகவும், ஓட்டலுக்கு நேரிலும் வந்து பணம் கேட்டார். கடந்த 01-04-2025 தேதி என்னுடைய G-Pay அக்கௌண்ட்டில் பார்த்தபோது, என்னுடைய ஓட்டலுக்குண்டான சர்வீஸ் எண்.08-284-012-176 உரிய மின் கட்டணம் ரூ.37/- என வந்தது, நானும் அதை G-Pay-ல் கட்டிவிட்டேன். பணம் கட்டியது குறித்து நான் யாருக்கும் சொல்லவில்லை. பின்னர், உதவி செயற்பொறியாளர் புனிதா அவர்களிடம் மோனிகா பணம் ரூ. 50,000/- கேட்டது பற்றி சொன்னால், அவர் பணம் மேற்கொண்டு செலவாகாமல் கனக்ஷனை மாற்றித்தருவார் என நினைத்து பகல் சுமார் 2.40 மணிக்கு புனிதா அவர்களுக்கு போன் செய்து, அவர்களை நேரில் பார்க்க வேண்டும் என்று சொன்னதற்கு அவர் என்னை ஆபீஸிற்கு வரும்படி சொன்னார். அதன்படி நானும் சாயந்திரம் 4.30 மணிக்கு அவருடைய ஆபீஸிற்கு போனேன். அப்போது அவர் வெளியில் செல்ல அவருடைய டூவீலரில் வெளியில் வந்து கொண்டிருந்ததார். அப்போது அவர் என்னை பார்த்தவுடன் அவருடைய வண்டியை நிறுத்தினார். அவரிடம் நான் மோனிகா என்னிடம் மீண்டும் பணம் ரூ.50,000/- கேட்டது பற்றி சொன்னதும், அவர் உங்க கடைக்கு போங்க, எதுனாலும் உங்க கடைல பேசிக்கலாம், நான் ஐந்து நிமிஷத்துல வருகிறேன் என சொல்லி அனுப்பிவிட்டார். நானும் என்னுடைய ஓட்டலுக்கு போய்விட்டேன். அங்கு 5.40 மணிக்கு ADE புனிதா மற்றும் அவருடன் மோனிகாவும் வந்தார்கள். அப்போது நான் புனிதா அவர்களிடம் என்னுடைய அப்பாவிற்கு ஆஸ்பிடல் செலவு அதிகமாகிவிட்டது, மீண்டும் ஐம்பதாயிரம் பணம் கேட்கிறார்கள் என சொன்னதற்கு, அவர் என்னை பார்த்து, அவர்கள் உரிமையாக கேட்கிறார்கள், கொடுத்து விடுங்கள் என சொல்லி விட்டு போய்விட்டார்கள். பின்னர் 02-04-2025 தேதி மதியம் 12.15 மணிக்கு மோனிகா அவர்கள் எனக்கு போன் செய்து, எப்போ வர்றீங்க என கேட்டார். அதற்கு நான் என்னுடைய அப்பா ஆஸ்பிடலில் இருக்கிறார், அரக்கோணம் வரும்போது நான் உங்களுக்கு போன் செய்கிறேன் என்று சொன்னேன். மீண்டும், அவர் சாயந்திரம் 3.30 மணிக்கு போன் செய்து என்னங்க சார் வந்துட்டீங்களா என கேட்டார். அதற்கு நான் அப்பாவிற்காக சி.எம்.சி.ல்

இருக்கோம் இப்ப ட்வெண்ட்டி பைவ் கொடுத்திடுறேன் ஒரே ஒரு நாள் டைம் கொடுக்க சொல்லுங்க மிச்சத்த கொடுத்துடுறேன் என்று சொன்னதற்கு அவர் அந்த ட்வெண்ட்டி பைவ்வ எப்போ தர்றீங்க என்று கேட்டார். அதற்கு நான் சி.எம்.சி.க்கு அப்பாவை கூட்டிட்டு வந்திருக்கிறேன், நைட் ஆயிடும் போல இருக்கு என்று சொன்னதற்கு, அவர் நான் மேடம்கிட்ட கேட்டுட்டு சொல்றேன் என்று சொல்லி போனை வைத்துவிட்டார். மீண்டும் சுமார் 6.30 மணிக்கு மோனிகா அவர்களிடம் இருந்து போன் வந்தது, அப்போது அவர் மேடம் பேசுனம்னு சொன்னாங்க என்று சொல்லி போனை ADE புனிதா அவர்களிடம் கொடுத்தார், அப்போது ADE புனிதா அவர்கள் என்னிடம் என்னாச்சுப்பா உன்து என்று கேட்டதற்கு, நான் அப்பாவை சி.எம்.சி.க்கு கூட்டிட்டு வந்தது பற்றியும், இருபத்தைந்தாயிரம் ஒருவர் அனுப்பியுள்ளார், ஆஸ்பிட்டல் முடித்துவிட்டு கிளம்பும்போது சொல்கிறேன், இருபத்தைந்தாயிரம் மட்டும் இப்போது கொடுக்கிறேன், மீதி பணத்தை இரண்டு நாள் டைம் கொடுங்க, கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னதற்கு, அவர் சரி சரிங்க, இல்லைனா மொத்தமா நான் உங்க சர்வீஸ்ல சேர்த்து விடுறேன், சீக்கிரம் முடிக்கனும்னு பார்க்கிறேன் இதை, நீங்க இழுத்துட்டே இருக்கீங்க என்றும், லீவு போறதுக்கு முன் இதை முடிச்சுட்டு போலாம்னு இருக்கேன் என்று சொன்னார். அதற்கு நான் சாக்கு போக்கு சொல்லி நேரத்தை வாங்கினேன். பின்னர், அவரிடம் நாளை இருபத்தைந்தாயிரம் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சொன்னதும், ஓ.கே. ஓ.கே. என்று சொன்னார். பின்னர் நான் யாரிடம் கொடுப்பது என்று கேட்டதற்கு, அதற்கு அவர் அவங்க கால் பண்ணுவாங்க இருங்க என்று சொல்லி போனை மோனிகாவிடம் கொடுத்ததும், மோனிகா அவர்களிடம் நாளைக்கு வந்து போன் பண்ணுறேன் மேடம், நான் உங்களிடம் பணத்தை கொடுக்க சொல்லி இருக்கிறார்கள், கொடுத்துட்டு 2 டேஸ் கழித்து மிச்சத்தை கொடுக்கிறேன் என்று சொன்னதற்கு அவர் சரி சார் என்று சொல்லி போனை வைத்துவிட்டார். மேற்படி ஓட்டல் கனக்ஷன் கமர்ஷியலுக்கு மாறிவிட்டதா, இல்லையா என எனக்கு தெரியவில்லை. ஆனால், பில் மட்டும் வந்துவிட்டது. இவர்கள் கேட்கும் பணம் லஞ்சமாகத்தான் இருக்கும். எனவே எனக்கு யாருக்கும் ரூ.50,000/-  லஞ்சமாக கொடுத்து என்னுடைய ஓட்டலுக்குண்டான கனக்ஷனை கமர்ஷியலாக மாற்றுவதற்கு விருப்பமில்லை. அவர்கள்

லஞ்சமாக பணம் கேட்கும் போதெல்லாம் ஏதாவது சாக்கு சொல்லி பிறகு வருவதாக சொல்லி போன் பேசிவிட்டேன். எனவே, அரக்கோணம் ADE புனிதா மற்றும் கமர்ஷியல் இன்ஸ்பெக்டர் மோனிகா ஆகியோரிடம் நான் இன்று முன்பணமாக ரூ.25,000/- ஐ கொடுக்கும் போது அவர்களை பிடித்து அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என தெரிவித்து மேற்கண்ட புகார் மனுவைஇராணிப்பேட்டை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை 

ஆய்வாளர் S.விஜயலட்சுமியிடம் 03.04.2025 ஆம் தேதி 08.45 மணிக்கு அலுவலகத்தில் கொடுத்த நிலையில் இராணிப்பேட்டை ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை துணைக்  கண்காணிப்பாளர் V.கணேசன் ஆலோசனை படி ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் திருவள்ளூர் ஆய்வாளர் தமிழரசி அரசு தரப்பில் சாட்சிகள் முன்னிலையில் பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய பணம் சரவணனிடம் திரும்ப வழங்கிய நிலையில்பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் பினாப்தலின் இரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து அனுப்பினர். இதைத் தொடர்ந்து சரவணன், உதவி செயற்பொறியாளர் புனிதாவிடம் பணத்தைக் கொடுக்கச் சென்ற போது, அதை வணிக ஆய்வாளர் மோனிகாவிடம் கொடுக்கும் படி தெரிவித்துள்ளார்.இதை யடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்ட மோனிகா, அந்த பணத்தை போர்மேன் பல்கிஸ் பேகத்திடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் மூவரையும் கைது செய்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...