முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் திறக்கப்பட்டது மேல்பாதி ஆலயம்


ஶ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் ஆலயம் மேல்பாதி விழுப்புரம் மாவட்டம் இக்கோயிலில் தர்மராஜர், திரௌபதியம்மன் சன்னதிகளும், போர்மன்னன், முத்தால்ராவுத்தர், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்தில்  உள்ளது.

பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படும்கோவில் 100 ஆண்டுகள் கடந்து வழிபடும் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது, தற்போது ஒருகாலப் பூசை நடக்கிறது. பங்குனி மாதம் பூக்குழி எனும் (பூ)தீமிதி  திருவிழாவாக நடைபெறுகிறது.மேல்பாதி கிராமத்தில் வருவாய்த்துறை அலுவலர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்ட



ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ம காலங்களில் ஒரு வெள்ளிக்கிழமை) காலையில் திறக்கப்பட்டது. இக்கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடர்பாக வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 2023 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 7 ஆம் தேதி வருவாய்த்துறை அலுவலர்கள் கோவிலைப் பூட்டி சீல் வைத்தனர்.


தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோவிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒருதரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  தொடுத்த வழக்கில் விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒருகாலப் பூஜையை மட்டும் நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும்  சிவ  நாள்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.


நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனி, காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாட்ச் , வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலுக்கு வருவாய்த்துறை அலுவலர்களால் வைக்கப்பட்ட சீலை மார்ச் மாதம் 22 ஆம் தேதி அகற்றித் திறப்பது எனவும்,



இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்படும் பூசாரியைக் கொண்டு தினந்தோறும் காலை நேரத்தில் ஒருகாலப் பூஜையை நடத்துவது எனவும், பொதுமக்கள் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடை விதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது முன்னிலையில் வருவாய் ஆய்வாளர் கோவிலில் வைக்கப்பட்ட சீலை அகற்றினார்.  விழுப்புரம் மேல்பாதி கிராம மக்கள் 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் பேசிய சிலரில் "அந்தக் கோவிலுக்குள் பல ஆண்டு காலமாக நாங்கள் யாரும் சென்றதில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளே சென்றோம். அதற்கே இவ்வளவு பிரச்னைகள். அனைவரும் சமம் என நீதிமன்றம் கூறுகிறது. ஆனால், இங்கு சமம் என்பதே கிடையாது" -



என்றார் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபர்.சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்டு மேல்பாதி ஊராட்சியில் இரண்டாயிரம் பேர் வசிக்கும் கிராமத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் ஆதிதிராவிடர் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள், மூன்றில் இரண்டு பாதியினர்  மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூகத்தினர். ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில்



 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி  திருவிழாவின் போது, ஆதிதிராவிடர் பட்டியல் ஜாதியைச் சேர்ந்த கதிரவன் உள்பட சில இளைஞர்கள் கோவிலுக்குச் சென்றதாகக் கூறி தாக்குதல் நடத்தப்பட்டது.

அதைத் தட்டிக்கேட்ட கதிரவனின் குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டது. சம்பவத்தைக் கண்டித்து விக்கிரவாண்டியிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் ஆதிதிராவிடர் பட்டியல் பிரிவு மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் புகாரின் பேரில் 18 பேர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை.

வழிபாடு தொடர்பாக ஏற்பட்ட தகராறு என்பதால் விழுப்புரம் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், இரண்டு ஜாதியினர் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

"ஆனால தீர்வு ஆகவில்லை" என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி அறிக்கையில் தெரிவித்திருந்தார்.  ஊரில் அசாதாரண சூழ்நிலை  உள்ளதால் பொது அமைதியைப் பாதுகாக்கும் வகையில் கோவிலில் யாரும் பிரவேசிக்கக் கூடாது என கோவில் மூடி சீல் வைக்கப்படுவதாகக் கூறியிருந்தார்.


அதனால் கோவிலுக்குள் இரண்டு ஜாதியினரும் வழிபாடு நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டுமெனக் கோரி, ஆதிதிராவிடர் பட்டியல் ஜாதியைச் சேர்ந்த கந்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பொதுமக்களை அனுமதிக்காமல் ஒரு கால பூஜை மட்டும் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்ததன்படி,  2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காலையில் கோவில் திறக்கப்பட்டு ஒரு கால பூஜையை மட்டும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பூஜகர் செய்து வருகிறார்.

வழக்கின் முடிவில், 'கோவிலுக்குள் யாரும் நுழையக் கூடாது' என்ற மாவட்ட நிர்வாகத்தின் தடை உத்தரவை இரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 'அனைத்து ஜாதியினரும் கோவிலுக்குச் சென்று வழிபடலாம்' என 2025 பிப்ரவரி மாதம் உத்தரவிட்ட நிலையில் 2025 மார்ச் மாதம் 19-ஆம் தேதியன்று இரண்டு ஜாதியினரையும் அழைத்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் இரண்டு பிரிவினரும் சமாதானமாகச் செல்வதாக ஒப்புக் கொண்டு கையொப்பமிட்டனர். அதன் பின்னர் ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதியன்று பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கோவில் திறக்கப்பட்டது.

அப்போது, ஆதிதிராவிடர் பட்டியல் ஜாதியைச் சேர்ந்த இதுவரை அங்கு வழிபடாத 60 பேர் மட்டும் கோவில் பூஜையில் பங்கேற்றனர். மற்ற ஜாதியினர் கோவிலுக்குள் செல்லவில்லை. வழிபாடு நடத்திவிட்டு வெளியே வந்த ஆதிதிராவிடர் பட்டியல் ஜாதி மக்களை, பிற ஜாதியினர் அவதூறாகப் பேசிய காட்சிகள் ஊடகங்களில் வெளியானது.

மறுநாள் (ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி) கோவிலுக்குள் செல்லாமல் இரண்டு பிரிவு மக்களும் புறக்கணித்து விட்டனர்.ஊரின் நுழைவாயிலில் இருந்து கோவில் வரையில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவிலைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஊருக்குள் யார் சென்றாலும், பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

விக்கிரவாண்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையில், கோவில் அருகே பாதுகாப்புப் பணிகளுக்காக அமர்த்தப்பட்ட காவல்துறையினர், காலை 6 மணி முதல் 7.30 மணி வரை பூஜை நடத்தப்பட உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். ஆனால், கோவிலுக்குள் ஊர் மக்கள் செல்லவில்லை.

பிறகு கோவிலில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஆதிதிராவிடர் பட்டியல் ஜாதியினர் வசிக்கும் பகுதியிலும்  காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அங்கு ஆதிதிராவிடர் பட்டியல் பிரிவு மக்களிடம் பேசுவதற்கு காவல் துறையினர் முதலில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்தனர். பிறகு வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமாரின் அனுமதியுடன் அம்மக்களை செய்தியாளர்கள் சந்தித்துப் பேசினர்.

"கோவிலில் சாமி கும்பிடச் சென்றதற்காக எங்கள் பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை அடித்தனர். நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை," எனக் கூறுகிறார் உயர் நீதிமன்றம் சென்ற கந்தன்.

2023 ஆம் ஆண்டு கோவிலுக்குள் நுழைந்ததாகக் கூறி பிற ஜாதி மக்களால் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்படும் இளைஞர்களில் இவரது மகன் கதிரவனும் ஒருவராம். அதன் காரணமாக, வழிபாடு நடத்துவதற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததாகவும்  தெரிவித்தார். ஸ்ரீ தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில், ஏழாவது உபயதாரர்களாக (இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகம் வந்த பின்னர்) ஆதிதிராவிடர் பட்டியல் ஜாதி மக்கள் உள்ளதாகக் கூறிய கந்தன், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இரண்டு முறை அமைதிக் கூட்டத்தை அலுவலர்கள் நடத்தியதாகக் தெரிவித்தார்.

அப்போது, ஊர்க்காரர்களிடம் பேசி முடிவெடுத்து விட்டு வருவதாக பிற ஜாதி மக்கள் தரப்பில் கூறியதாகவும், தங்கள் தரப்பில் ' அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் கட்டுப்படுவோம்' எனக் கூறியதாகவும்  தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி கோவில் திறக்கப்பட்ட பிறகு நடந்த சம்பவத்தை கூறும் கந்தன், "காவல்துறை பாதுகாப்புடன் உள்ளே சென்றோம். அதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் வெளியில் வரும் போது, கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்கள் எங்களை அவதூறு செய்தனர்," என்கிறார்.

 "ஒருநாள் பூஜைக்கு சென்றதற்கே இவ்வளவு பிரச்னையைச் சந்திக்க நேர்ந்ததால், மேலும் பிரச்சனை தேவையில்லை எனக் கருதி தற்காலிகமாக நாங்கள் செல்லவில்லை" என்கிறார்.

ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதியன்று நடந்த சம்பவம் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பெண்கள் மத்தியில்  வேதனையை ஏற்படுத்தியதாகவும்.காலம் காலமாக இங்கே நடக்கும் திருவிழாவின் போது கோவிலுக்குள் சென்று நாங்கள் வழிபாடு இதுவரை நடத்தியதில்லை. ஏழாவது நாள் மட்டுமே நாங்கள் அங்கே செல்வோம். அப்போதும் வெளியே நின்று கற்பூரமேற்றி வழிபாடு நடத்தி விட்டு திரும்பிவிடுவோம்,அது தான் இத்தனை ஆண்டுகள் நடந்தது " என்கிறார் ஆதிதிராவிடர் பட்டியல் ஜாதியைச் சேர்ந்த சுகன்யா எனும் பெண். நீதிமன்றம் அனைவரும் சமம் என்கிறது. ஆனால் எங்கள் ஊரில் அனைவரும் சமமில்லை. எங்கள் குழந்தைகள் பள்ளி செல்வது துவங்கி அனைத்திலும் ஜாதியப் பிரச்னைகள்கள் நிலவுகின்றன," என்கிறார்.

"நீதிமன்ற உத்தரவுப்படியே கோவிலுக்குச் சென்றோம். வெளியில் வந்த போது அவதூறான பேச்சுகளை எதிர்கொண்டோம். மறுநாளும் வழிபாடு நடத்த வருமாறு காவல்துறை அழைத்த போது. நாங்கள் செல்லவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு எங்கு சென்றாலும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோவிலுக்குள் போனதற்காக எங்களை அங்குள்ள பெண்கள் தான் மோசமாகப் பேசினார்கள்," என்கிறார் அவர்.

சுகன்யாவின் முன்னோர்கள் அவர்களிடம் வேலையாட்களாக இருந்ததை முன்வைத்து அவதூறாக பேசியதாகத் தெரிவித்த சுகன்யா, "இப்போது அவர்களை நம்பி யாரும் இல்லை. நாங்கள் உழைத்துச் சாப்பிடுகிறோம். கோவிலுக்குள் சென்றதற்காக இத்தகைய பேச்சுகளை எதிர்கொள்ள வேண்டுமா?" எனகிறார்.

தனியாக ரேசன் கடை தந்தது போன்று தங்களின் பிள்ளைகளுக்கு தனியாக பள்ளி அமைத்துக் கொடுத்தால் போதும் எனக் கூறியவர், நீதிமன்றத்தையும் அரசாங்கத்தையும் மட்டுமே நம்பியுள்ளதாகவும் தெரிவித்தார் .2023-ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு ஜாதிரீதியாக பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறுகிறார், அங்கு வசிக்கும் மற்றொரு பெண் நிவேதா."அந்தத் தெரு வழியாகப் போகும்போது திட்டுவார்கள். அங்கன்வாடியில் மகன் படிப்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தேன். 2 வாரங்களுக்கு முன்பு பள்ளிக்குப் போகும்போது அவர்கள் வீட்டு படிக்கட்டின் முன்பு நின்றதற்காக என் மகனை ஜாதிப் பேர் சொல்லி திட்டி, முறத்தால் அடிக்க வந்தனர்," எனக் கூறிக் கலங்கினார்.

"மூன்று வயது குழந்தைக்கு என்ன தெரியும்? அன்று முதல் அங்கன்வாடிக்கு என் மகனை அனுப்புவதில்லை. வீட்டிலேயே தான் இருக்கிறான்," எனும் நிவேதா, "எங்களைத் திட்டுகிறார்கள். ஆனால் குழந்தைகளுக்கு ஜாதியைப் பற்றி என்ன தெரியும்?" என்கிறார்.

"கோவிலுக்குள் போனதற்காக எங்களை அடித்தார்கள். அந்தக் கோவிலுக்குள் நாங்கள் நிச்சயமாக செல்வோம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் அடுத்த தலைமுறைக்கும் இதே பாதிப்பு ஏற்படும்" எனத்  தெரிவித்தார்.


இதையடுத்து, பிற ஜாதி மக்கள் வசிக்கும் பகுதியில் கூடியிருந்த ஊர் மக்களில் சிலர், பெயர் அடையாளம் தவிர்த்து பேசினார்கள்.

"இந்தக் கோவிலை கஷ்டப்பட்டு எங்கள் முன்னோர்கள் கட்டினார்கள். அதற்கு சொந்தம் கொண்டாடுகின்றனர். அவர்கள் ஊரில் அவர்களுக்கு என மாரியம்மன் கோவிலுள்ளது. அதற்கு நாங்கள் உரிமை கொண்டாடினால் ஏற்பார்களா?" என்கின்றனர். மேல்பாதி திமுக கட்சி சார்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் மணிவேல் கூறுகையில்  "இப்பகுதிப் பெண்கள் ஏதோ அறியாமையில் பேசிவிட்டனர். தங்களின் வருத்தங்களை தெரிவிக்கவே அவ்வாறு பேசினர்" என்கிறார்.

தொடக்கத்தில் இந்த விவகாரம் குறித்து பேச மறுத்தவர், பிறகு ஊர் மக்களின் நிலைப்பாடு குறித்து சில தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"ஊரிலுள்ள அனைத்து மக்களுக்கும் இந்தக் கோவில் சொந்தமானது அல்ல" எனக் கூறியவர், "பழைய வழக்கப்படியே அனைத்தும் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதை அவர்கள்  ஏற்கவில்லை. அரசாங்கமும் ஏற்கவில்லை" என்கிறார்.

கோவிலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு குறித்துப் பேசியவர், "ஆதிதிராவிடர் பட்டியல் ஜாதியினர் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். அதனை எதிர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் தீர்ப்பு பட்டியல் ஜாதியினருக்கு சாதகமாக அமைந்தது," என்கிறார்.

"கோவில் திறக்கப்பட்ட பிறகு வழிபாடு நடத்தச் செல்லாதது ஏன்?" என் கேட்ட போது 

"ஏப்ரல் 17 ஆம் தேதி கோவிலைத் திறப்பதாக அலுவலர்கள் கூறினார். வெள்ளிக்கிழமை உகந்த நாள் என்பதால் அன்று திறக்கும்படி சொன்னோம். ஆனால் காவல்துறையினர் மறுத்துவிட்டனர். எனவே நாங்கள் செல்லவில்லை," என்கிறார்.

இரண்டாண்டுகளாக கோவில் பூட்டியே கிடந்தது. சாமிக்கு சக்தி அதிகமென மக்கள் நம்புகின்றனர். அதனால் ஊர் மக்கள் எல்லாம் சேங பரிகார பூஜை ஒன்றைச் செய்ய விரும்புகின்றனர்" என்றார்.

பரிகார பூஜை செய்ய விரும்புவதற்கான வேறொரு காரணத்தையும் குறிப்பிட்டார். " கோவில் பூட்டப்பட்ட பிறகு ஊருக்குள் நிறைய பேர் இறந்துவிட்டனர். அதனால் மக்கள் பயப்படுகின்றனர். சிறப்பு பூஜை செய்த பிறகே உள்ளே செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்" என்கிறார்.

"இதுவரை ஆதிதிராவிடர் பட்டியல் சாதி மக்கள் யாரும் கோவிலுக்குள் வந்ததில்லை" எனக் கூறும் மணிவேல், "இப்போது அவர்கள் உள்ளே வந்துவிட்டனர். ஊரில் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஊடகங்களும் அரசு அலுவலர்களும் தான் தூண்டிவிடுகின்றனர்," என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார். விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களிடம் கேட்க முயன்ற நிலையில் 

பலரும் பேச மறுத்து பின் வாங்கவே  

பெயர் குறிப்பிடாமல் பேசிய அலுவலரில் ஒருவர், "  இரண்டு வருட காலம் கோவில் மூடப்படவில்லை. தினமும் காலை கோவிலில் ஒருகால பூஜை நடத்தப்பட்டது. எனவே, பரிகாரத்துக்கு அவசியமில்லை" என்கிறார்.

இந்த பிரச்சனைகள் குறித்து விக்கிரவாண்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நந்தகுமாரிடம் செய்தியாளர் கேட்ட நிலையில் 

"உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோவிலை திறந்து வைத்துள்ளோம். ஊருக்குள் இயல்பான சூழல் நிலவுகிறது. போதிய காவல்துறை பாதுகாப்பை வழங்கியுள்ளோம். இதற்கு மேல் இந்த விவகாரம் குறித்துப் பேசுவதற்கு விரும்பவில்லை" என்கிறார்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கூறிய போது, "கோவிலுக்குள் செல்வதில் இடையூறுகள் இருந்தால் அதை மாவட்ட நிர்வாகத்தால் சரிசெய்து கொடுக்க முடியும். இரண்டு தரப்பும் வழிபாடு நடத்த வேண்டும் எனக் கூறுவதற்கு வாய்ப்பில்லை. அது அவரவர் விருப்பம். ஜாதிரீதியாகத் தடுத்தால் உரிமையை மீட்டுக் கொடுப்பது மட்டுமே அரசின் பணி," என்கிறார்.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில் உள்ளதாகக் கூறிய மாவட்ட ஆட்சியர், "ஜாதி ரீதியில் பரிகார பூஜை செய்வதற்கு அனுமதி அளிக்க வாய்ப்பில்லை. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக யாராவது நடந்தால் அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கும்" என்கிறார்.

தொடர்ந்து பேசியவர், "மாற்றங்கள் எப்போதும் மெதுவாகவே நடக்கும். சிலரின் அழுத்தங்களால் வழிபாடு நடத்துவதற்கு சிலர் செல்லாமல் இருக்கலாம். கோவிலைத் திறந்து இரண்டு நாட்கள் ஆகிறது. நாட்கள் செல்லச் செல்ல அவர்களும் புரிந்து கொள்வார்கள். கால அவகாசம் கொடுத்தால் போதும்" என்றார்.

ஜாதிரீதியாக மக்கள் பிளவுபட்டுவிடக் கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது என்றார் அவர்.கோவிலுக்குள் இரு தரப்பும் சுமூகமாக வழிபாடு நடத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்' என ஆதிதிராவிடர் பட்டியல் ஜாதி மக்கள் கூறுகின்றனர். 'பழைய வழக்கப்படியே அனைத்தும் தொடர வேண்டும்' என்பது பிற்படுத்தப்பட்ட ஜாதி மக்களின் நோக்கமாக உள்ளது. 'விரைவில் சுமூகமான சூழல்கள் உருவாக வேண்டும்' என்பதே மாவட்ட நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...