மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் கீழையூர். சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சியின் வைரவன் இவரது மகன்கள் இராமநாதன், இலட்சுமணன் இருவரும் இரட்டையர்கள்.
இவர்கள் இருவரும் மேலூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதினர். தற்போது வெளிவந்த தேர்வு முடிவுகளில் மதிப்பெண் பட்டியலில் இவர்கள் இருவரும் 459 என ஒரே மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஐந்து பாடங்களில் வெவ்வேறு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் ஒட்டுமொத்தமாக இருவரும் 459 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோல்
கோயம்புத்தூர் மாவட்டம், இராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் இரட்டை மகள்கள், கனிகாவும் கவிதாவும், 2025 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தலா 474 என ஒரே மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர். இரட்டையர்கள் இருக்கும் வீடுகளில் எப்போதும் கலகலப்பும் மகிழ்வுடனும் இருக்கும்.
இரட்டையர்கள் பெற்றோருக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியை அளிப்பார்கள்.
இரட்டையர்கள் பெற்றெடுப்பது என்பது ஒரு வரமாகிறது.
இரட்டையர்கள் பொதுவாக ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களின் DNA 100 சதவீதம் ஒரே மாதிரியாக இருக்காது.
இரட்டையர்கள் தொலைத்தொடர்பு அல்லது ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் நிகழ்வுகளை எங்கிருந்தாலும் உணர முடியும் என்பதற்கு நிரூபிக்கக்கூடிய சான்றுகள் வரவில்லை. இருப்பினும் இரட்டையர்களின் குணாதிசயங்கள் பல்வேறு வகையில் இருக்கும். சில இரட்டையர்கள் தோற்றத்திலும், நடையிலும் ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் வேறுபடும். சகோதர இரட்டையர்கள் (fraternal twins) ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டிருக்க முடியாது, ஆனால் ஒரே மாதிரியான இரட்டையர்கள் (identical twins) பெரும்பாலும் ஒரே மாதிரியாக தோற்றமளிப்பார்கள்,
இதில் சாதனை படைத்தத பலர் உள்ளனர் அலிசா மாரிச் தனது நான்கு வயதில் சதுரங்கத்தில் அறிமுகமானார், மேலும் அவரது 20 நிமிட இளைய இரட்டை சகோதரி மிர்ஜானா மாரிச்சுடன் . நவீன சதுரங்க வரலாற்றில் " பெண் கிராண்ட்மாஸ்டர் " பட்டங்களைப் பெற்ற ஒரே இரட்டையர்கள் அலிசா மற்றும் மிர்ஜானா . அலிசா மிலிகா மற்றும் டுசான் என்ற இரட்டையர்கள். அது போல தற்போது ஒரே மதிப்பெண் பெற்ற இரண்டு இரட்டையர்கள் இந்த ஆண்டு உள்ளனர்
கருத்துகள்