2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு மாநிலம்
முழுவதும் 4,113 மையங்களில் 9 லட்சம் மாணவ, மாணவிகளும் 11ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் மாதம் 3 ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும், 11 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளும் இன்று வெளியானது. 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் 93.80 சதவீதம்தேர்ச்சி. தமிழநாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு
மார்ச் மாதம் 3 ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடந்து முடிந்ததன் பின்னர் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் 28-ஆம் தேதியில் தொடங்கியது. 10ஆம் வகுப்பு தேர்வை தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 15ம் தேதி முடிந்தது. அதன் பின்னர் பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்ந்து ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெற்றன. தற்போது மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக தேர்வு அட்டவணை வெளியிட்டபோது, மே மாதம் 19-ஆம் தேதி (திங்கட்கிழமை) 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 16 ஆம் தேதி பிற்பகலில் வெளியிடப்படும் என்றும் அன்பில் மகேஷ் கூறிய நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை காலை வெளியிட்டார்
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவையும் தங்களது மதிப்பெண்களையும் www.tnresults.nic.in, dge.tn.gov.in, மற்றும் dge1.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி மூலம் பார்க்கலாம். இணையதளங்களுடன் சேர்த்து, https://results.digilocker.gov.in மற்றும் SMS சேவையின் மூலமும் மதிப்பெண் விபரங்களைப் பெற முடியும்.
93.80 சதவீதம் தேர்ச்சி
மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறைக் கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதியிருந்தார்கள். இதில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தேர்ச்சி விகிதம் - 93.80 சதவீதம் ஆகும். 10 ஆம் வகுப்பில் மாணவியர் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,00.078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு மாணவியர் தேர்ச்சி விகிதம் 4.14 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்விற்கு வருகைபுரியாதவர்கள்: 15,652பேர் ஆகும். 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.31 சதவீதம் தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 11 ஆம் வகுப்பில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்தது.
கருத்துகள்