அமமுக வின் துணைப் பொதுச் செயலாளரான எம். ரெங்கசாமி வீட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு துறையினர் சோதனை
தஞ்சாவூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தற்போது அமமுக வின் துணைப் பொதுச் செயலாளருமான எம். ரெங்கசாமி வீட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் பூண்டி அருகிலுள்ள மலையர்நத்தம் கிராமம் சேர்ந்த எம். ரெங்கசாமி. இவர் தற்போது தஞ்சாவூர் நகரின் தளவாய்ப்பாளையம் வீரையன் நகரில் வசிக்கிறார்.
அதிமுகவில் இருந்தவர், தஞ்சாவூர் சட்டமன்றப்பேரவைத் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.
தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றவர் டி.டி.வி. தினகரன் தலைமையில் உருவான அணிக்குச் சென்றார். பின்னர் தகுதி இழப்புக்கு உள்ளான 18 சட்ட மன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.
அமமுகவில் துணைப் பொதுச் செயலாளராகி, தொடர்ந்து அக்கட்சியில் உள்ளவர் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக புகார்கள் வந்தன.
இந்த நிலையில் தஞ்சாவூர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில் துணைக் கண்காணிப்பாளர் ஆர். அன்பரசன் தலைமையில் 10 அலுவலர்கள், கொண்ட குழுவினர் என ரெங்கசாமி வீட்டில் நேற்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர்.
இச்சோதனை முடிவுக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.ரெங்கசாமி, மனைவி இந்திரா, இளைய மகன் வினோபாரத் ஆகிய மூவர் மீதும், தஞ்சாவூர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்
வழக்குப் பதிவு செய்தனர். அவர் வருமானத்துக்கு அதிகமாக, 1.49 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது தெரிய வந்தது.
ரெங்கசாமி சென்னையில் இருந்ததால், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, வங்கி கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
கருத்துகள்