தமிழ்நாட்டில் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை
உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யக் கோரி, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கை ஜூலை மாதம் 29-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்தது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு முன் மே மாதம் 26-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாட்டு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதம் செய்தனர் பல்கலைக்கழக மானியக் குழு சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தம்ம சேஷாத்ரி நாயுடு ஆகியோர் ஆஜராகி, கோடைக்கால விடுமுறைக்குப் பின் இந்த வழக்கை தள்ளி வைக்குமாறு வலியுறுத்தினர்.அப்போது வழக்கறிஞர் வில்சன், “இந்த வழக்கிற்கு முன்னுரிமை அளித்து கோடைக்கால அமர்விலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
அதனையடுத்து, துணை வேந்தர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை ஜூலை மாதம் 29-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்
கருத்துகள்