தனி நாடு பிரகடனத்தை பலுசிஸ்தான் விடுதலைப்படை (Balochistan Liberation Army) கிளர்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில்,
அரசு அலுவலகங்களில் பாக்கிஸ்தான் கொடியை அகற்றி பலுசிஸ்தான் தனிக் கொடியை ஏற்றுகின்றனர். தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும் படி, இந்தியா மற்றும் ஐ.நா.,வுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியம் பலுசிஸ்தான் அதை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் நடக்கிறது. சமீபத்தில், பாக்கிஸ்தான் ராணுவத்தினர் சென்ற ரயிலை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்று ஏராளமான பாக்கிஸ்தான் ராணுவத்தினரைக் கொன்று குவித்தனர். தற்போது இந்தியாவின் தாக்குதல்களால் பாக்கிஸ்தான் நிலைகுலைந்து போயுள்ளது., திணறும் சூழலில், ஒருபுறம் அனு ஆயுதம் கசிவு மறுபுறம் பலுசிஸ்தானில், பாக்கிஸ்தான்., ராணுவம் மீது, 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' என்ற பலுசிஸ்தான் விடுதலைப்படை (Balochistan Liberation Army) கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.
தலைநகர் குவெட்டா மற்றும் பைசாபாத், சிப்பி, கெச், மஸ்துங், கச்சி உள்ளிட்ட பகுதிகளில் குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்பதாக, அங்குள்ள 'ஜ்ரும்பேஸ்' எனும் வானொலி தகவல் தெரிவித்துள்ளது.
பலுசிஸ்தானின் பல பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், அரசு அலுவலகங்களில் பாக்கிஸ்தான், கொடியை அகற்றி விட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றியுள்ளனர். இதையடுத்து, பலுசிஸ்தானை தனி நாடாக கிளர்ச்சியாளர்கள் குழுவினர் அறிவித்து வெளியிட்ட அறிக்கையில்:
பாகிஸ்தான் சரிவை சந்தித்து வரும் பயங்கரவாத நாடு. எனவே, நாங்கள் சுதந்திர நாடாக பலுசிஸ்தானை அறிவிக்கிறோம். பலுசிஸ்தான் ஜனநாயகக் குடியரசின் இடைக்கால அரசு விரைவில் அறிவிக்கப்படும்.
அதில், பலுசிஸ்தானைச் சேர்ந்த பெண்களும் அங்கம் வகிப்பார்கள். எங்கள் நாட்டை அங்கீகரிக்கும் படி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளைகா கேட்டுக் கொள்கிறோம். டில்லியில் எங்கள் துாதரகத்தை திறக்க அனுமதிக்கும் படி இந்தியாவை வேண்டுகிறோம்.
பலுசிஸ்தான் ஜனநாயகக் குடியரசை ஐ.நா., சபை அங்கீகரித்து, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் புதிய கரன்சி அச்சிடுவதற்குதா தேவையான நிதியுதவி கிடைக்கச் செய்யும் படி கோரிக்கை விடுக்கிறோம்.
மேலும், பலுசிஸ்தானின் வான், கடல், நிலம் ஆகிய எல்லைக்குள் இருக்கும் ஆயுதங்கள் மற்றும் சொத்துக்களை அப்படியே விட்டு விட்டு, பாக்கிஸ்தான்., படையினரை வெளியேற்றவும், அமைதி காக்கும் படையை அனுப்பி வைத்து உதவும் படியும் ஐ.நா., சபையைகா கேட்கிறோம்.
விரைவில் பலுசிஸ்தான் சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் பேரணி நடைபெறும். அதில், பங்கேற்குமாறு நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்போம்.
பலுசிஸ்தான் மக்களிடம் எங்களுக்கு வலுவான ஆதரவு உள்ளது. தற்போது, இங்கு முகாமிட்டுள்ள பாக்கிஸ்தான்., ராணுவத்தினரை எதிர்கொள்ள சர்வதேச நாடுகள் உதவ வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பலூச்சி தேசிய இனப் போராளி அமைப்பாகும். பலுசிஸ்தான் விடுதலைப் படை, அதிகம் பழங்குடி மர்ரி மக்கள் மற்றும் புக்தி மக்களைக் கொண்டுள்ளது.பாகிஸ்தானின் தென் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, நீண்ட காலமாக போராட்டம் நடக்கிறது.
பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், நாங்கள் இந்திய ராணுவத்திற்கு உதவியாகச் செயல்படுவோம் என 'பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்' எனும் கிளர்ச்சிப் படை ஏற்கனவே தெரிவித்தது. இது குறித்து பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை வெளியிட்டுள்ள பதிவில்:
பாகிஸ்தானின் பயங்கரவாத அரசை ஒழிப்பதற்கான இறுதி முடிவை இந்தியா எடுக்க வேண்டும். மேற்கு எல்லையிலிருந்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பலுசிஸ்தான் கிளர்ச்சிப் படை தயாராக இருக்கிறது என நாங்கள் உறுதியளிக்கிறோம்.
இந்தியா பாகிஸ்தானைத் தாக்கினால், இந்தியாவின் ராணுவத்திற்கு உதவியாக செயல்படுவோம். இவ்வாறு அப்போது தெரிவித்த நிலையில்.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் அரசு தங்களை புறக்கணிப்பதாகவும், பலூச் பகுதியை தனி நாடாக அறிவிக்க கோரியும் அங்குள்ள பலூச் விடுதலைப் படையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பலூச் மக்களும் தங்கள் பங்குக்கு பாகிஸ்தானுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் 12 பாகிஸ்தான் ராணுவத்தினர் சென்ற வாகனத்தை வெடி வைத்துத் தகர்த்தனர். பலூச் மாகாண தலைநகர் குவெட்டாவை கைப்பற்றி விட்டதாகவும் பலூச் விடுதலைப் படை அமைப்பினர் அறிவித்துவிட்டனர்.அங்குள்ள பிரபல எழுத்தாளர் மிர் யார் பலூச் நேற்றுமுன்தினம் கூறும்போது, ‘‘பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் தனி நாடாகி விட்டது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும். புதிய அரசிடம். நிர்வாகம் ஒப்படைக்கப்படும். எனவே, டெல்லியில் பலுசிஸ்தான் தூதரகத்தை தொடங்க அனுமதிக்க வேண்டும். ஐ.நா. பலுசிஸ்தானுக்கு அமைதி படையை அனுப்ப வேண்டும். தனி நாடாக பலுசிஸ்தானை அங்கீகரிக்க வேண்டும்’’ என்று பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருந்தாலும், அதன் பலூசிஸ்தானில் இந்துக்களும் சிறுபான்மையினராக இருக்கின்றனர். பாகிஸ்தான் மக்கள் தொகையில் 6 சதவீதம் மக்கள் பலூச் பகுதியில் இருக்கின்றனர். ஆனால், நிலப்பரப்பு 45 சதவீதம் தான். அந்தளவுக்கு மிகப்பெரிய மாகாணம். தனிமங்கள் அதிகம் கிடக்குமிடம். இந்துக்களுக்கு பலுசிஸ்தானுக்கும் உள்ள தொடர்பை இங்குள்ள ஹிங்குலாஜ் அம்மன் கோவில் தான் உறுதி செய்கிறது. இந்தியாவின் 54 சக்தி பீடங்களில் ஹிங்குலாஜ் கோவிலும் ஒன்றாகும். ஹிங்குலி என்பதற்கு சிந்தி மொழியில் முன் நெற்றிப் பொட்டு அல்லது குங்குமம் என்று அர்த்தம். பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலுக்கு ‘சிந்தூர்’ எனப் பெயர் வைத்தது மிகப் பொருத்தமாக இருப்பதை அறிய முடியும். இங்குள்ள அம்மனுக்கு செந்தூரத்தில் தான் அலங்காரம் செய்கின்றனர். இந்தக் கோவிலும் குகையில்தான் உள்ளது. பலுசிஸ்தானின் லயரி தாசில் மலைப் பகுதியில் கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைப் பகுதியில் உள்ள கோயிலுக்கு இந்துக்கள் ஆண்டுதோறும் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு லட்சம் ஹிந்துக்கள் இக் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த கோயிலை ஹிங்லாஜ் தேவி, ஹிங்குலா தேவி மற்றும் நானி மந்திர் கோவில் என மக்கள் அழைக்கின்றனர். பாகிஸ்தான் அரசின் புறக்கணிப்பு, சீனாவின் கட்டுமானப் பணிகளால் பாதிப்பு போன்றவற்றால் விரக்தியிலுள்ள பலுசிஸ்தான் மக்கள், தங்களை தனி நாடாக அறிவிக்க கோரி போராடினர். தற்போது தனி நாடாக பிரகடனம் செய்யப்பட்ட நிலையில் இந்தியா மீதும் இந்திய மக்கள் மீதும் பலூச் மக்கள் வைத்திருக்கும் அந்த நம்பிக்கை நிறைவேறுமா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.
கருத்துகள்