டாஸ்மாக் மேலாளர் விசாகனைத் தொடர்ந்து துணை மேலாளர் ஜோதி சங்கர் விசாரணைக்கு அமலாக்கத்துறையில்
ஆஜரானார்.தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூபாய்.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிக்கை வெளியிட்டது.
கடந்த மார்ச் மாதம் எழும்பூரிலுள்ள டாஸ்மாக் நிறுவனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதன் தொடர்ச்சியாக சென்னையில் 12 இடங்களில் கடந்த 16-ஆம் தேதி சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையிலுள்ள திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, சூளைமேடு ராஜகீழ வீதியில் உள்ள தனியார் மதுபான நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றும் மேகநாதன் வீடு, திருவல்லிக்கேணியிலுள்ள தொழில் அதிபர் தேவக்குமாரின் வீடு.
சாஸ்திரி நகர் 2-வது குறுக்குத் தெருவில் உள்ள மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ் குமாரின் வீடு, சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் முதல் தெருவிலுள்ள பாபுவின் வீடு, தியாகராய நகர் ஆற்காடு சாலையில் உள்ள கேசவனின் வீடு, எம்.ஆர்.சி. நகரிலுள்ள தொழில் அதிபர் ரித்தீஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனை நள்ளிரவில் முடிவடைந்தது. அனைத்து இடங்களிலும் நடைபெற்ற சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி அமலாக்கத்துறை அலுவலர்களின் காரில் எடுத்துச் சென்றனர்.
சோதனை நடந்த இரண்டு நாட்களும் விசாகனை அமலாக்கத்துறை அலுவலர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின். போது அவரது செல்போன், மற்றும் லேப்டாப்பில் இருந்தும் பல்வேறு ஆதாரங்களை அமலாக்கத்துறையினர் திரட்டினர்.
இதைத் தொடர்ந்து டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கர் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினயதை ஏற்று ஜோதி சங்கர் அமலாக்கத்துறையில் இன்று ஆஜரானவரிடம் ஏற்கனவே 7 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அலுவலர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். அதில் இன்னும் பல தொழில் அதிபர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிக்குவார்கள் எனக் கூறப்படுகிறது. DAWN பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் படம் மட்டும் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று இயக்கிய "மேலிடம்" யார்? சினிமாவின் மேலிடமாக கருதப்படும் அந்த நபர் யார்? ஆகாஷ் பாஸ்கரன் படத்திற்கு எதற்கு இந்தச் சலுகை? Dawn பிக்சர்ஸுக்கும் அரசியல் கட்சி மேலிடத்திற்கும் என்ன தொடர்பு? யார் அந்தத் தம்பி என்பதற்கு இயற்கையின் பதில் விரைவில் வரும். இந்த நிலையில் தலைமறைவான ரத்தீஷ் & ஆகாஷ் எங்கே? - விமான நிலையத்தில் விசாரணை.. விமான நிலைய அதிகாரிகளிடம் பயண விவரங்களைக் கோரும் ED
கருத்துகள்