கரூர் மாவட்டம் குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள ஏரிகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் வகையில்,
காவிரியாற்றில் அமைந்துள்ள மாயனூர் அணைக்கட்டிலிருந்து நீரேற்றுத் திட்டம் (PUMPING SHEEM) மூலம் தண்ணீர் கொண்டு வரும்,
தோகைமலை நீரேற்றுத் திட்டத்தை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி.
ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி. தோகைமலையில் பத்தாயிரம் விவசாயிகளைத் திரட்டி. கவன ஈர்ப்பு மாநாடு நடத்துவது தொடர்பாக
கரூர் மாவட்டம் தோகைமலையில் நேற்று விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் காவிரி ஆற்றின் படுகை விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவரும்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக முன்னாள் முதல்வருமான
சீ. ஜெயராமன் தலைமையில்
காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பு மாநிலத் துணைத் தலைவர் கார்ணாம்பட்டி ஆர் .முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது.
காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன்,
மாநிலத் தலைவர் மிசா.மாரிமுத்து,
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு நலச் சங்க தலைவர் கோயம்புத்தூர் சூலூர் கே. ஏ. சுப்பிரமணியம்,
கூட்டமைப்பு கரூர் மாவட்டத் தலைவர் பிரகாஷ் கண்ணா,
பில்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.ராகவன்,
கரூர் மாவட்டச் செயலாளர் மகேந்திரன், சாந்தி வனம் அறக்கட்டளை எம். அரசப்பன், விவசாயிகள் மறுவாழ்வு அறக்கட்டளை நாகராஜன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்
சீத்தப்பட்டி ரமேஷ் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத் தலைவர் சுப. ராஜேந்திரன், வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர் வி முருகேசன், இயற்கை விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் கலியபெருமாள் ஆகியோருடன் பல விவசாயிகள் கலந்து கொண்ட. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்.
கரூர் மாவட்டம் குளித்தலை சட்ட மன்றத் தொகுதியில் குளித்தலை தோகைமலை கிருஷ்ணராயபுரம் ஆகிய மூன்று ஒன்றியங்கள் அடங்கிய நிலையில்.
இப் பகுதி காவிரி ஆற்றின் கரையில் அமைந்திருந்தாலும்
மேட்டுப் பாங்கான பகுதியாவதால் காவிரி ஆற்றுப் பாசனமில்லாமல் வறட்சியான பகுதியாக மழையை நம்பி வானம் பார்த்த பூமியாக மானாவாரி விவசாயம் தான் நடக்கிறது.
காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி முதலில் (1952-1957) ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குளித்தலை தொகுதியின் தற்போதய நிலை .
நீண்ட காலமாகவே குளித்தலை தோகைமலை கிருஷ்ணராயபுரம் பகுதி விவசாயிகள் காவிரி ஆற்றில் பருவ மழை காலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி வெள்ளநீரை நீரேற்றுத் திட்டம் அமைத்து ஏரிகள் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து பாசன வசதி செய்து தரவேண்டும் என விவசாய மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆட்சியிலும் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பது தான் உண்மை.
காவிரி ஆற்றின் கரையிலிருந்தும் வறட்சியில் வானம் பார்த்த பூமியில் வாடி வதங்கியுள்ளார்கள்.
தோகைமலை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தோகைமலை நீரேற்றுத் திட்டம் நீறைவேற்றப் பட்டால் கரூர் மாவட்ட மூன்று ஒன்றியங்களில் உள்ள 15 பொதுப்பணித்துறை ஏரிகளும், 46 ஊராட்சி ஒன்றியக் குளங்களும், 117 கிராம பஞ்சாயத்து குளங்களும் தண்ணீர் பெறும். சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். பகுதி நிலத்தடி நீர் மட்டமும் உயரும். கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு பாசனப் பரப்பும் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமப் புறங்களில் வாழ்வாதாரம் மேம்படும்.
கடந்த ஆட்சி காலத்தில் 2019 ஆம் ஆண்டில் மேட்டூர் அணையிலிருந்து சேலம் மாவட்டத்தில் மேட்டுப் பாங்கான 100 ஏரிகள் குளங்களுக்கு நீரேற்று நிலையம் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் சரபங்கா நீரேற்றுத்
திட்டம் 545 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேபோல் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 60 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த அத்திக்கடவு- அவிநாசி நீரேற்றுத் திட்டம் 2016 ஆம் ஆண்டில் துவங்கி 1916 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு தண்ணீர் கொண்டு சென்ற நிலையில் விவசாயிகள் தற்போது பயன் பெற்று வருகின்றனர்.
மேட்டூர் சரபங்கா திட்டத்தைப் போல,
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தைப் போல,
தோகைமலை நீரேற்றுத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி. தோகைமலையில்
பத்தாயிரம் விவசாயிகளைத் திரட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்.
கவன ஈர்ப்பு மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. கரூர் மாவட்டம் தோகைமலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்த பிறகு. அந்த திட்டம் இதுவரை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் கடமை செய்ய இதுவரை மறந்த குளித்தலை சட்ட மன்ற உறுப்பினர் R. மாணிக்கத்தை நினைவு படுத்தும் நிலையில் இக் குழுவின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.
தோகைமலை நீரேற்றுத் திட்டம் குறித்து எடுத்துக் கூறி அவர்கள் ஆதரவு கேட்டதை அறிந்து மக்கள் வியப்படைந்தனர். சட்ட மன்ற, நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய பணிகளை விவசாய சங்கங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் செய்வது சிறப்பு.
கருத்துகள்