ரூபாய்.10,000 லஞ்சம் சீர்காழி
மண்டலத் துணை வட்டாட்சியருடன் தற்காலிக கணினி இயக்குபவருடன் கைது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கோவில்பத்து தாடாளன்கோவில் பகுதியில் வசித்து வருபவர் குஞ்சிதபாதம் மகன் அலெக்சாண்டர் (வயது 59). இவரது தந்தை குஞ்சிதபாதத்திற்கு கடந்த 1972 ஆம் ஆண்டு அரசு சார்பில் 650 சதுர மீட்டர் நிலம்
அசைன்மென்டாகவழங்கப்பட்டதாகவும். இந்த நிலம் குஞ்சிதபாதத்திற்கு பிறகு அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரிலும் உள்ளது. இந்நிலையில் இந்த இடத்தின் பத்திரத்தை வைத்து வங்கிக் கடன் வாங்குவதற்காக அலெக்ஸாண்டர் முயற்சி செய்துள்ளார். அப்போது இந்த நிலம் நத்தம் நில வரிப் பட்டாவில் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அலெக்ஸாண்டர் தாயார் பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக, சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் மனு செய்தார் பின்னர் காலதாமதம் செய்த மண்டலத் துணை வட்டாட்சியர் தேவகியைச் சந்தித்து மனு குறித்து விபரம் கேட்ட நிலையில். தேவகி 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்த நிலையில். ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும்
லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனைப்படி அலெக்சாண்டர் கொண்டு வந்த பணத்தை அரசு சாட்சிகள் முன்னிலையில் பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய நோட்டுகளாகக் கொடுத்து, அலெக்சாண்டரிடம் மண்டலத் துணை
வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டலத் துணை வட்டாட்சியர் தேவகியை சந்தித்து கொடுக்கும் படி தெரிவித்தார்கள் தனது நிலத்திற் குரிய நத்தம் நில வரித் திட்ட பட்டாவை கணினி பதிவேற்றம் செய்வது குறித்து கோரிக்கை மனு தொடர்பாக மண்டல துணை வட்டாட்சியர் தேவகி அவரிடம் ரூபாய் 15,000 பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இறுதியாக பேரம் பேசி ரூபாய் 10,000 கொடுத்தால் தான் கணினியில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் என கூறியுள்ளார். அலெக்சாண்டர் புகார் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் மனோகரன், ஆய்வாளர் அருள் பிரியா மற்றும் குழுவினர் அலெக்சாண்டரிடம் ரசாயனப் பொடி தடவிய பணத்தினை கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்ட
அலெக்ஸாண்டர் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மண்டல துணை வட்டாட்சியர் தேவகியிடம் கேட்ட நிலையில் பணம் கொடுக்க வந்துள்ளதை அறிந்து அப்போது அந்த பணத்தை அலுவலகத்தில் உள்ள தற்காலிக கணினி பணியாளர் டெல்பியிடம் கொடுத்திட தேவகி கூறியுள்ளார். அதன்படி டெல்பி ரசாயனம் தடவிய பணத்தை அலுவலக வாசலில் பெற்றுக் கொண்டு தனது இருக்கையின் அருகே வைத்துள்ளார். அப்போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணம் பெற்ற கையுடன் பணத்தையும் பறிமுதல் செய்தனர். டெல்பியிடம் விசாரணை செய்ததில் மண்டலத் துணை வட்டாட்சியர் தெரிவித்ததின் பெயரில் பணம் பெற்றதாகக் கூறியுள்ளார். அதனை அடுத்து மண்டலத் துணை வட்டாட்சியர் தேவகி, தற்காலிக கணினி இயக்க பணியாளர் டெல்ஃபி ஆகியோரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையினர் வட்டாட்சியர் அலுவலகக் கதவினை பூட்டி சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை செய்தனர்.
விசாரணையின் நிறைவில் லஞ்சம் பெற்ற உறுதியானது அதையடுத்து இருவரையும் கைது செய்தனர் .மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்