பிப்ரவரி மாதம் 2024 ஆம் ஆண்டில் நிரப்ப வேண்டிய தகவல் ஆணையர் பொறுப்புகளை ஒன்றரை ஆண்டு கால தாமதத்திற்கு பின்னர் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு அரசு எட்டு மாத காலதாமதத்திற்குப் பின் அக்டோபர் மாதம் 2024 ஆம் ஆண்டில் முடிவு செய்தனர். அதன் பின்னர் ஆளுநர் ஆர் என் ரவி நியமனத்தை ஆமோதிக்க எட்டு மாத கால தாமதம் . இவர்களின் தாமதத்தால் பாதிக்கப்படுவது தமிழ்நாடு மக்கள் தான். ஏற்கனவே 45,000 மனுக்கள் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் குவிந்து நிலுவையில் உள்ளது.
நியமிக்கப்பட்டவர்கள் மற்ற தகவல் ஆணையர்கள் போல ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து வழக்குகள் மட்டும் தான் விசாரணை செய்து காலத்தை கடத்தாமல் 50 முதல் 100 மனு மேல்முறையீட்டு வழக்குகளை விசாரணை செய்து ஆணைகள் பிறப்பிக்க வேண்டும்.இவர்கள்
பெறப்போகும் 2.25 லட்சம் மாதச் சம்பளத்திற்கு மக்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது விரைவான தீர்வை தரவேண்டும் மாநில தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை 2 ல் இருந்து 6 ஆக உயர்த்தப்பட்டது. அந்த வகையில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அலுவலரான எம்.டி. ஷகீல் அக்தர் தலைமை தகவல் ஆணையராகச் செயல்பட்டு வருகிறார். மேலும் தாமரைக்கண்ணன், பிரியாகுமார், திருமலை முத்து மற்றும் செல்வராஜ் உள்ளிட்ட 4 பேர் தகவல் ஆணையர்களாகப் பொறுப்பில் உள்ளனர். இத்தகைய சூழலில் தான்
மாநில தகவல் ஆணையர்கள் நியமனம்!
தமிழ்நாடு தகவல் ஆணையம் சென்னையில் உள்ள நந்தனத்தில் செயல்படுகிறது. இந்த ஆணையம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி 2 வது மேல்முறையீடு மீதான புகார் மனுக்கள் விசாரிக்கும் அமைப்பாகும். அதோடு இந்த ஆணையத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட ஆணையை நிறைவேற்றப்படாதது குறித்து விசாரிக்கும் அமைப்பாகவும் செயல்படுகிறது. ஆரம்பத்தில் மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 2 மாநில தகவல் ஆணையர்களைக் கொண்டு தமிழ்நாடு தகவல் ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் தான் மாநிலத் தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை 2 ல் இருந்து 6 ஆக உயர்த்தப்பட்டது. அந்த வகையில் தான் இரண்டு தகவல் ஆணையர்களுக்கான பொறுப்பு காலியாக இருந்த நிலையில் மாநில தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு ஆணையர்களுக்கான இடங்களுக்கு வழக்கறிஞர்கள் வி.பி.ஆர். இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் (கர்நாடகா வழக்கறிஞர்) ஆகியோரை மாநிலத்தின் தகவல் ஆணையர்களாக நியமனம் செய்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார் இதற்கான உத்தரவை மனிதவளத் துறையின் முதன்மைச் செயலாளர் ஜி. பிரகாஷ் பிறப்பித்துள்ளார். தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வி.பி.ஆர். இளம்பரிதி அரசின் கூடுதல் வழக்கறிஞராக இருந்தவர் என்றும், எம். நடேசன் கர்நாடகா வழக்கறிஞராக இருந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
கருத்துகள்