பிள்ளையார்பட்டி, குன்றக்குடி ஆலயங்களில் நடிகர் 'ஜெயம்' ரவி, அவரது காதலி
பாடகி கெனிஷாவுடன் தரிசனம். ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபின் திரைப்படத் தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் இல்லத் திருமணத்திற்கு பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி கலந்து கொண்டதையடுத்து ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட, ஜெயம் ரவியும் அவருக்கு பதில் அறிக்கை வெளியிட பின்னர் நீதிமன்றம் சென்று ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்ளக்கூடாது எனத் தடை உத்தரவு வந்தது. அப்போது தனக்கு ஒரு மாதத்திற்கு ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை வைத்த நிலையில் விவாதங்கள். மத்தியில், தற்போது ஜெயம் ரவியும், பாடகி கெனிஷாவும் குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதர் கோவிலுக்குச் சென்ற தரிசனம் செய்தார்கள். அப்போது தங்களது கழுத்தில் மாலையுடன் நடிகர் ஜெயம் ரவியும், பாடகி கெனிஷாவும் கோவில் பூஜகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளப்பதிவு மூலம் வெளி வந்த நிலையில் தற்போதுள்ள காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது அதிகரிக்கும் நிலையில் நடிகர்கள் என்பவர்கள் பலரும் அறிந்த நபர்கள் என்ற முறையில் அவர்கள் வாழ்வியல் முறை பொதுவாக பார்வை பெறுகிறது.
குன்றக்குடி கோவிலில் சங்கர், செந்தில் குருக்கள் இருவருக்கும் பிரசாதம் வழங்கியதுடன் முடிந்திருந்தால் விவாதம் ஆகாது. ஆனால் அவர்கள் எடுத்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளத்தில் இப்போது விவாதம் எடிட்டர் மோகன் மகன் இரவி எனும் 'ஜெயம்' இரவி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மோகன் எனப் பெயர் மாற்றம் செய்த திரைப்பட எடிட்டிங் தொழில் செய்த முகமது ஜின்னா அப்துல் காதர் இராவுத்தர் என்ற, தமிழ் இஸ்லாமியத் தந்தைக்கும், ஆந்திராவைச் சேர்ந்த சென்னையில் வாழ்ந்த வரலட்சுமி என்பவருக்கும் மகனாவார். இவரது அண்ணன் இராஜா ஒரு திரைப்பட இயக்குநர். இராஜாவின் பெரும்பாலான படங்களில் இரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது சகோதரி ரோஜா பல் மருத்துவர். இரவி சென்னையிலும் ஹைதராபாத்திலும் வளர்ந்தார். சென்னை அசோக் நகரிலுள்ள ஜவஹர் வித்தியாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
பரதநாட்டிய நடனக் கலைஞர் நளினி பாலகிருஷ்ணனிடம் நடனத்தைக் கற்று 12 வயதில் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். சென்னை லயோலா கல்லூரியில் கட்புலத் தொடர்பாடல் பட்டம் பெற்ற பிறகு, திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்தார். மும்பையிலுள்ள கிஷோர் நமித் கபூர் நிறுவனத்தில் நடிப்புப் பயிற்சி பெற்றார். நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு, கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் (2001) படத்தில் சுரேஷ் கிருஷ்ணா உதவி இயக்குநராக இரவி பணியாற்றியிருந்தார். ஜெயம் இரவி 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி அன்று பிரபல தொலைக்காட்சித் தயாரிப்பாளரான கல்பனா ஹவுஸ் எனும் வீட்டை நகரத்தார் குடும்பம் ஒன்றிடம் அபகரித்து உரிமை அடைந்த சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஆரவ்.டிக் டிக் டிக் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்,
ஜெயம் இரவியும் ஆர்த்தியும் 2024 ஆம் ஆண்டில் பிரிந்தனர். ஜெயம் ரவி தோழி கெனிஷாவுடன் குன்றக்குடி ஸ்ரீ சண்முகநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்திருந்தார். அப்போது அங்கிருந்த பக்தர்களுடன் ரவி கெனிஷா இருவரும் புகைப்படங்கள் எடுத்திருந்தனர். இந்த புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் தான் நடிகர் ஜெயம் ரவி தான் புதியதாக ஸ்டுடியோ ஒன்றும் தொடங்கி இருக்கிறார்.
கருத்துகள்