இரண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்ய
அ.தி.மு.க-வுக்கு 68 சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கே.வி.குப்பத்தில் இரட்டை இலை சின்னம் மூலம் வெற்றி பெற்ற புரட்சி பாரதம் கட்சி உறுப்பினர் பூவை ஜெகன் மூர்த்தி யுடன் சேர்த்து 66 சட்ட மன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.க-வுக்கு உள்ளனர். இந்த எண்ணிக்கையுடன், கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கிடைத்தால், எளிதாக
இரண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க. மாநிலங்களவை பலம் கூடும் ஆனால், அதில் தான் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், அவர்களை அ.தி.மு.க. அங்கீகரிக்கக்கூடாதென சபாநாயகர் பி.எஸ்.அப்பாவுவிடம் கடிதம் கொடுத்திருந்தது அ.தி.மு.க. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் அரசியல் ரீதியாக சூடுபிடித்த நிலையில், நீதிமன்றத்திலும் 'ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மூவரை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக அங்கீகரிக்க முடியாது' என வாதிட்ட நிலையில்.
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரான உசிலம்பட்டி ஐயப்பன் அவர்கள் பக்கம் இல்லை என்றாலும், கட்சியிலிருந்து அவர் நீக்கப்படவில்லை என்பதால், சட்டமன்ற அ.தி.மு.க கொறடா உத்தரவை அவர் ஏற்றுத்தான் ஆக வேண்டும். ஆக, ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரைக் கழித்தால், அ.தி.மு.க உறுப்பினர்களின் பலம் 63 ஆகிவிட்டது. அதோடு பாரதிய ஜனதா கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களையும் சேர்த்தால் கூட, இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களை வெற்றிபெற வைக்கும் அளவுக்கு எண்ணிக்கையில்லை.
அதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் சேலத்தில் நடந்தது. சட்டரீதியாகவுள்ள இடர்பாடுகள் விவாதிக்கப்பட்டபோது, ''நாமளித்த கடிதத்தை சபாநாயகர் வாங்கி வைத்துக்கொண்டாரே தவிர, எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரைக் கட்சி சாரா உறுப்பினர்களாக அறிவிக்கவில்லை. சட்டப்பேரவை விதிகளின்படி பார்த்தால், அவர்கள் மூவருமே இன்று வரை அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களாகத்தான் தொடர்கிறார்கள்.
ஆகவே, அ.தி.மு.க கொறடா வேலுமணி இடும் உத்தரவுக்கு சட்ட மன்ற நடவடிக்கைகளில் அவர்கள் மூவரும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். நமது சட்ட மன்ற உறுப்பினர்களின் பலம் 66 ஆகவே தொடர்கிறது" என வழக்கறிஞரணி நிர்வாகிகள் சிலர், எடப்பாடி கே.பழனிசாமியிடம் எடுத்துரைத்தனர். ஆனால் இதில் அந்த மூவருக்கும் கொரடா உத்தரவு பிரப்பித்தால் இனி நீதிமன்றத்தில் இவர்கள் அதிமுக இல்லை என்று வாதம் செய்தால் அது பொருந்தாது என்பது தான் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் துணை விதி ஆகும். அதை அந்த வழக்கறிஞர்கள் சிந்தனை செய்தார்களா தெரியவில்லை, அதன் பின்னர் தான், இரண்டு மாநிலங்களவை வேட்பாளர்களுக்கான பரிசீலனையில் தீவிரமாக இறங்கினார் எடப்பாடி.கே.பழனிச்சாமி கடந்த முறை சி.வி.சண்முகத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக பதவி வழங்கிய போதே, தனக்கும் அந்த வாய்ப்பை எதிர்பார்த்தார் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார். ஆனால், குறுக்கே புகுந்து தன்னுடைய ஆதரவாளரான முதுகுளத்தூர் தர்மருக்குப் பெற்றுக் கொடுத்து விட்டார் ஓ.பன்னீர் செல்வம் அதன் தொடர்ச்சியாகவே பெரும் புகைச்சல் எழுந்தது, ஓ.பன்னீர் செல்வம் உட்பட பலரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்தமுறையும் தனக்கு சீட் எதிர்பார்த்திருக்கும் டி.ஜெயக்குமார், 'பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துவிட்டதால் இராயபுரம் தொகுதியிலுள்ள சுமார் 40 ஆயிரம் சிறுபான்மையினர் சமூகத்தின் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு விழாமல் போகலாம். ஆகவே, என்னை நாடாளுமன்ற உறுப்பினராக்கி விடுங்கள்' என கட்சி மேலிடத்திடம் கேட்டிருக்கிறார்.
அவர் எதிர்பார்த்த மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியை முன்னாள் அமைச்சர் வளர்மதியும் எதிர்பார்ப்பதால், டி.ஜெயக்குமாரை நாடாளுமன்ற உறுப்பினராக்கி டெல்லிக்கு அனுப்ப கட்சி மேலிடமும் அவர்கள் ஆலோசனை கட்சியின் சம்மதம் பெற ஆலோசித்திருக்கிறது.இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வுக்கு அ.தி.மு.க-வின் உட்பிரிவான புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் சதன் பிரபாகருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதாக தென்படுகின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிறைகுளத்தானின் மகனான சதன் பிரபாகர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தீவிரமான ஆதரவாளர். அந்த ரூட்டில் தான், கட்சி மேலிடத்தையும் நெருங்கியிருக்கிறார் சதன் பிரபாகர். 'தென்மாவட்டங்களில், அவர் சார்ந்த சமூக வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கு சதன் பிரபாகரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என ஆர்.பி.உதயகுமார் கொடுத்த ஆலோசனை, தீவிரமாகவே பரிசீலித்து கடைசியாக நிராகரிக்கப்பட்டது எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பில் மேலிடம் முடிவு. இதற்கிடையே, பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க தரப்புகளிலிருந்து, 'எங்களுக்கு ஒரு உறுப்பினர் பதவி ஒதுக்க வேண்டும்' என ஆளாளுக்குப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை எடப்பாடி கே.பழனிச்சாமி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" என்றனர் விரிவாகவே.
மே 29-ம் தேதி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டிய எடப்பாடி, கே.பழனிச்சாமி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து அவர்களுடன் ஆலோசித்திருக்கிறார். "ஜூன் மாதம் 2-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கவிருப்பதால், இந்தக் கூட்டத்தின் முடிவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அக்கட்சி வட்டாரத்தில்.தகவல் அந்த இரண்டு மாநிலங்களவை இடங்களிலுமே தற்போது அதிமுக போட்டி வேட்பாளர்கள் அறிவிப்பு
தேமுதிகவிற்கு 2026-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலின் போது வழங்கப்படும் என அதிமுக அறிவித்த நிலையில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜுன் மாதம் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் தேர்தலில
தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகிய மூவர் போட்டியிடுவார்கள் என்றும், மற்றொரு இடம் மக்கள் நீதி மய்யத்திற்கும் ஒதுக்கப்பட்டதில் நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்றும் அக் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், அதிமுக சார்பாக இறுதியில் போட்டியிடப் போவது யார்? என்பதில் பெரும் இழுபறியால் தேமுதிகவும் தங்களுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்றும், அதிமுக இது தொடர்பாக வாக்குறுதி அளித்ததாகவும் கூறியது. ஆனால், அதிமுக தரப்பில் அதை மறுத்து பேசப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதன்படி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவிற்கு வரும் 2026-ஆம் ஆண்டு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்றும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ அறிக்கையிலும், "அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க தொடரும்.
2026-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அ.தி.மு.க. வழங்கும்" என எடப்பாடி கே.பழனிசாமியின் ஒப்புதலோடு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் என்பதே தேர்தலையொட்டி தான். அவர்களுடைய கடமை அ.தி.மு.க ஆற்றியிருக்கிறார்கள். தேர்தலையொட்டி எங்கள் கடமையை நாங்கள் ஆற்றுவோம்.
2024 தேர்தலின் போது வருடத்தைக் குறிப்பிட்டுத் தருங்கள் என்று சொன்னபோது, வருடம் குறிப்பிட்டுத் தருவது வழக்கமல்ல. என்று எடப்பாடி சொன்னார் கே.பழனிசாமி. அது 2026 என்று இப்போது அறிவித்திருக்கிறார்கள். 2026 ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் எங்களுடைய கூட்டணி நிலையை அறிவிப்போம் என்று ஏற்கனவே கூறிவிட்டோம்.
அரசியலில் தேர்தலை நோக்கித் தான் எங்களின் பயணமும் இருக்கும்." என்று விஜயகாந்த் இல்லாமல் இயங்கும் தேமுதிக நிர்வாகி பிரேமலதா கூறினார். நின்று பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தேர்வு. என்பது திமுகவின் வழக்கறிஞர் வில்சன் தேர்வு போல கட்சியின் பலருக்கும் இப்போது மூத்த வழக்கறிஞர்கள் டெல்லியில் இருக்க வேண்டிய அவசியம் வருவதற்கு காரணம் கட்சி மீதான அமலாக்கத்துறை ஊழல் வழக்குகள் நிலைதான்
கருத்துகள்