சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகா நாட்டுப்புறப் பாடகி மற்றும் திரைப்படக் கலைஞர்
கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக 99 ஆவது வயதில் 14 ஜூன் 2025 ல் காலமானார், மதுரை தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியவர் தமிழ்த் திரைப்படங்களிலும் இயக்குனர் ஆர். பாண்டிய ராஜன் இயக்கத்தில் நடித்துள்ளார்.தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவரவார் பின்னர் வந்த பிற இசைக் கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார். அகில திந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராகத் தன் பணியைத் தொடங்கியவர், அங்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் திரைப்படங்களில் நடிக்கத்
தொடங்கினார். 1993 ஆம் ஆண்டில் கலைமாமணி விருது பெற்றார்.1985 ஆம் ஆண்டு ஆண்பாவம் 1988 ஆம் ஆண்டு ஆயுசு நூறு 1996 ஆம் ஆண்டு கோபாலா கோபாலா வெளிவந்த நிலையில் பாடல் ஒலிப்பதிவிற்குச் சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் உடல் வலுவிழந்து ஓய்வெடுத்து வந்த நிலையில் காலமானார்.இவருக்கு இந்த தமிழ் திரையுலகம் உதவி செய்திருக்கலாம்.
அல்லது அவர் சார்ந்த கட்சியும் உதவி இருக்கலாம். அவர் சார்ந்த ஆதிதிராவிடர் சமுதாயமும் ஆதரவுக் கரம் நீட்டி இருக்கலாம். மிகவும் innocent மற்றும் பெருந்தன்மையானவர் என்பது பல்வேறு கலைநிகழ்ச்சிகளின் போது தெரிந்த விஷயம். காலி டப்பாக்கள் கூத்தாடும் இன்றைய சமூக ஊடக காலத்தில் நிறை குடமாய் இருந்து மறைந்த கிராமியப் பாடகர்
கருத்துகள்