இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மீனவர் இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகிற்கான
உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியைப் பெற இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மீன் வளத்துறை அலுவலகத்தில் ஆய்வாளர் சகுபர் சாதிக்கிடம் கடந்த வாரம் மனு அளித்துள்ளார்.
அதற்கு அனுமதி வழங்க வேண்டுமானால் ரூபாய் .5100 லஞ்சமாகத் தர வேண்டும் எனக்கேட்டுள்ளார். அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூபாய்.3500 தானே என மீனவர் கேட்டார். தனக்கு தனியாக ரூபாய்.1600 கொடுத்தால் தான் அனுமதி கிடைக்கும் என ஆய்வாளர் கூறினார்.
எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத மீனவர் இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அதையடுத்து அவர்கள் ஆலோசனைப்படி மீனவப் படகு சகுபர் சாதிக்கை நேற்று அலுவலகத்தில் சந்தித்து அவரிடம் பினாப்தலீன் இரசாயனம் தடவிய ரூபாயாக .1600ஐ பதிவு செய்து கொடுத்தார்கள்.
அந்தப்பணத்தை வாங்கியவரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர் பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர்.
இராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. பின்னர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் சேர்த்தனர்.
கருத்துகள்