போதைப்பொருள் பயன்பாடு காரணமாக- நடிகர் ஸ்ரீகாந்த்திடம் விசாரணை நடத்தி கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அதிமுக பிரமுகரான பிரசாத்திடமிருந்து போதைப்பொருட்கள் வாங்கியதாகக் குற்றச்சாட்டு
சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறை நடிகர் ஸ்ரீகாந்த்திடம் தீவிர விசாரணை நடத்தி பின்னர் கைது செயய நடிகர்
ஸ்ரீகாந்த்திற்கு சம்மன் கொடுத்து விசாரணை நடத்தி பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைமருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகிய நிலையில் பின்னர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கானா நாட்டைச் சேர்ந்த நபர், பிரதீப் குமார் உட்பட இருவர் கைது. சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் ஒரு தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகியான மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத், மற்றொரு அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரௌடியாக பார்க்கப்படும் சுனாமி சேதுபதி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
அதன் பிறகு அதிமுக ஐ.டி விங் நிர்வாகியான பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என அடுத்தடுத்து காவல்துறையில் புகார்கள் கொடுக்கப்பட்டன. இது தொடர்பாக நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், பிரசாத், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. போதைப் பொருளை யாரிடம் வாங்கினார், யாருக்கெல்லாம் விநியோகம் செய்தார் என காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அதிமுக ஐ.டி விங் நிர்வாகி பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் என தற்போது பேசப்படும் எடப்பாடி கே. பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருளை சப்ளை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்திடம் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல்துறை விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். ரோஜாக்கூட்டம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அவர் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகி விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார்.போதை பொருள் விற்ற வழக்கில் அதிமுகவை சேர்ந்த பிரசாத் என்பவன் ஒரு படத்தை தயாரித்தவன் .
இவனுக்கு இவ்வளவு பணம் ஏது ?
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மூலமாக ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வாங்கியதாக, கைதான பிரதீப் என்பவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நடவடிக்கை.
கட்சி வேலை செய்திராத பிரசாத்தை, மூன்று முறை கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான டாக்டர் வேணுகோபாலோடு சேர்த்து, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றப்பேரவைத் தேர்தல் பணிக்காக சென்னை புறநகர் அதிமுக மாவட்டத்துக்கு நியமிக்க பரிந்துரை செய்த நபருக்கு
ஒரே ஒரு நாள் கூட பூத் வேலைக்கு வரவில்லை என்பதை டாக்டர் வேணுகோபால் அதிமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றதும், பிரசாத் நீக்கப்பட்டார்.
பிரசாத் என்ன செய்கிறார், என்ன தொழில் அவருக்கு என்பது போன்ற அவரது செயல்பாடுகள் தெரியாமல் அவர் ஐ.டி விங் மாநில நிர்வாகியாக தொடர அனுமதிக்கப்பட்டிருந்தால், அது பிழை. ஒரு மாநில நிர்வாகி என்ன செய்கிறார் என்பது கூட தெரியாமல் இருக்கும் அதிமுக ஐ.டி விங் தலைமை, ஒரு பெரிய கட்சியின் ஐ.டி விங்கை நடத்த தகுதியற்ற தலைமை.
பிரசாத்தின் செயல்பாடுகளைத் தெரிந்தே அவர் பதவியில் தொடர அனுமதிக்கப்பட்டிருந்தால் அது தான் குற்றம். அதனால் தான் ஐடி விங் கூட்டம் கூடுவதாகத் தெரிகிறது. போதைப்பொருளுக்கு அடிமையானது எப்படி என்பது குறித்து நடிகர் ஸ்ரீ காந்த் தெரிவித்ததாக தகவல்
தீங்கிரை என்ற படத்தில் தான் நடித்ததற்காக ரூபாய்.10 லட்சத்தை, தயாரிப்பாளரான அ.தி.மு.க ஐடி விங் முன்னாள் நிர்வாகி பிரசாத் பாக்கி வைத்திருந்ததாக ஸ்ரீகாந்த் வாக்குமூலம்
தனக்குத் தரவேண்டிய ரூபாய்.10 லட்சம் பாக்கிக்காக, 3 முறை தனக்கு பிரசாத் கொக்கைன் எனும் போதைப் பொருள் வாங்கிக் கொடுத்ததாகவும், 4ஆம் முறை தானே கேட்கும் அளவிற்கு அடியானதாகவும் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்ததாக தகவல்.
கருத்துகள்