மதுரையில் நாளை நடைபெறும் முருக பக்தர்கள் அரசியல் கலந்த ஆன்மீக மாநாட்டிற்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் நடிகர் பவன் கல்யாணுக்கு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உடன் சென்று பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்,
பாஜக தலைவர்கள் குழுவுடன், கடந்த வியாழக்கிழமை மங்களகிரியிலுள்ள ஜேஎஸ்பி கட்சி தலைமையகத்தில் பவன் கல்யாணை சந்தித்து அழைப்பிதழை நேரில் வழங்கினார். ஜூன் மாதம் 22 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் (முருகன் பக்தர்கள் மாநாடு) கலந்து கொள்ளுமாறு ஜன சேனா கட்சித் தலைவரும் துணை முதல்வருமான பவன் கல்யாணுக்கு அழைப்பு விடுத்தார்கள். ஆன்மீகக் கூட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள பவன் கல்யாண் அழைக்கப்பட்டுள்ளார்.
ஜனாதன தர்மம் அல்லது மனூ தர்மத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஒரு குறிப்பிடத்தக்க ஆன்மீக நிகழ்வாகும் என்றும், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து, ஆறுபடை வீடுகளில் ஒரே இடத்தில் ஆலய அமைப்பின் செட் அமைத்து பக்தர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மாநாட்டிற்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்தும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர்கள் தெரிவித்தனர். பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் பொங்குலேட்டி சுதாகர் ரெட்டி, தலைவர்கள் எம்.சக்ரவர்த்தி, எஸ்.அமரபிரசாத் ரெட்டி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குழுவில் இருந்தனர்.“மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது.
நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். அவர் நமது பண்பாட்டின், கலாச்சாரத்தின் அடையாளம். நான் அனைத்து அறுபடை வீடுகளுக்கும் சென்றுள்ளேன். ஆனால் இங்கு அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதனை ஒருங்கிணைத்த இந்து முன்னணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் இமயமலை அடிவாரத்திலுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே இடத்தில் நான்கு புனித யாத்திரை ஸ்தலங்கள் உள்ளன. அதுபோல் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகளில் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் அமைத்ததின் மூலம் பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது.” எனத் தெரிவித்தார்
கருத்துகள்