மதுரை திருமங்கலம் கவிதா சேலம் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் டெல்லி பார் கவுன்சிலில் 2020-ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம்
வழக்கறிஞராகப்பதிவு செய்ய விண்ணப்பித்த நிலையில் பதிவு செய்ய முயன்றதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் கிரிதா செந்தில் குமார் புகார் அளித்ததன் பேரில் இரு போலி வழக்கறிஞர்களை காவல்துறை இன்று கைது செய்தனர். வழக்கறிஞராக பதிவு செய்ய வேண்டுமானால், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேநேரம் சிலர் போலியான அங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழகங்களில் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் சேர்ந்து படித்தோ அல்லது படிக்காமலோ பட்டம் பெறுகிறார்கள். சிலர் போலியாகவும் சான்றிதழ்களை தந்து வழக்கறிஞராகப் பதிவு செய்ய முயற்சிக்கிறார்கள். அப்படி செய்பவர்கள் சான்றிதழ் மெய்த்தன்மை சோதனையில் சிக்கிய பின்னர் கைதாகிறார்கள்.
சென்னை பார் கவுன்சில் அலுவலகத்தில் போலி சான்றிதழால் சிக்கிய
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் சேலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும்
வழக்கறிஞராக பதிவு செய்ய வேண்டுமானால், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேநேரம் சிலர் போலியான பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படித்து பட்டம் பெறுகிறார்கள். சிலர் போலியாக சான்றிதழ்களை தந்து வழக்கறிஞராக பதிவு செய்ய முயற்சிக்கிறார்கள் அப்படி செய்பவர்கள் சான்றிதழ் சோதனையில் சிக்கி கைதாகிறார்கள்.
சென்னை மாநகர காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "ஜூன் மாதம் 13 ஆம் தேதி நேற்று சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் (B-4 ), தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் செயலாளர் கிரிதா செந்தில் குமார் புகார் அளித்ததில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கவிதா சேலத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இருவரும் டெல்லி பார்கவுன்சிலில் 2020-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்ததை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு மாற்றுவதற்கு கடந்த 28.04.2022 ஆம் தேதியில் இந்திய பார்கவுன்சிலில் விண்ணப்பம் செய்திருந்தனர்.இந்திய பார்கவுன்சில் மேற்படி நபர்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் பதிவு செய்வதற்கு ஆட்சேபனை குறித்து கடிதம் மூலம் கேட்டதன் பேரில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் அலுவலர்கள் மேற்படி விண்ணப்பதாரர்கள் புதுடெல்லியில் உள்ள GLOCAL பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு முடித்ததாக சமர்பித்த ஆவணங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிய கடிதம் மூலம் பெற்ற அறிக்கையின் படி இருவரின் கல்விச் சான்றிதழ்கள் போலியானது என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே பார்வுகவுன்சில் அலுவலகத்துக்கு போலி ஆவணங்களுடன் வந்திருந்த கவிதா, மற்றும் செந்தில்குமார் இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின்பேரில் சென்னை உயர் நீதிமன்றக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.தனிப்படை காவல்துறை தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கவிதா (வயது42) மற்றும் சேலம் கிருஷ்ணமூர்த்தி (வயது 57) ஆகியோரை வெள்ளிக்கிழமை பார்கவுன்சில் அலுவலகத்தில் ஆஜராக வந்த போது கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 டெல்லி பார்கவுன்சில் அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட இருவரும் இன்று ஜூன் 14 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்" காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்