அருள்மிகு சிங்கமுத்து ஐயனார் ஆலயம் அருள்மிகு கல்லடியான் அருள்மிகு கருப்பர் துணை கொண்டு
புதுக்கோட்டை , அடப்பன்குளக்கரை, புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த அருள்மிகு சிங்கமுத்து ஐயனார் கோவில்
புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா
ஸ்வஸ்திஸ்ரீ நிகழும் ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி 02.07.2025 புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திர நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபயோக நன்னாளில் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில் புதுக்கோட்டை சமஸ்தானம் ஸ்ரீ விஜயரகுநாதத் தொண்டைமான் துவங்கி பிரகதாம்பாள் தாஸ் இராஜா ராஜகோபாலத் தொண்டைமான் 1948 ஆம் ஆண்டு வரை செங்கோல் ஆட்சி செலுத்தி வாழ்ந்த புதுக்கோட்டை நகர், அடப்பன்குளக்கரையில் அமைந்திருக்கும் ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அதுசமயம் பக்தகோடிகளும் பொதுமக்களும், சான்றோர்களும் கலந்துகொண்டு ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் அருள்பெற வேண்டுகிறோம்
ஆனி 15 ஆம் நாள் (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.00 முதல் 10.00 க்குள் மாலை மணி 4.00 முதல் 6.10 க்குள்
மாலை மணி 6.10 முதல் 8.30 க்குள்
யாகசாலை நிகழ்ச்சி விபரம்
தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், புண்யாகவாசணம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாஹுதி,
வாஸ்து சாந்தி, திக் பந்தனம், மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், ஆச்சாரியார் ரக்ஷாபந்தனம், எஜமான ரக்ஷாபந்தனம்
கடஸ்தாபனம், கலாகர்ஷணம், கடம் யாகசாலை பிரவேசம்,
முதற்கால யாக பூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி,
சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை.
காலை மணி 8.00 11.00
சந்தியா வந்தனம், பாபனாபிஷேகம், இரண்டாம் கால யாகபூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை
|மூன்றாம் கால யாக பூஜை, திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை.
காலை மணி 8.00 முதல் 11.30 க்குள் முதல் 8.30 க்குள்
நான்காம் கால யாகபூஜை, சந்தியா வந்தனம், பாபனாபிஷேகம், திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை
ஆனி 16ஆம் நாள் (30.06.2025) திங்கட்கிழமை
மாலை மணி 5.00
ஆனி 17ஆம் நாள் (01.07.2025) செவ்வாய்கிழமை
மாலை மணி 5.00 முதல் 8.30 க்குள்
ஆனி 18ஆம் நாள் (02.07.2025) புதன்கிழமை
காலை 6.00 மணி
காலை 7.00 மணி
கலை 7.30 மணி
காலை 9.15 மணி
ஐந்தாம் கால யாகபூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி,
சதுர்வேதம், ஆசீர்வாதம், தீபாராதனை
மண்டப சாந்தி, பிம்ப சுத்தி, சுவாமிக்கு ரக்ஷாபந்தனம்
லெட்சுமி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, நாடி சந்தானம்
ஆறாம் கால யாகபூஜை, திரவியா ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை
கடம் புறப்பாடு
காலை 9.30 மணி மஹா கும்பாபிஷேகம் தொடர்ந்து மஹா அபிஷேகம்
கும்பாபிஷேக ஸர்வ ஸாதகம் : சிவ ஸ்ரீ S.சுவாமிநாத பண்டிதர் கோவனூர். கோவில் பூசாரிகள் : குசலாக்குடி ஐந்துகரை வேளார்கள்
புதுக்கோட்டை நகர் வாழும் குல தெய்வ வழிபாட்டு குடும்பத்தினர்.
ஸ்தபதி: K.மாரிமுத்து, A.செட்டிப்பட்டி, ராயவரம் யாகசாலை வேள்வி பந்தல் அமைப்பு : C.வெள்ளைச்சாமி, மச்சுவாடி
ஒலி, ஒளி அமைப்பு : ரேவதி சவுண்ட் சர்வீஸ், புதுக்கோட்டை தவில் நாதஸ்வர மங்கள இசை : S.மணிமாறன் குழுவினர், திருக்கோகர்ணம்.
அன்று காலை 10.30 மணியளவில் அன்னதானம் நடைபெறும்.
இரவு 7.00 மணிக்கு வாணவேடிக்கை நடைபெறும்.
அன்று இரவு 8.00 மணியளவில் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும். என விழாக்குழுவினர் தகவல்,
'ஆனைமுகன் ஆறுமுகன் அம்பலன் ஞானகுருவானியை யுன்னைடு பாரந்திரு மகனைக் காடரங்காம் பதுவரன் பதியிற்றென்பார் காரருங் களனி எல்லாங் கண்ணலொடு செந் நெல்மிகு கபிளைநாட்டில் சீராரும் வேட்கோவர் குலத்துடையார் புண்ணியத்தில் சிறத்தைமிக்கார் ஆயவர் தம்மூர்க்கு தேன்பார் அடப்பன் குளக்கரையில் அமைதியாக மேய உயர்சிங்கமுத்து அய்யனார் அர்ச்சுனன் அவதாரமாய் அய்யாவைக் கண்டு தெரிசித்திடவே பலநல மடைந்தே வாழ்வார் சிங்கமுத்து ஐயனைக் காண்". ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் திருக்கோவில் திருப்பணியில் 01.06.2025 வைகாசி 18 ஆம் நாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் ஆலயத்தில் குடமுழுக்கு யாக வேள்வி கால்கோள் விழா நடைபெற்றது.
அந்த நிகழ்வின் போது குலதெய்வ குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள், பூஜைகளை செய்யும் குலாளர் பொதுமக்கள் கலந்து கொண்ட அய்யனின் அருள் பெற்ற நிகழ்வு
ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் அறக்கட்டளை மற்றும் விழா குழுவினர் "ஓம் ஹரிஹர புத்திராய, புத்திர லாபாய சத்துரு விநாசகனாய மத கஜ வாகனாய பூத நாதாய ஐயனார் சுவாமியே நமஹ"
கருத்துகள்