திருப்பூரில் பதவிப் போட்டி முன்பகை ஹிந்து முன்னணி நபர் இன்று அதிகாலை ஓடிய நிலையில் விரட்டிப் படுகொலை.
பதவி இழந்த முன்னாள் ஹிந்து முன்னணி நபர் இந்தக்கொலையை செய்திருப்பது காவல்துறை முதல்நிலை விசாரணையில் தெரியவந்தது. திருப்பூர் குமரானந்தபுரம் காமராஜர் வீதியில் வசித்தவர் பாலமுருகன் (வயது 30). இவர் ஹிந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் (வடக்குப் பகுதி) வழக்கறிஞர் பிரிவின் ஒன்றியத் தலைவரக உள்ள நிலையில், நேற்றிரவு 12 மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் சென்ற பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை.
இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பாதது குறித்து குடும்பத்தினருக்குத் தெரியவரவே, இன்று அதிகாலையில் அவரைத் தேடிச் சென்றபோது பாலமுருகன் வசித்து வந்தார். காமராஜர் வீதியில், அவர் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
தாங்கள் வசித்து வந்த வீதியிலேயே பாலமுருகன் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர். சம்பவ நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போது, அதிகாலை சுமார் 4 மணியளவில், 3 பேர் அங்கு நின்று கொண்டிருந்த பாலமுருகனை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது காணொளிக் காட்சி மூலம் விபரம் தெரியவந்தது. அதிகாலை கொலை நடந்த நிலையில் இரவு முழுவதும் பால முருகன் எங்கு சென்றிருந்தார்? என்பது போன்ற பல கோணங்களில் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் திருப்பூர் மாநகரக் காவல் (வடக்கு) துணை ஆணையர் பிரவின் கௌதம் ஐபிஎஸ், வடக்கு காவல் உதவி ஆணையர் வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் இச்சம்பவம் குறித்த விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநகரின் பல்வேறு இடங்களில் விசாரித்தது. கொலையின் போது உடனிருந்த நபர்கள் 3 பேரிடம் முதற்கட்டமாக விசாரித்து, தனிப்படை அமைத்து விசாரிக்கத் துவங்கினர். காவல்துறை தகவல் கூறும்போது, “ஹிந்து முன்னணியில் ஏற்கனவே பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட குமாரனந்தபுரத்தைச் சேர்ந்த சுமன் (வயது 34) மற்றும் தற்போதைய பொறுப்பாளர் பாலமுருகனுக்கிடையே பொறுப்பு வகிப்பது தொடர்பாக முன்பகை எழுந்ததில் ஆத்திரத்தில் இருந்த சுமன், பாலமுருகனை கொலை செய்ய திட்டமிட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததையடுத்து தனிப்படை காவல்துறை சுமனை கேரளா மாநிலம் பாலக்காட்டில் வைத்து பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட நரசிம்ம பிரவின் (வயது 29) அவரைத் தேடி வருகிறோம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்