பெங்களூர் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மூலம் வெற்றி பெற்று முதல் முறையாக
கோப்பையை கைப்பற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணியினருக்கு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவைக் காண ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்ட காரணமாக லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் உள்ஞ 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர் இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூரு மாவட்ட ஆட்சியர் ஜெகதீஷ் நியமிக்கப்பட்டார்.மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதன்பேரில் பெங்களூர் நகர காவல்துறை ஆணையர் தயானந்த், மத்திய மண்டல துணை காவல்துறை ஆணையர் சேகர், உதவி காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணா, கப்பன்பார்க் காவல்துறை ஆய்வாளர் கிரீஷ் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அலுவலர் விகாஸ் குமார், தன் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யக்கோரி
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்துள்ள மனுவில், விசாரணை முறைகேடாக நடைபெற்றதாகவும், தன்னிடம் எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விகாஸ் குமார் தெரிவித்துள்ளார்.எனவே, தன் மீதான நடவடிக்கையை ரத்து செய்து, மீண்டும் தன்னை பணியில் அமர்த்த வேண்டும் என விகாஸ் குமார் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். விகாஸ் குமாரின் மனு மீது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் விரைவில் விசாரணை நடத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்