திருச்சிராப்பள்ளி முக்கொம்பு அருகில் ஜீயே புரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆராவமுத தேவசேனா உயிரிழந்தார்
திருச்சிராப்பள்ளிகுளித்தலை சாலையில் முக்கொம்பு அருகில் ஜீயேபுரத்தில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேரூந்தைக் கடந்து சென்ற போது பொக்கலினும் அரசு ஜூப்பும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் (RDO) ஆராவமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். அரசு ஜீப் ஓட்டுனர் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் உயிரிழந்த ஆர்.டி.ஓ., ஆராவமுத தேவசேனா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.ஓட்டுனர் பிரபாகரனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து ஜீயபுரம்ந காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் துவங்கி பெட்டவாய்த்தலை வரை அதிக விபத்துகள் நடக்கும் பகுதியாக 'பிளாக் ஸ்பாட்' என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிவேகம் மற்றும் அஜாக்கிரதை காரணமாக விபத்துகளும், உயிரிழப்புகளும் இச்சாலையில் தொடர்கதையாக உள்ளன. தற்போதைய விபத்தை பொறுத்தவரை சாலையோரம் பணிகள் செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்காத காரணத்தினால் பெண் அரசு அலுவலரின் உயிர் பறிபோனதாக குற்றம்சாட்டப்படுகிறது மதுரையைச் சேர்ந்த ஆரமுத தேவசேனாவிற்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் கணவர், புதுக்கோட்டையில் அரசுத்துறை அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இவரின் பணிக்காலம் பெரும்பாலும் புதுக்கோட்டை மாவட்டத்தையே சார்ந்திருந்தது. முன்னர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நிலமெடுப்பு பிரிவில் பணியாற்றியவர். தற்போது முசிறி ஆர்டிஓவாக பொறுப்பேற்று ஓராண்டுகள் மட்டுமே ஆகின்றன. எவ்வித பிரச்சினைகளிலும் சிக்காதவர், அனைத்து தரப்பினரிடையே நற்பெயரெடுத்தவராவார். புதுக்கோட்டை, திருமயம், இலுப்பூர் தாலுகாவில் வருவாய் வட்டாட்சியராகவும்,பொன்னமராவதி மண்டலத் துணை வட்டாட்சியர் ஆகவும் பணிபுரிந்தவர் தற்போது முசிரி வருவாய் கோட்டாட்சியராக இருந்த ஆரமுது தேவசேனா ஆனால் திருமயம் பகுதி அரசியல் தலையீடு காரணமாக ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டினார் அது அவரது மயமாக்கல் கூட இருந்திருக்கலாம் என்பதே
கருத்துகள்